ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 30, 2024

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்

நம் சுவாசம் உயர்ந்த நிலை பெற வேண்டும்… நம் சுவாசத்திற்குத்தான் மோட்சம் வேண்டும்


ந்த உடலில் சிறிது காலம் தான் வாழ்கின்றோம். அதற்குள் மனதை எப்படி ஒன்றாக்க வேண்டும்…? என்ற நிலையை ஞானிகள் காட்டுகின்றார்கள். நம்முடைய எண்ணங்களை ஒன்றாக்க வேண்டும் கல்யாணராமா…!
 
ஆனால்… மனிதனின் உணர்வுகள்
1.அவன் அப்படிச் செய்கின்றான் இவன் இப்படிச் செய்கின்றான் என்ற நிலைகளை
2.“தான்… நான்…” என்று நான் செய்வேன் நான் செய்து கொண்டிருக்கின்றேன் என்னால்தான் முடியும்…!
3.”நான் இதை அனைத்தும் செய்தேன் என்று பலருக்குப் பல உபகாரங்கள் செய்வார்கள்.
 
பல உபகாரம் செய்தவருடைய உணர்வுகள் நான்” என்ற இந்த உணர்வு வரும் பொழுது கௌரவராகின்றது. கௌரவர் என்று செய்த நிலைகள் நான் அன்றைக்குச் செய்தேன் பார் ன்று என்னை மதிக்கின்றானா…? என்று இந்த கௌரவப் போர் வருகின்றது.
 
தான் எண்ணியபடி செய்யவில்லை என்றால் உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது
1.அவனைப் பார்த்தவுடன் குருக்ஷேத்திரப் போர்
2.அதை மீறி நம் உடலுக்குள் சென்றால் கௌரவர்களுக்கும் பஞ்ச பாண்டவர்களுக்கும் போர்.
 
புறிவு ஐந்து உள்ளுக்குள் சென்ற பின் போராகின்றது போர் என்று உடலில் வரப்படும் பொழுது நமக்குள் இருக்கும் பல அணுக்கள் மகாபாரதப் போராக மாறுகின்றது. உடலுக்குள் கலக்கமும் பல நிலைகளும் மற்றதும் ரத்தத்தில் நடக்கப்படும் போது மகா போராக நடக்கின்றது
 
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து மக்களுடைய உணர்வுகளும் நாம் எடுத்துக் கொண்டுள்ளோம். ஒவ்வொரு விதமான வெறுப்பு ணர்வுகளையும் எடுத்துக் கொண்டுள்ளோம்.
 
1.நல்லது என்று எண்ணப்படும் பொழுது கௌரவர்கள் அதை உள்ளே விடுவதில்லை.
2.இதைப் போன்ற கௌரவப் போர்கள் எப்படி நடந்து கொண்டுள்ளது…?
3.வீட்டில் பையன் சொல்கிறான் என்றால் பையன் சொல்வதை நான் கேட்பதா…?
4.மனைவி நல்லது சொன்னால் போதும் மனைவி சொல்வதை எல்லாம் கேட்பதா.
 
அதே போல மனைவி தவறு செய்தாலும் தப்பு என்று அதை ஏற்றுக் கொண்டால் திருப்பி நம்மைக் கணவர் பேசுவார்… திட்டுவார்” என்ற கௌரவத்தில் மறைக்கவும் செய்வார்கள்.
 
குழந்தைகள் தவறு செய்தால் நான் நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காக நான் தவறு செய்யவே இல்லை” என்பார்கள்.
1.ஆக… தவறை மறுக்கப்படும் போது என்ன நடக்கின்றது…? கௌரவப் பிரச்சினை வருகிறது.
2.குற்றவாளி என்று ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை மூடி மறைப்பதற்கு என்ன வேலையோ அதைத்தான் செய்வோம்.
 
இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் போது கடைசி முடிவு வேதனை என்ற உணர்வு வந்து மனிதனால் உருவாக்கி இருளை நீக்கி அந்த உணர்வுகள் அனைத்தும் மறைகின்றது… வேதனை என்ற போர் முறை வருகிறது.
 
நம்முடைய எண்ணங்கள் அடிக்கடி வேதனை என்று வரும் பொழுது கண்ணும் பார்வை இக்கின்றது.
1.வலுவான உணர்வு என்ற பீமனும் அழிகின்றது.
2.அர்ஜுனன் என்ற நிலைகள் குறி வைத்துத் தாக்கும் உணர்வுகளும் சோர்வடைகின்றது… தாக்க முடிவதில்லை.
 
மகாபாரதப் போரின் கடைசியில் கண்கள் (கண்ணன்) இழந்தபின் அர்ஜுனனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவனுக்கு முன்னாடியே மாடுகளைத் திருடிக் கொண்டு போகின்றார்கள்.
 
முதலிலே நான் என்ற நிலை இருந்தது. ஆனால் இப்பொழுது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று காவியத்தில் தெளிவாகக் காட்டுகின்றார்கள்
 
அதாவது அர்ஜுனன் ஆரம்பத்தில் எல்லாவற்றையும் செய்கின்றான் கண்ணின் உணர்வு கொண்டு தான் செயல்படுத்துகின்றான். கண்கள் இந்த பின் அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
 
இப்படி எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டாலும்
1.மோப்பத்தால் (சுவாசம்) அறிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு வழிகாட்டியது.
2.தீமை நன்மை என்று என்னால் அறிய முடிந்தது
3.தீமையிலிருந்து  விடுபடும் உணர்வுகளை நான் எடுத்தேன் என்று தர்மனைச் சொல்கின்றார்கள்.
 
அவன் யாருக்கு மோட்சம் கேட்கின்றான்…?
 
தன் நாய்க்கு மோட்சத்தைக் கொடு…! என்று கேட்கின்றான்.
 
1.நாம் சுவாசித்த உணர்வின் தன்மை தான் நமக்கு வழிகாட்டியாக இருந்தது.
2.தீமையை நீக்கும் அந்த உணர்வு தான் வழிகாட்டியாக வந்தது
3.நான் நுகர்ந்த உணர்வின் தன்மை அதன் வழியே நான் ஒளியாகும் தன்மை வேண்டும் என்று
4.மகாபாரதத்தில் இவ்வளவு தெளிவாக கொடுத்துள்ளார் வியாசர்.
5.நம் சுவாசத்திற்குத் தான் உயர்ந்த நிலை பெற வேண்டும் அதற்குத்தான் மோட்சம் வேண்டும்.
 
இது பற்றி நாம் யாராவது சிந்திக்கின்றோமா…? நன்றாக யோசனை செய்து பாருங்கள். எவ்வளவு பெரிய பேருண்மையை நமக்குக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்…!

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்

தன் நிலை உணர்வும் பக்குவம் பெற்று விட்டால்… ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்


உயிரணு உதித்து உயிராத்மாவாய் ஆத்ம சக்தியை அவ்வுயிரணு சேமிக்கும் நிலையிலேயே உயிரணுவின் ஆரம்ப உறுப்பாய் இக்கவன நரம்பின் செயல்தான் முதலில் தாயின் வயிற்றில் உதிக்கும் உயிரணுவிற்குச் செயல் கருவியாய் ஆகிறது.
 
அது ஈர்க்கும் அமில குணமான ஆத்மா என்ற ஆவி அமிலம் திடப்பட்டு அதன் தொடர்ச்சியில் இருந்துதான் ஒவ்வோர் உறுப்புகளும் உருக்கொள்கின்றது.
 
