
அரச உணர்வு நம்மை இயக்கக் கூடாது… ஞானிகள் உணர்வே நம்மை இயக்க வேண்டும்
அரசர்களைத் தழுவிய நிலைகள் தான் காவியப்
படைப்புகள் வந்தது. அதன் வழியில் தான் உலக மக்கள் அனைவரும்
வாழ்ந்து வந்திருக்கின்றோம்.
1.மகரிஷிகள் ஞானிகள் கொடுத்த தத்துவங்களை
2.அரசன் தனக்குச் சாதகப்படுத்திக்
கொண்டான்.
இன்று உலகிலே எந்த அரச சபைக்குச் சென்றாலும் அரசனைப் புகழ் பாடும் புலவர்களுக்குத்
தான் மதிப்பு. அரசன் செயலைச் சிறிது
குறை கூறினாலும் அவன் சிரசு இல்லை.
தர்மத்தையும் நியாயத்தையும் அந்த அரசனைத் தழுவிய நிலைகள்
கொண்டுதான் புலமைகள் பாடிப் பொருள்களைத் தேடினார்கள். புலமை அவனுக்கு உதவியதே தவிர அரசனைக்
காக்க உதவியதே தவிர மக்களுக்கு அது உதவவில்லை.
இந்த அடிப்படையிலே தான் சிற்றரசர்கள் பேரரசர்கள் என்ற
நிலையில் காவியங்களைப் பார்க்கும் பொழுது இந்த நிலை.
சோழ மன்னனை எடுத்துக் கொண்டால் “நீதிப்படி அவன் நடந்தான்…” என்று காட்டுவார்கள். தன் மகனே என்றாலும் தன் சொல்லுக்குக்
கட்டுப்படவில்லை என்றால் “தன் புகழுக்காக”
1.அவன் தவறு செய்தானா…? இல்லையா…? என்று சிந்திப்பதற்கு இல்லாதபடி
2.தன் மகனையே தேரை ஓட்டிக் கொன்றான் என்று நீதிகள்
சொல்லப்படுகின்றது.
அரசனுடைய மகன் தேரை ஓட்டிச் செல்கின்றான். ஒரு கன்று தவறிப் போய் ஊடே
வந்து விடுகின்றது… அடிபட்டு இறந்தது. மனிதனாக
இருக்கின்றாய்… மற்ற உயிரினத்தை நீ கொன்றாய் என்று நீதி
சொல்லப்படும் பொழுது அவனைக் கொன்று விடுகின்றான்.
ஆனால் பாதையில் புழுவோ பூச்சியோ மற்றவைகளோ வந்தால் அதன் மீது தேர் போகாதா…?
அரசன் என்ற நிலையில் இருந்தாலும் தன் மகனையே அதே போன்று தேரை ஓட்டச் செய்து அவனைக் கொன்று நீதியை நிலை நாட்டினான்
என்று பெருமை பேசுகிறார்கள்.
இதே நீதி கொண்டவர்கள் மாற்று அரசனிடம் என்ன செய்கிறார்கள்…?
இவர்கள் செல்லும் பொழுது அவருடைய மகளையோ அவன் விரும்பிய
இடத்தையோ கேட்டு அனுப்புகின்றான். இவனை மதித்து அதைத் தருகிறேன் என்று
சொன்னால் அவனை மெச்சி மகிழ்கின்றான்.
இல்லையென்றால் பழி தீர்க்கும் உணர்வு கொண்டு
1.இரு நான் உன்னை அழிக்கிறேன்… என்ற நீதிகள்
தான் அங்கே பேசுகின்றது. ஆக… அரசினுடைய நீதி எது…?
2.நான் யாரிடம் எதைக் கேட்டாலும் மதிக்க வேண்டும்… மதிக்கவில்லை என்றால் போரிட்டு உன்னை
அடக்கி மதிக்கும்படிச் செய்வேன்.
இது தான் அன்றைய அரசு நீதி…!
இந்தப் போர் முறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அமெரிக்கா என்ன செய்கின்றது…?
அவன் அணு குண்டுகளைச் செய்யலாம். ஆனால் மற்றவர்கள் அவன் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால்
உன்னை அழித்து விடுவேன் என்று அவன் மிரட்டுவான்.