மனித ஆத்மாவுக்குகந்த பன்னிரண்டு வகையான குண அமிலத்தையும் ஈர்க்கவல்ல சக்தியாய் இக்கவன நரம்பு ஆரம்பகட்டத்திலிருந்தே செயல் கொள்கின்றது.
 
சாதாரண மனித ஆத்மாக்கள் இதன் தொடர்ச்சி வட்டத்தில்
1.எக்குண அமில சக்தியை அதிகப்படி ஈர்த்துப் பழக்கப்படுத்தி வாழ்ந்தனவோ அதே தொடர் நிலையில் வாழ்நாள் முழுவதும் வாழ்கின்றன.
2.வாழ் நாள் முடிந்த பிறகும் ஆவி உலகிலும் மறு ஜென்மத்திலும் இதன் தொடரில் இருந்து மாறுபடுவதில்லை.
 
ஆனால் இப்பன்னிரண்டு வகையான அமில வட்டத்தில் வாழும் மனிதன் தன் நிலை உணர்ந்து சமநிலை பெற்று இன்று நாங்கள் உணர்த்தும் இந்த ஞான மார்க்கத்தின் தொடர் நிலை எய்துங்கால்
1.இப்பன்னிரண்டு வகையான குண அமிலத்திற்கும் அப்பாற்பட்ட உயர்ந்த குண அமிலமான ஞான அமிலத்தை ஈர்க்கும் பக்குவம் பெற்று விட்டால்
2.அதன் தொடரினால் ஒவ்வோர் ஆத்மாவும் இவ்வுலகினில் நம்முள் கலந்துள்ள தீய சக்தி எது…? நற்சக்தி எது…? என்ற பாகுபாட்டை அறியலாம்.
 
ஒருவரைக் காணும் பொழுதே அவரது குணநிலையையும் அவர் எவ்வெண்ணமுடன் நம்மை நாடுகிறார்…? என்ற செயலையும் அவர் சுவாசமுடன் நம் சுவாசம் மோதும் நிலையிலேயே அவரது எண்ண நிலையை நாம் அறியலாம்.
 
மற்றும் இஞ்ஞானத் தொடர் வழி பெற்ற பின்
1.தெய்வத்துடன் ஐக்கியமாகி தெய்வமாகிப் பேரானந்தம் அடையலாம் என்ற ஞான மார்க்கம்
2.கொடிய விஷத்தன்மையுடைய நான் என்னும் அகந்தையில் செல்லும் மார்க்கம்.
3.நாம் பிறந்த பூமியில் நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களின் நிலையிலிருந்து ஒதுங்கி
4.தான் மட்டும் ஆண்டவனாகச் செல்லும் ஞான மார்க்கம் உகந்த மார்க்கமல்ல.
 
நம்முடன் கலந்துள்ள ஜீவாத்மாக்களுக்கு அன்பு என்ற கலசத்தை ஏற்றிக் கலந்து வாழ்ந்து நாம் பிறந்ததின் நலனை நம்முடன் கலந்துள்ளவர்களின் விரோதத்தையும் கோபத்தையும் சாடி வாழ்ந்து பொருளாசையில் தனக்கே சொந்தமாகப் பொருள் பெற்று நான் என்ற வட்டத்தில் வாழ்வதினால் நம் ஆத்மாவிற்கு என்ன பயன்…?
 
1.நாம் அறிந்த உண்மையின் ஞானத்தைப் பலருக்குப் போதித்து வாழும் இக்குறுகிய வாழ்நாட்களை அன்பின் அடிப்படையில் வாழும் பக்குவத்தையும்
2.நம் சக்தியைக் கொண்டு சேமிக்கும் பொருளினால் பல ஜீவன்களை வாழ வைக்கும் முறையுணர்ந்தும் செயல்படல் வேண்டும்.
 
நமக்கு உள்ள பொருளை எடுத்து அவர்களுக்கு தானமளித்துச் சோம்பேறி நிலைப்படுத்திடச் செப்பவில்லை. ஒவ்வொரு ஜீவ ஆத்மாவும் தனக்குகந்த செயல் புரிந்துதான் ஜீவிதம் கொள்ள வேண்டும். அதன் வழித் தொடருக்குப் பொருளிடுங்கள்.
 
அங்ககீனமுற்ற ஆத்மாக்களுக்கு ஜீவிதம் செய்திடப் பொருள் அளித்திடலாம். பட்சிகளோ மற்ற மிருக இனங்களோ தனக்கு வேண்டிய உணவை எப்படித் தானாகச் சம்பாதித்துக் கொள்கிறதோ அதைப் போன்ற பக்குவ ஆத்மாக்கள் மனித ஆத்மாவில் குறைவு.
 
பன்னிரண்டு வகையான குண அமிலத்தைப் பெற்ற மனித ஆத்மா தான் இன்று தன் நிலை உணராமல் வாழ்கின்றான். மிருக இனங்கள் மனிதனைக் காட்டிலும் இன்று உயர்ந்ததாகிவிட்டது.
 
நாம் நம் நிலையை (தன் நிலை) உணரும் பக்குவம் பெற்ற பிறகு ஞானத்தொடரின் ஒளியை ஈர்க்கம் குண நிலை கொண்ட பிறகு ஞானத்தின் வட்டத்தில் உள்ள பல ஒளி ஞானிகள் எல்லாம் நமக்கு உதவுவர்.
 
ஆரம்ப நாளிலேயே ஏன் அவர்கள் நம்மை ஏற்கவில்லை என்ற வினா எழும்பலாம்.
1.நம் ஆத்மாவைக் கொண்டு நாம் பெறும் சக்தியின் ஞான ஈர்ப்பில் நம் செயல் சென்ற பிறகுதான்
2.அச்செயலின் ஒளியும் நம்முடன் கலக்குமேயன்றி
3.அவர்கள் சக்தியை எல்லாம் தீய ஆத்மாக்களின் வட்டத்தில் செலுத்தி விட்டால் அவர்கள் பெற்ற சக்தியும் குறைந்து விடும்.
4.குறைந்துவிடும் என்பது மட்டுமல்ல வீண் விரயப்பட்டு விடும்.
 
இதனை உணர்ந்துதான் சில கால கட்டடங்களில் இத்தியான மார்க்கத்தை ஈர்த்து ஞானத்தின் வழிபெறும் ஆத்மாக்களின் நிலையுடன் இவ்வுலகிற்குத் தன் ஒளியை எப்படி எப்படியெல்லாம் பரப்பிடலாம் என்ற ஆர்வத் துடிப்புடன் இன்று நாம் எப்படிப் பல சித்தர்களின் நிலையை உணருகின்றோமோ அதைப் போன்று பல காலமாய் இச்செயல் நிலைகள் நடந்து வந்தன.
 
1.தானாக எந்த நிலையும் செயல் கொள்ளாது.
2.ஒளியுடன் நல் ஒளியாய்க் கலக்கத் தான் செய்யுமே ஒழிய வீண் விரயப்படுத்திச் செயல்படாது.

November 29, 2024

குரு பலம்

குரு பலம்


குருநாதர் காட்டிய வழியில்… காட்டுக்குள்ளும் மேட்டிற்குள்ளும் செல்லும் போது அங்கே நான் போகும் காரியங்களுக்குப் பயமில்லாதபடி குருநாதர் எத்தனையோ பாதுகாப்பு நிலைகளைச் செய்து கொடுப்பார்.
 
1.ஒவ்வொரு நிமிடத்திலும் ஏதாவது ஒலிகளை வைத்திருப்பார்.
2/ஏதாவது பயப்படும் நிலைகள் வந்தால் அந்த ஒலிகள் எழும்பும்… சப்தங்கள் வரும்.
3.அப்பொழுது குருநாதருடைய நினைவு வரும்… எனக்கு ஒரு பாதுகாப்பாக இருக்கும்.
 
இதைப் போல் உங்களுக்கும் சரி என்னிடம் பழகி இருக்கின்றீர்கள் அல்லவா. ஏதாவது ஒரு சிரமம் இருந்தால் முன்னாடி இந்த உணர்ச்சிகள் வரும்.
 
பஸ்ஸில் ஏறினால் விபத்தோ வேறு நிலைகளுக்குச் செல்லும் போது ஏதாவது சிக்கல் வந்தால்
1.இந்தத் தியானத்தைச் சீராகக் கடைபிடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை வரும்.
2.அந்த நேரத்தில் நீங்கள் பார்த்துச் சிந்தித்துச் செயல்பட்டால் ஆபத்துக்ளிலிருந்து தப்பலாம்.
 
ஒரு காரியத்திற்குச் செல்கிறீர்கள். அதிலே ஏதோ நஷ்டம் ஆகிறது என்றால் அந்த இடத்திலே மனதில் ஒரு விதமான படபடப்பு வரும்.
1.கொஞ்ச நேரம் அதை நிறுத்திவிட்டு ஆத்ம சுத்தி செய்து மகரிஷிகள் அருள் உணர்வை எடுத்துத் தூய்மைப்படுத்தி விட்டு
2/அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி எடுத்துக் கொண்டால் தப்பித்துக் கொள்ளலாம்.
3.சிந்தனை சீராகும் வழிகாட்டக்கூடிய நிலைகளுக்கு இது வரும்.
 
நான் செய்கிறேன் என்றால் நான் அல்ல…! குருநாதரின் உணர்வுகளை நான் எடுத்தேன் அதை வளர்த்தேன்…!தன் வழி தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் வந்தது.
 
1.குருநாதர் எனக்குள் பதித்த அந்த ஞான வித்தை உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
2.அதை நீங்கள் மறவாது எண்ணினீர்கள் என்றால்
3.காற்றிலிருந்து இழுத்து உங்கள் தீமைகளை போக்கக்கூடிய அரும்பெரும் சக்தியாக வரும்.
 
அதை நான் செய்கிறேன் என்றால் நான் எப்படிச் செய்ய முடியும்…? அருளைப் பெருக்குகின்றேன் அந்த வழியைத்தான் நான் உங்களுக்குக் காட்டுகின்றேன்.
 
இந்த வழியில் நீங்கள் தொடர்ந்து செய்யலாம்.

கவன ஈர்ப்பு நரம்பு

கவன ஈர்ப்பு நரம்பு


ஒவ்வொரு மனித ஆத்மாவிற்கும் அதன் சக்தியை ஈர்க்கும் நிலை எங்குள்ளது…?
 
மனித ஆத்மாவிற்கு
1.நம் நெற்றியின் மையத்தில் நாம் மஞ்சளும் குங்குமமும் தரித்து ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்த இடமாக எண்ணி
2.நம் நெற்றியில் திலகமோ திருநீறோ இட்டுக் கொள்கின்றோமே
3.அங்குதான் உள்ளது மனிதனை இயக்கும் ஜீவத் துடிப்புள்ள கவன நரம்பு.
4.மனிதனின் எண்ணத்தைச் செயல்படுத்தும் முக்கிய இடம் அக்கவன நரம்பு தான்.
5.இக்கவன நரம்பு செய்யும் வேலை செயல் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனின் உடல் நிலையும் எண்ண நிலையும் செயல் கொள்கின்றது.
 
இக்கவன நரம்பிலுள்ள ஈர்க்கும் பணிநாமெடுக்கும் சுவாசமுடன் நம் உயிர் சக்திக்கு ஈர்த்து அவ்வுயிர்த் துடிப்புடன் இக் கவன நரம்பு அதனை ஈர்த்து எந்த வழியில் இக்கவன நரம்பானது எதன் தொடர்பில் இவ்வுடலில் உள்ள உறுப்புகளுக்கு நம் மண்டையின் பின்பாகத்தில் உள்ள சிறு மூளையில் மோதச் செய்து அதன் வழித்தொடரில் இருந்து தான் உடல் உறுப்புகள் அனைத்திற்குமே செயல் நிலை ஏற்படுகின்றது.
 
1.இக்கவன நரம்பு பாதிக்கப்பட்டாலோ பின்னப்பட்டாலோ
2.உடல் உறுப்புகளின் நிலையும் சரி, நம் உடலைச் சுற்றியுள்ள ஆத்மாவானாலும் சரி அதன் வழித்தொடர் நிலையைச் செயல்படுத்திட முடியாது.
 
இதயத்தில்தான் இவ்வுடலுக்குகந்த நிலை உள்ளது என்று இவ்வளவு காலங்கள் நம்முடன் கலந்த ஆத்மாக்கள் நம்பி வந்தனர். இன்று மாற்று இதயம் இணைக்கப் பெற்று வாழும் மனிதர்கள் பெறப்பட்ட இதய எண்ணமுடனா வாழ்கின்றனர்…?
 
இதயத்தையே இயக்கும் செயல் கவன நரம்பின் மூலமாய் ஈர்க்கப் பெற்று சிறு மூளையின் வழித்தொடரினால் செயல்படுகின்றது.
 
இவ்வுடலில் உள்ள எந்தப் பாகத்தையும் இவர்களினால் மாற்று உறுப்புகளைப் பொருத்தி உயிர் வாழ வைத்திட முடிந்திடும். ஆனால்
1.இந்நெற்றியில் உள்ள கவன நரம்பிற்கு மேல் ஏற்படும் பின்னத்திலிருந்து பைத்தியம் பிடித்த ஆத்மாவையோ
2.கவன நரம்பில் அடிபட்டு அதனால் தன் நினைவிழந்த ஆத்மாவையோ சரிப்படுத்துவது முடியாத காரியம்.
 
நம் தலையில் உள்ள பெரு மூளையை மாற்றி அமைத்தாலும் கூட நம் எண்ணமும் மாறாது செயலும் அதே நிலையில் தான் இருந்திடும். ஆனால் இக் கவன நரம்போ இக்கவன நரம்பை ஈர்த்து சிறு மூளையின் உதவி கொண்டு இவ்வுடலையும் ஆத்மாவையும் வளர்க்கும் இதில் பின்னப்பட்டால் தன் நிலையில் எவ்வாத்மாவும் வாழ்ந்திட முடியாது…
 
உடலில் ஏற்படும் இரத்த அழுத்தத்தின் துரித நிலை அதிகப்பட்ட ஆத்மா இக் கவன நரம்பின் தொடர் கொண்ட சிறு மூளைக்குச் செல்லும் நிலையில் வெடித்து விட்டால்தான் நாம் இதய வலியினால் இறந்து விட்டதாகச் சொல்லுகின்றோம்.
 
இதயத்தில் உள்ள எந்த நரம்புகள் பாதிக்கப்பட்டாலும் இன்றைய அறிவியல் மருத்துவரால் குணப்படுத்திடலாம் இதயத்திற்கும் இரத்த அழுத்த விகிதத்திற்கும் தொடர்பு கொண்டது இக்கவன நரம்புகள் சிறுமூளையும் தான்.
 