இன்று ஜனநாயகம் என்று இருந்தாலும் அதிலே தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிகளும் அதே அரசு நீதியைத் தான் கடைப்பிடிக்கின்றார்கள். எந்த அரசு இதைக் கடைப்பிடித்ததோ அதன் வழியாகத்
தான் ஆட்சி செய்கின்றார்கள்.
1.ஆக அரசர்களுடைய நீதி அவனைக் காக்கத் தான் வருகின்றதே தவிர
2.மக்களைக் காக்க என்று அல்ல.
அவனுடைய செயல் மாறிவிட்டால் தன் மக்களை.. தன்னை
விசுவாசிப்பவர்களை ஏவல் செய்து பலிகடாக்களாக ஆக்குகின்றார்கள்… தன் கௌரவத்தைக் காக்க.
மேலை நாடுகளில் எடுத்துக் கொண்டாலும் ஒருவனுக்கு எத்தனையோ மனைவி என்று வைத்துக்
கொள்கின்றார்கள். அதில் எந்த மனைவியின்
பக்கம் தன் சார்பு உள்ளதோ அந்த மைந்தன்
சொல்வது தான் நியாயம் என்று சொல்வார்கள்.
அதில் பிடிக்காத மனைவியின் மகன் என்று ஆகிவிட்டால் அவனைக் குற்றவாளியாக்கி அரச நீதியில் பொதுமக்கள் மத்தியில்
அவன் சிரசை வாங்குகின்றார்கள் முஸ்லீம்
நாடுகளில்.
இது என்னுடைய நீதி…!
1.எனது மகனாக இருந்தாலும் தன் மதத்திற்கும் கடவுளுக்கும்
அவன் துரோகம் செய்தான்.
2.எனது பிள்ளையாக இருந்தாலும் இந்தத் தவறை எவரும் செய்யக்கூடாது என்று மக்களுக்கு
உணர்த்தவே
3.மக்களுக்கு மத்தியில் நீதியை இப்படி நிலைநாட்டுகிறோம்
என்பார்கள்.
4.கடவுளின் ஆணைப்படித் தான் இதைச் செய்கிறேன் என்று அரசு நீதி இதைச் செய்கின்றது.
அரசனுக்குக் கீழ் குடிமக்கள் கட்டுப்பட வேண்டும்.
மாற்று அரசர்களும் இவனை மதிக்க வேண்டும். மதிக்கவில்லை என்றால் அவனை அடக்க வேண்டும்… என்ற
அதே நீதி தான் இன்று “மக்கள்
மத்தியிலும் செயல்பட்டுக் கொண்டுள்ளது…”
ஓரளவுக்கு வலுகொண்டவனாக இருக்கின்றேன். நான் கேட்ட உடனே நீ உதவி
செய்ய வேண்டும். உதவி செய்யவில்லை என்றால் என்ன தொல்லை
கொடுக்க வேண்டுமோ அதை நான் கொடுப்பேன்.
வழி வழியாக இவ்வாறு தான்… மனிதன் தன் உடல் இச்சைக்குத்
தான் அரசர் வழிகளில் வந்து கொண்டிருக்கின்றோமே தவிர ஞானிகள் காட்டிய வழி செல்லவில்லை.
ஏனென்றால்… ஞானிகள் காட்டிய அருள் வழியில் பார்த்தோம் என்றால் நாம் யாரும் தவறு
செய்யவில்லை. சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வே அவ்வாறு இயக்குகிறது.
அன்று அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வுகள்…
1.எதிர்பாராதது சந்தர்ப்பத்தால் ஒரு தவறினை
நாம் நுகர்ந்து விட்டால்
2.அதனால் உடலில் உருப்பெறும் தீமையான அணுக்களின் தன்மையை தனக்குள்
எதிரியாக்காதபடி
3.அந்தத் தவறு எனக்குள் இயக்காதபடி தவறை அழித்த ஞானியின் உணர்வைத் தனக்குள் புகுத்தி
4.தவறின் செயலாக்கங்களை நீக்குதல்
வேண்டும் என்பதுதான் விநாயகர் தத்துவம்.
மனிதனான பின் இந்த வாழ்க்கையில் வந்த தீமைகளை அகற்றி உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக
மாற்றி விண் சென்றவன் மகரிஷி. ஆறாவது நிலையை ஏழாவது நிலையாக ஒளியாகப் பெற்றவன்
சப்தரிஷி.
அந்த நிலையைத் தான் நாம் அனைவரும் அடைய வேண்டும்…!