முதலில் செப்பியப்படி இவ்வுடலில் உள்ள எந்த உறுப்பையும் இன்றைய அறிவியல் மருத்துவ ஞானத்தினால் செய்விக்கும் செயல் திறமையுண்டு.
1.இக்கவன நரம்பை மட்டும் படைக்கப் பெற்றவன்
2.இவ்வாத்ம சக்தியைத் தந்த ஆதிசத்தியின் செயல் சக்தியின் செயல்தான்…
 
இவ்வுடலில் எப்பாகங்கள் பின்னப்பட்டு ஆத்மா பிரிந்திருந்தால் கூட அவ்வுடலை ஏற்கச் சில சித்தர்கள் செயல்பட்டாலும் கவன நிரம்பும் சிறு மூளையும் பின்னப்படாமல் இருந்தால்தான் அவ்வுடலையும் சித்தர்கள் ஏற்பார்கள்.
 
ஈஸ்வரனுக்கு நெற்றிக்கண் இருந்ததாகவும் நெற்றிக்கண்ணை வைத்துத் தான் உலகை ஆண்டதாகவும் புராணம் கூறுகின்றது.
1.ஒவ்வோர் ஆத்மாவிற்குமே அந்நெற்றிக்கண் உண்டு.
2.நெற்றிக்கண்ணினால்தான் நம் விழிக்கு ஒளியைக் காணும் நிலை பெற முடிகின்றது.
 
கவன நரம்பைத் தான் நெற்றிக்கண்ணாகவும் ஞானக் கண்ணாகவும் நம் முன்னோர்கள் புராணக் காலங்களில் இதனை உணர்ந்து அதற்கு உருவம் தந்து சிவனாக்கிசிவனுக்கு நெற்றிக்கண்ணைப் படைத்து, அன்றைய கால மனித ஆத்மாக்கள் புரிந்திடும் பக்குவத்தை ஊட்டினார்கள்.
 
புராணக் கதைகளில் அன்றே பல நிலைகளை புரியாத நிலையில் சூட்சுமமாக ஆண்டவன் வாழ்ந்ததாகவும்அதற்குகந்த நிலைகளை உணர்த்த ஆண்டவனையே கதையின் நாயகனாக்கி பல நிலைகள் சித்தர்களினால் கதைப்படுத்தி வழங்கப்பட்டன.
 
இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் உள்ள உண்மை நிலைகள் மறைக்கப்படாமல் அதனை அவரவர்கள் எண்ணத்திற்குகந்து திரிக்கப்பட்டு சில நிலைகளை ஏற்றி இராவிட்டால் உண்மைக் காவியமான இராமாயணமும் மகாபாரதக் கதையும் உயர்ந்த பொக்கிஷமாய் அதிலுள்ள கருத்தாற்றலைக் கொண்டு பல நடைமுறை பொக்கிஷ நிலையெல்லாம் இன்று நாம் தவறவிட்டு இருக்கும் நிலையை எய்திருக்க வேண்டியதில்லை.
 
அன்று போதிக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷம் எல்லாம் இன்று கேலிக்குரிய நடைமுறைச் செயலுக்குப் பொருள் என்ற வியாபார நிலைக்கு வந்துவிட்டது.
 
1.ஒவ்வோர் ஆத்மாவுக்கும் உகந்த உயர்ந்த ஞான சக்தியையும் அதன் தொடர் சக்தியையும்
2.நமக்குள்ள இக்கவன நரம்பு நல்ல நிலையில் செயல்படுங்கால்
3.நம்மை நாம் இக்கவன நரம்பின் துணையினாலேயே ஒளியின் ஞானத்துடன் செல்லும் பேற்றை அடையலாம். 

November 28, 2024

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்

ஆத்ம சுத்தியின் முக்கியத்துவம்


உதாரணமாக நல்ல தண்ணீர் குழாய்கள் செல்லும் பாதைக்கு அருகில் சாக்கடைத் தண்ணீர் போகக்கூடிய குழாய்களும் இருந்தால் சந்தர்ப்பத்தால் அந்தக் குழாய்கள் துருப்பிடித்து ஓட்டையாகி விட்டால் நல்ல தண்ணீருக்குள் அந்தச் சாக்கடை தண்ணீரும் கலந்து தான் வரும்.
 
இதே போன்று நாம் ரோட்டிலோ மற்ற இடங்களுக்கோ செல்கிறோம் என்றால்
1.மற்றவர்கள் உணர்வுகளை நாம் கவர்ந்து தெரிந்து தான் செல்கிறோம்… அவரின் உணர்வை இழுத்துத் தான் உணரச் செய்கிறது.
2.நல்ல எண்ணத்தோடு நாம் வேலைக்குச் செல்கிறோம் என்றால் இந்த உணர்வுகளும் அதனுடன் கலந்து விடுகின்றது
 
நல்லதை நினைத்து அந்தக் காரியத்தை நடத்த வேண்டும் என்று தான் செல்கின்றோம். ஒருவன் தவறு செய்கின்றான் அதை உற்றுப் பார்க்கும் பொழுது நல்ல தண்ணீருக்குள் சாக்கடை நீர் கலந்தது போன்று ஆகிவிடுகிறது.
 
அப்பொழுது நம் காரியத்துக்குச் செல்லும் பொழுது
1.அவன் வெறுப்படைந்ததோ தீமை செய்ததோ கோபமாக இருந்ததோ நாம் வேடிக்கை பார்த்தது
2.நல்ல உணர்வுகளுடன் இது மோதிக் கலந்து விடுகின்றது.
 
இதன் வழி தான் நாம் நல்லதை எண்ணிப் போகின்றோம்.தனுடன் குறுக்கே இந்த உணர்வுகள் வந்து மோதி ஆன்மாவிலே கலந்தபின் ழுத்து உள்ளே கொண்டு போய் சேர்த்து விடுகிறது.
 
1.அவனுடைய கண்ணின் உணர்வும் நம்முடைய உணர்வுகளும் இழுக்கப்படும் பொழுது உயிரிலே படுகிறது
2.அந்த நல்ல காரியத்தைச் செய்வதை விடுத்து விட்டு இந்த உணர்வு குறுக்கே வந்தபின்
3.ஆபீசிலேயோ கடையிலே உட்கார்ந்து பின் இது கலந்தது முன்னாடி வந்து விடுகின்றது
4.அங்கே நம் நல்ல காரியங்களைத் தடை செய்யும் விதமாகி விடுகிறது.
 
அப்படி என்றால் அங்கே சென்று அமர்வதற்கு முன் நாம் என்ன செய்ய வேண்டும்…?
 
ஈஸ்வரா என்ற உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் ரத்த நாளங்களில் அது கலக்க வேண்டும் எங்கள் உடலில் இருக்கக்கூடிய ஜீவான்மாக்கள் பெற வேண்டும் என்று சுத்தப்படுத்த வேண்டும்.
 
நாம் பார்த்த அனைவரும் பொருளறிந்து செயல்படும் திறன் பெற வேண்டும் என்று நினைத்து அதை மாற்றிவிட வேண்டும். ஏனென்றால்
1.இங்கே அடைத்து விட்டு… அதை மாற்றி அமைத்து… உள்ளுக்குள் நல்ல உணர்வுகளைக் கொண்டு செல்ல வேண்டும்.
2.இரத்தத்திலே அந்த மகரிஷிகள் உணர்வுகள் கலந்த பின் அந்த உணர்வுகளை நல்லதாக்கச் செய்கின்றது
 
இதற்குத்தான் உங்களை அடிக்கடி ஆத்ம சுத்தி செய்யச் சொல்வது. நன்றாகத் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
உங்கள் வாழ்க்கையை உயர்த்துவதற்குத் தான் இதைக் கொடுக்கின்றேன் ஏனென்றால் நான் கஷ்டப்பட்டு… அனுபவப்பட்டுத் தெரிந்து கொண்டேன்
1.உங்களுக்குச் சக்தியும் கொடுக்கின்றேன்... அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2.நீங்கள் முயற்சி எடுங்கள் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்
3.உங்கள் எண்ணம் நிச்சயமாக அதை நிறைவேற்றும்.
4.நல்ல எண்ணங்களை உருவாக்க முடியும் நல்ல சிந்தனைகளை உருவாக்கி நல்ல நிலை பெற முடியும்.
 
ஆகவே எங்கு சென்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து உடல் முழுவதும் படரச் செய்து விட்டு என்னைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அந்த நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என் செயல் அனைத்தும் புனிதம் பெற வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் செயல்படுத்துங்கள்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எல்லாவற்றிலும் இப்படிப் போட்டு
2.இரத்தத்திலே கலந்து இணைத்துக் கொள்ள வேண்டும்.
 
இதைத்தான் பிரம்மாவைச் சிறைப் பிடித்தான் முருகன் என்று சொல்வது.
 
சந்தர்ப்பத்தில் தீமையைப் பார்த்தோம் உயிரிலே பட்டு மோதுகின்றது உயிர் உருவாக்குகின்றது. சிவனுக்கே ஓதினான் ஓம் என்ற பிரணவத்தை. உடலில் இருந்து வருவது தான் ஆறாவது அறிவு கார்த்திகேயா.
 
எத்தனையோ உடல்களைக் கடந்து இந்த உடலான சிவத்தை உருவாக்கியது உயிர். இதிலிருந்து வளர்ந்தது தான் கார்த்திகேயா.
 
ரோட்டில் போகும் போது வெறுப்பான காரியங்களைச் செய்வதைப் பார்த்தோம். உயிரிலே பட்ட பின் ஓ என்று பிரணவமாக்கி அவன் செய்த உணர்வை ரத்தத்தில் கலக்கச் செய்து விடுகின்றது.
 
நம் ஆறாவது அறிவு கொண்டு அதைத் தடுத்து நிறுத்தி அருள் ஒளியின் உணர்வு கொண்டு மாற்றி அமைக்க வேண்டும். அதுதான் கார்த்திகேயா…!
 
தீமை என்று வந்தபின் வலுவான உணர்வு கொண்டு துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் ஈஸ்வரா என்று இங்கே இடமறித்துத் தீமை உள்ளே போகாது தடைப்படுத்திவிட்டு அதை வெளியே தள்ளி விட்டு விடுகின்றோம்.
 
ரோட்டிலே பார்த்த அந்த உணர்வுகள் நமக்குள் ஜீவன் பெறாது அணுக்களாக உருவாகாதபடி இப்படி நாம் தடுத்துக் கொள்கின்றோம். ஆன்மாவைத் தூய்மைப்படுத்திக் கொள்கின்றோம்.
 
1.இப்படி ஒவ்வொரு நிலைகளிலும் நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டே வர முடியும்
2.அருள் உணர்வுகள் நமக்குள் பெருகிக்கொண்டே வரும்
3.இப்படித்தான் நாம் அதை வளர்த்து உயர்ந்த நிலைக்கு நாம் கொண்டு வர முடியும்.

பன்னிரெண்டு முக்கிய குணங்கள் இருந்தாலும் “அதிலே நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்”

பன்னிரெண்டு முக்கிய குணங்கள் இருந்தாலும் “அதிலே நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்”


பன்னிரண்டு வகையான குண அமிலங்களைச் சேமித்துப் பக்குவ நிலை பெற்ற பிறகுதான் மனித ஆத்மாக்களின் வளர்ச்சி நிலை இப்பூமியில் ஆதி காலத்தில் மனித உயிர் ஆத்மா தோன்றிய நாட்களில் வழி பெற்றது.
 
அதன் தொடர் நிலையில் இன்று வரை அக்குண அமிலமே வலுக்கொண்ட சக்திகளாய் ஒவ்வொரு வகையான குண அமிலமும் வலுப்பெற்று வழி வந்துள்ளது. இவை எந்நிலையில்…?
 
நம் நிலையில் அறிவியல் வளர்ச்சி நிலை முந்தைய காலத்தை விட இக்காலத்திற்குக் கூடி உள்ளது. எந்நிலை கொண்டு இது கூடிற்று…?
 
பன்னிரண்டு வகையான அமில குணம் என்கின்றோம்.
1.இவற்றில் சரி பாதி நல் அறிவை ஈர்க்கும் சக்திகளும்தீய சக்தியை உடைய குண நலன்களையும் கொண்டவைதான்.
2.அறிவுத் திறமையில் இரண்டு வகையிலுமே இப்பன்னிரண்டு வகையான அமில குணங்கள் இன்றைய கலியில் வலுப்பெற்றுத்தான் உள்ளன.
3.ஒரு மனிதனுக்கு வேண்டப்படும் குணாதிசயங்களைத்தான் இப்பன்னிரண்டு வகையான அமில சக்தி என்று உணர்த்தியுள்ளோம்.
 
இந்நிலையில் தான் எல்லா ஆத்மாக்களுமே உள்ளனவா…? என்ற வினாவும் எழும்பலாம்.
 
ஆதியில் மனித உயிரணுவாய்த் தோன்றப் பெறும் தருவாயில் மனிதக் கருவிற்கு வரும் அனைத்து ஆத்மாக்களுமே ஒன்றைப் போன்ற குணநிலையைக் கொண்ட அமில சக்தியை ஈர்க்கும் பக்குவத்தில் தான் இம்மனித ஆத்மா பிறவிக்கு வருகின்றது.
 
அதிலிருந்து தனக்களிக்கப்பட்ட சக்தியை எக்குண நிலை கொண்ட அமிலத்தை அவ்வாத்மா வளர்ச்சி நிலை (வலு) ஏற்படுத்திக் கொண்டதோ அதன் தொடரில் தான் அவ்வாத்மாவின் புத்தி எனப்படும் அறிவு நிலை ஒவ்வொரு பிறவியிலும் வெளிப்படுகின்றது.
 
ஆண்டவனால் ஒருவருக்கு அதிக அறிவுத்திறனும் குறைந்த அறிவும் படைக்கப்படவில்லை.
 
அவ்வாத்மாவே அதனுடைய எண்ணத்தை எவ்வமிலத்திற்கு முக்கியத்துவம் அளித்து வளர்க்கப் பழகிக் கொண்டதோ அதன் தொடர் சுற்றில்தான் அன்பு, பாசம், ஆசை, ஆனந்தம், பக்தி இப்படி ஒவ்வொரு குணநிலையும் சலிப்பு, கோபம், குரோதம், காமம், வெறி, வஞ்சனை இப்படிப்பட்ட நிலைகளைக் கொண்டுள்ளது.
 
எதன் தொடர் நிலையில் எண்ணச் சுற்றல் அதிகமாக ஈர்த்து வாழ்ந்து பழக்கப்பட்டோமோ அதன் குணப் பலனை வைத்து
1.அன்பானவன், பண்பானவன், நாணயஸ்தன், பக்திமான், தர்மவான் என்றும்,
2.சங்கடம் கொண்டவன், கோபக்காரன், குரோதக்காரன், நயவஞ்சகன், வெறி உணர்வு கொண்டவன், காமுகன் என்றும் நாமகரணம்
3.பிறரினால் பெறப்படவில்லை… அவ்வுடலின் வீரிய அமில குணத்தைக் கொண்டுதான் ஒவ்வோர் ஆத்மாவிற்கும் நாமகரணம் சூட்டப்படுகின்றது.
 
இம்மனித ஜென்மத்தில் பிறவி எடுக்கும் நாள் வரை ஒவ்வோர் ஆத்மாவிற்கும் இப்பன்னிரண்டு வகையான அமில குண வகைகள் உண்டு.
 
மனிதனாய் உள்ள நிலையிலேயே நாம் இது நாள் வரை எக்குண அமிலத்தை எந்த ஒன்று அதிகப்பட்டுச் செயல்பட்டு வாழ்ந்திருந்தாலும் நாம் வாழ்ந்திடும் காலத்திலேயே இப்பன்னிரண்டு வகையான அமிலத்தில் உள்ள ஆறு தீய குணங்களுக்கு எந்நிலையில் அதிகமாய் நம் எண்ணத்தை அதிகப்படுத்தி வளர்த்துக் கொண்டிருந்தாலும்
1.இவ்வாழும் பக்குவத்தில் நம்மை நாம் உணர்ந்து ஜெபம் என்ற இப்பன்னிரண்டு குணங்களையும் நாம் ஈர்க்க
2.நமக்குத் துணை வந்த நமக்கு மேல் நம் ஆத்மாண்டவனை
3.ஆத்மாண்டவன் என்பது நம் உயிராத்மாவைத் தான் அவ்வாத்மாவை
4.அவ்வாத்மாவுக்குள் உள்ள ஈசனின் சக்தியைக் கொண்டு நமக்குகந்த நல்ல குணங்களையுடைய
5.மறு பாதியில் உள்ள நற்குணங்களை ஈர்க்கும் பக்குவம் பெறல் வேண்டும்.

November 27, 2024

குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து

குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து


1.இயற்கையின் உண்மை நிலைகளைத் தெரிந்து கொள்வதற்குக் குருநாதர் எம்மை எத்தனையோ இம்சைப்படுத்தினார்.
2.ஒவ்வொன்றையும் தெரிந்து கொள்வதற்கு அவஸ்தைப்படுத்தினார்.
3.எப்படி எப்படியெல்லாம் உணர்வுகள் மாறுகின்றது உருவாகின்றது
4.சாதாரண மக்கள் எப்படிக் கஷ்டப்படுகின்றார்கள்…?
5.அந்த உயிர் எத்தனை நிலைகளைக் கடந்து வந்தது…?
6.அப்படி உருவாக்கிய உயிரை யாரும் மதிக்கவில்லையே உடலைத்தான் மதிக்கின்றார்கள்.
7.நாம் எண்ணுவதைத்தான் உயிர் உருவாக்குகின்றது. நாம் எண்ண வேண்டியது எது…?
8.இதை மக்களுக்கு நீ எடுத்துச் சொல் என்றார் குருநாதர்.
 
ஆண்டவனுக்கு நீ சேவை செய்கிறாய் என்றால் ஒவ்வொரு உடலையும் அந்த உயிர் ஆளுகின்றது அந்த ஆண்டவனுக்கு நீ என்ன செய்ய வேண்டும்…? அந்த உடல் அனைத்தும் நன்றாக இருக்க வேண்டும் என்று சொல்…!
 
நான் சொல்வதை இந்த அருள் உபதேசங்களை நீங்கள் நுகரப்படும் போது உங்கள் ஆண்டவனுக்கு இந்த உணர்வுகள் அபிஷேகமாக நடக்கின்றது.
 
கோவிலிலே பாலாபிஷேகம் செய்கின்றார்கள் என்றால் அந்த நல்ல தெய்வ  குணத்திற்குப் பாலாபிஷேகம் செய்கின்றார்கள்
 
அது போல உங்கள் நல்ல குணத்தைக் காக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அந்தப் பாலைப் போன்ற மனம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்
 
ஆனால் வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தால் நடக்கின்றது…?
 
வேதனையுடன் தான் அபிஷேகம் செய்வீர்கள் அப்போது வேதனை தான் முன்னாடி இருக்கும் அந்த நேரத்தில் நான் உங்களுக்குப் பாலாபிஷேகம் செய்தால் எப்படி இருக்கும்…? விஷத்தில் பாலை ஊற்றினால் அந்தப் பாலும் விஷமாகத்தான் மாறும்.
 
1.அது போல் நான் கொடுக்கும் வாக்கு பயனற்றதாகப் போய்விடும்.
2.நான் பல முறை உங்களுக்குச் சொல்லி இருக்கின்றேன்.
3.எம்முடைய உபதேசக் கருத்துக்களைப் பயனற்றதாக ஆக்கி விடாதீர்கள் என்று.
 
ஏனென்றால் குருநாதரிடம் சிரமப்பட்டுச் சம்பாதித்த சொத்து. அந்த வித்தை நீங்கள் காப்பாற்றிப் பழகுதல் வேண்டும்.
 
உங்கள் உயிரான ஈசனை நீங்கள் மதிக்க வேண்டும் அவனை மதித்து அந்த அருளைப் பெற்றால் இந்த உடலுக்குப் பின் பிறவியில்லா நிலை அடைகின்றீர்கள்.
 
உடலிலே உபாதைகள் வந்து உறுப்புகள் கேட்டு அதற்கு வேண்டிய ஆபரேஷனோ மற்றதை எல்லாம் செய்தாலும் கூட அடுத்து நாம் எங்கே செல்கின்றோம்…?
 
அந்த வேதனை ன்ற விஷத்திற்குத்தக்க அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடுகின்றது.
 
கார்த்திகேயா… தெரியச் செய்கிறது சேனாதிபதி பாதுகாக்கும் சக்தியையும் இந்த உயிர் கொடுத்தது. அதை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் இன்று மனிதன் நாளை எடுத்துக் கொண்டால் நுகர்ந்த வேதனை உணர்வுக்கொப்ப வேறொரு உருவை மாற்றி விடுகின்றது.
 
இது போன்று குருநாதர் பல நிலைகளையும் என் உடலிலே பாய்ச்சி…
1.கெட்டதை நுகரப்படும் பொழுது உன் உடலுக்குள் என்ன செய்கின்றது…? என்று பல மணி நேரம் காட்டினார்.
2.அவஸ்தைப்பட்டுத் தான் அறிய முடிந்தது.
3.அதை மீண்டும் எப்படிச் சரி செய்து கொண்டு வர வேண்டும் என்று அவர் சொன்ன நிலைகளைத் தெரிந்து
4.அதை நல்லதாக மாற்றி உங்களிடம் இப்பொழுது சொல்கின்றேன்.
 
ஆகவே மகரிஷிகளின்ருல் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் டர வேண்டும் எங்கள் உடல் நலம் பெற வேண்டும் சிந்தித்துச் செயல்படும் சக்தி பெற வேண்டும் என்று
1.நீங்கள் எண்ணி எடுத்தால்
2.நான் சொல்லக்கூடிய வாக்கு நிச்சயம் உங்களுக்குள் பயனுள்ளதாக வேலை செய்யும்.

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்

“மனித உருப் பெறவே” பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்


ஒவ்வோர் ஆத்மாவிற்கும் அதனதன் ஜீவ அமில குணங்கள் உண்டு. அக்குணத் தொடர்ச்சியில் எவ் அமிலத்தின் விகித நிலை கூடியுள்ளதோ அதன் சக்தித் தொடரில் அவ்வாத்மாவின் செயல் சென்றிட்டால் அவ்வாத்மாவின் ஒளி பிரகாசிக்கும்.
 
ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் பன்னிரண்டு வகையான அமில குணங்களுண்டு. இவ்வமில குணத்தை எதன் தொடரில் உயிரணு உதித்து உயிராத்மாவான மனித உடல் பெறுகின்றோமோ அதிலிருந்தே இப் பன்னிரண்டு வகையான குணங்களில் ஒன்றை ஒவ்வோர் ஆத்மாவும் அதன் ஈர்ப்பிலேயே வளர்ச்சியை ஈடுபடுத்தி இழுக்கின்றது.
 
1.ஒவ்வோர் ஆத்மாவுக்குள்ளும் இப் பன்னிரண்டு வகையான குண அமிலங்கள் இருந்தாலும்
2.ஏதாவது ஒன்றின் வளர்ச்சியின் வட்டத் தொடரில்தான் ஒவ்வோர் ஆத்மாவும் வளர்ந்து கொண்டே செல்கின்றதே ஒழிய
3.தனக்குள் உள்ள மற்றக் குண அமிலத்தை எண்ணுவதோ செயல்படுத்துவதோ இல்லை.
 
மனித ஆத்மாவாய் வரும் காலத்திலேயே இப் பன்னிரண்டு வகை குண அமில சக்தி பெற்ற பிறகு தான் மனிதனாகவே மனிதக் கருவிற்கு வர முடிகின்றது.
 
இயற்கையின் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வகை நிலை ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பொழுதைய செயற்கையிலேயே எப்படி ஒரு தாவரத்திற்கு அளிக்கும் எரு மற்றொரு தாவரம் ஏற்பதில்லையோ அதைப் போல் ஒவ்வோர் இன வளர்ச்சிக்கும் உயிரணுவிலிருந்து அவை ஈர்க்கும் குண வளர்ச்சியின் தொடர்படுத்தித்தான் ஒவ்வோர் இன வளர்ச்சியும் வளர்கின்றது.
 
இப் 12 வகை குண அமில வளர்ச்சி பெற்ற பிறகு தான் மனித உருப் பெறுகின்றது. இம்மனித உருவில் அக்குண வளர்ச்சியின் சக்தியை அதன் வழித் தொடரிலேயே செயல்படுத்தினால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு அதன் தொடர் நிலையினால் ஏழு ஜென்மங்கள் எடுக்கக்கூடிய அளவிற்கு மனித உருப்பெற்ற காலத்திலேயே சக்தி கூடி விடுகிறது. அதன் தொடரில் ஏழு ஜென்மம் எடுக்கக்கூடிய சக்தி ஆற்றல் உண்டு.
 
1.இச்சக்தியை உபயோகப்படுத்திச் செயல்படும் நல் ஆத்மாக்கள்
2.இவ் ஏழு ஜென்மத்திற்குள் இப் 12 வகையின் குண அமிலத்தை உரமாக்கிச் சூட்சுமம் கொண்டு
3.என்றென்றும் அழியாத வழித்தொடர் பெற்று விடுகின்றனர்.
 
இதில் சில ஆத்மாக்கள் இவ் ஏழு ஜென்மத்தின் வழித்தொடர் வந்து கரை சேராத நிலையில் உலக மாற்றத்தில் சிக்குண்டு மற்றொரு பிரளயத்தில் பல ஆயிரம் ஆண்டுகளின் சுழற்சி வட்டத்திற்குச் செல்கின்றது.
 
மனித ஆத்மா உடலுடனே மனித வளர்ச்சிக்கு அடுத்த வளர்ச்சியில் அதி விரைவில் மனித உடல் பெறும் பக்குவத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றது.
 
சில ஆத்மாக்களின் நிலையில் இவ் 7 ஜென்மத்திற்கு செல்வதற்குள்ளேயே தான் பெற்ற இப்பொக்கிஷ குண சக்தியை உணராதபடி பேராசைக்கும் வெறி உணர்விற்கும் காம இச்சைக்கும் உட்பட்டு அவ்ஆத்மா வெறி உணர்வு கொண்ட மிருக வட்டத்திற்குள் சென்று அதன் வழித் தொடர்ச்சியில் மிகவும் அல்லல்பட்டு அடுத்த சுழற்சி வட்டத்திலும் மனித இனம் பெற வேண்டிய இப் 12 வகையான குண அமிலம் பெறப் பல நாட்கள் சென்று விடுகின்றன.
 
இம்மனித ஆன்மாக்களுக்கு மனிதனாக வாழக்கூடிய குண அமிலத்தைப் பெற்ற சக்தியை உணராமல் தன்னைத்தானே சிதறவிட்டு வாழும் நிலையை உணர்ந்தீரா…?
 
இப் பல கோடி மண்டலங்கள் இருந்தாலும் எல்லா மண்டலத்திலும் மனித உருப்பெற்ற ஜீவன்கள் இல்லையல்லவா. மனித உருப் பெறவே பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.
 
பல கோடி வகையான ஜீவராசிகள் இருந்தாலும் மனிதனைப் போல் அறிவு வளர்ச்சியுற்ற செயல் திறன் மற்றவற்றிற்கு இல்லை. நாம் எதனை உணர்ந்தோம்…?
1.இன்று இருக்கும் நிலை நாளை இல்லை
2.நேற்று நடந்த நிலை இன்று கனவு தான்
3.இன்றைய நடைமுறை நாளைய கனவு என்பதையே மறந்து
4.நம்முள் ஏற்படும் இச்சைக்கெல்லாம் நம்மை நாமே அடிமைப்படுத்தி கால வெள்ளத்தை விரயம் செய்து
5.வீண் சஞ்சலமான வட்டத்திற்குள் நம்மைச் சிக்க வைத்து வாழும் நிலை தான் இன்று நாம் வாழ்ந்திடும் நிலை.
 
சில தாவரங்கள் எப்படி அதன் ஈர்ப்பின் தன்மையினால் வைரம் வாய்ந்த மரமாய் தன்னையே வளர்த்துக் கொண்டுள்ளனவோ இதைப் போல் நம் ஆத்மாவை வைரம் வாய்ந்த ஞான வட்டத்தின் சுழற்சியாக்கி…” அச்சழற்சியின் ஈர்ப்பு வட்டத்தில் வழித் தொடரில் செல்ல வேண்டும்.
 
அவ்வளர்ச்சியின் வட்டத்திற்குச் சென்று விட்டால் அதன் தொடரில் பல சக்தி நிலையை நாம் உணரலாம். அவ்உணர்வின் சக்தியை உண்மையாக்கித்
1.தன்னடக்கம் பெறும் பக்குவம் கொண்டு செயல்பட்டால்
2.அதன் தொடர்பில் அடையும் பேரானந்தம் உள்ளதே அவ் ஆனந்தத்தில் தான் அகிலமே கலந்துள்ளது.
 
இந்நிலையில் தான் பெற்ற நிலையைச் சிதறவிட்ட ஆன்மாக்களும் பல உண்டு. நான் என்ற நிலை ஏற்பட்டு பெற்ற சக்தியை நானாக்கிக் காட்டினால் அச்சக்தி நிலைத்திடுமா…?
 
ஞானம் பெறவே பல ஆண்டுகள் ஆகி விடுகின்றன. பல காலம் சேமித்த ஞான சக்தியையே நான் எந்த நிலையில் சிதறவிட்ட ஆத்மாக்கள் பலர் உள்ளனர் இன்று நம்முடனே.
 
சிதறவிட்ட பிறகு அவ்ஆத்மாக்கள் அதன் தொடர்ச்சியில் செல்ல முடியாமல் அதன் கீழ் நிலைக்குத்தான் திரும்பவும் சென்று விடுகின்றன.

November 26, 2024

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்

“சாமி தான் செய்து தருவார்” என்று எண்ணாதீர்கள்


என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என் தொழில் நலமாக இருக்க வேண்டும் என் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் அவர்கள் கல்வியில் ஞானம் பெற வேண்டும் என்று இந்த உணர்வுடனே எம்மிடம் ஆசி பெற வேண்டும்.
1.அப்படி நீங்கள் ஆசி வாங்கினால்
2.அவ்வழி நடக்கும் என்று நான் (ஞானகுரு) உணர்த்தும் போது அந்த அருள் வழி நிச்சயம் நடக்கும்.
 
அதை விடுத்து விட்டு சாமி தான் செய்து தருவார் என்று எண்ணாதீர்கள்.
 
1.ஞானகுரு சொன்ன கருத்துக்களை நாம் பெற்றோமென்றால்
2.ந்த உணர்வுகள் நமக்கு நல்வழி காட்டும் என்ற நிலைக்கு நீங்கள் வரவேண்டும்.
 
“சாமி எல்லாமே செய்து தருவார்” என்று மற்ற சாமியார்கள் பூசாரிகள் செய்வது போன்று இந்தச் சாமியும் செய்து செய்வார் என்று எண்ண வேண்டியதில்லை.
 
உங்களுக்குள் அருள் ஞான வித்தை ஊன்றுகின்றேன். அது உங்களுக்குள் ஓங்கி வளர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
 
காரணம் உங்கள் உயிர் கடவுள் உங்கள் உடல் ஒரு ஆலயம். ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். நீங்களும் அந்தப் புனிதம் பெற வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.
 
அதை விடுத்து விட்டு என் தொல்லை என்னை விட்டுப் போகவே மாட்டேன் என்கிறது எதிர்த்து வீட்டுக்காரன் இடைஞ்சல் செய்து கொண்டிருக்கின்றான் தொழில் இப்படி நசிந்து கொண்டே இருக்கின்றது குழந்தைகள் நன்றாகப் படிக்கவில்லையே என்று எண்ணினால்
1.என்னுடைய பிரார்த்தனையின் உணர்வுகள் உங்களுக்குள் எப்படி வந்து சேரும்…?
2.நீங்கள் எடுக்கும் உணர்வுகள் நான் பாய்ச்சும் உணர்வுகளை ரிமோட் செய்து குப்பைக்குப் போ என்று தள்ளிக் கொண்டே இருக்கும்.
 
ஆகவே யாம் கொடுக்கும் வாக்குகளை நீங்கள் சரியான முறையில் (யாம் சொல்லும் முறைப்படி) நீங்கள் எடுத்துக் கொண்டால்.
1.ஒரு அதிசயத்தக்க அற்புதமான நிலைகளைக் காணலாம்
2.நோய்களிலிருந்தும் தீமைகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுபடுவீர்கள்.
 
ஞானிகள் காட்டிய அருள் வழியில் உயர்ந்த சக்திகளைப் பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி உடலுக்குள் பகைமைகளை மாற்றி அருள் உணர்வுகளைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
 
உடலுக்குள் எண்ணத்தால் ஒன்று சேர்ந்து வாழும் கல்யாணராமா…! என்ற நிலையைத்தான் உங்களுக்குள் இப்பொழுது உபதேசித்து வருகின்றேன்.
 
இந்த உபதேசத்தின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்று ஏங்கி ந்தச் சுவாசம் எடுத்தாலே போதுமானது.
 
நண்பனாகப் பழகி பகைமை ஆகிவிட்டால் துரோகம் செய்தான் பாவி உருப்படுவானா…?” என்று அமெரிக்காவில் இருப்பவனை எண்ணினாலும் இந்த உணர்வுகள் இயக்கி அங்கே புரையோடுகின்றது.
 
தைப் போன்று
1.அந்த மகரிஷிகளின் அருளைப் பெற வேண்டும் என்று தபோவன குருபீடத்தை எண்ணி நீங்கள் எடுத்தாலே போதுமானது.
2.எல்லோருக்கும் அந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் வெளிப்படுத்திய மூச்சலைகள்
3.உங்களுக்குள் எளிதில் கவரப்பட்டு உங்கள் சிரமங்களைப் போக்க முடியும்.
 
இது உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.
 
நீங்கள் வெளிவிட்ட மூச்சலைகள் எதுவும் விரயமாவதில்லை. அனைவரும் ஒன்று சேர்த்த உணர்வுகள் வரப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று குரு பீடத்தில் நினைவைச் செலுத்தினால்
2.நீங்கள் ஒவ்வொருவரும் இட்ட மூச்சலைகள் அனைத்தும் உங்களுக்குக் கிடைத்து பலருடைய உணர்வுகள் உறுதுணையாக வரும்
3.பகைமைகளை அகற்றச் செய்யும் உங்களை நலம் பெறச் செய்யும்.
 
ஆகவே… நோயைப் பற்றி நீங்கள் எண்ண வேண்டியதில்லை அருளைப் பெற வேண்டும் இருளை நீக்க வேண்டும். தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும். மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்தாலே போதுமானது. இதை எல்லாம் நீங்கள் கடைப்பிடியுங்கள்.
 
ருந்த இடத்திலிருந்து நீங்கள் தபோவன குரு பீடத்தை எண்ணி உயர்ந்த சக்திகளைப் பெற முடியும். உங்கள் உடலிலே அந்த அருள் உணர்வுகள் பாயும்.
 
ஏனென்றால் என்னுடைய பிரார்த்தனையே
1.நீங்கள் தெளிந்த மனம் பெற வேண்டும் தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும்
2.மகரிஷிகளின்ருள் வட்டத்தில் வாழ வேண்டும்
3.உங்கள் வாழ்க்கை நலமும் வளமும் பெற வேண்டும் என்று தான் என்னுடைய ஆசைகள் எல்லாம்.
 
உங்கள் உயிர் கடவுள். அவன் வீற்றிருக்கும் ஆலயம் பரிசுத்தப்பட வேண்டும் என்று தான் விரும்புகின்றேன் இவ்வாறு நான் பிரார்த்தனை செய்யும்பொழுது உங்கள் நினைவுகளை வேறு பக்கம் செலுத்திக் கதவைப் பூட்டிவிட்டால் என்ன செய்வது…?
1.உங்கள் வீட்டை நான் சுத்தப்படுத்த வேண்டும் என்று வருகின்றேன்
2.கதவை மூடிக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்…?
 
அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அந்த உயர்ந்த நிலை நிச்சயம் ஏற்படும். அருளைப் பெருக்கி இருளைப் போக்கி இனி பிறவியில்லா நிலை அடைவதே குருநாதர் காட்டிய அருள் வழியின் நோக்கங்கள்.
 
நாம் தேடி வைத்த எந்தச் செல்வமும் நம்முடன் வருவதில்லை இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை.மக்குச் சொந்தமாக்கப்பட வேண்டியது
1.உயிருடன் ஒன்றி அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை
2.அந்த அழியாச் சொத்தைச் சேர்த்து வாழ்வதே மனிதனின் கடைசி நிலை.
 
இதை நாம் அனைவரும் பெறுவோம் குரு அருள் உறுதுணையாக இருக்கும்.