ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 8, 2019

கண்களை மூடித் தியானிப்பது நல்லதா…? கண்களைத் திறந்து தியானிப்பது நல்லதா…?


நான் தியானம் இருக்கும் பொழுது
1.எனக்கு எண்ணமே வரமாட்டேன் என்கிறது…
2.அது வருகிறது… இது வருகிறது…! என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள்.

நாம் கண்களை மூடியவுடனே இது எல்லாம் வருகிறது என்றால் அதற்குக் காரணம் நம் ஆன்மாவில் இருப்பது தான் நம்மை இப்படித் தடைப்படுத்துகின்றது.

ஒரு வெறுப்பான செயலை ஒருவர் செய்கின்றார்…! அதைப் பார்த்தவுடன் நமக்குள் ஏற்கனவே இருக்கும் வெறுப்புணர்வு கொண்ட அணுக்களுக்குச் சாப்பாடு கிடைக்கின்றது. கிடைத்ததும் அது வீரியமடைகின்றது.

நீங்கள் அன்றைக்குத் தியானத்தில் வந்து உட்கார்ந்தீர்கள் என்றால் உங்கள் மனது எங்கெங்கேயோ போகும்…!

நாம் தொழில் செய்யும் இடங்களில் யாராவது நமக்குத் தவறானதுகளைச் சொல்லி இருந்தால் அந்த நினைவு தான் நமக்கு வரும். இந்த ஆன்மாவில் முன்னாடி இருப்பது இப்படி வரும்.

1.அப்பொழுது நீங்கள் தியானத்தில் உட்கார முடியுமா என்றால் விடாது…!
2.நீங்கள் எந்த வழியினால் ஆனாலும் சரி…!
3.இந்த உணர்வுகள் - உடலில் உள்ள அந்த அணுக்கள் அது தன் ஆகாரத்தை எடுத்து அது வளரத் தொடங்குகிறது.

இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்..?

அந்த மாதிரி வந்தது என்றால் கண்களை மூடத் தேவையில்லை. (இது முக்கியம்)
1.உங்கள் கண்ணின் நினைவை நேராக அந்தத் துருவ நட்சத்திரத்தை எண்ணி
2.அதிலிருந்து வரும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்குங்கள்.
3.அதைச் சுவாசியுங்கள் (இதுவும் முக்கியம்) இந்த உணர்வுகள் நமக்குள் அதைச் சுவாசித்து மறுபடியும் கண்களை மூடுங்கள்.
4.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.

இப்பொழுது எவரால் நமக்குள் அந்த உணர்வுகள் உந்தப் பெற்றதோ… தியானிக்க முடியாமல் இருக்கின்றதோ… அவர்களுக்கும் அறியாத இருள் நீங்கி அவர்களும் பொருள் கண்டு செயல்படும் சக்தி பெறவேண்டும்…! என்று இதை எண்ணிவிடுங்கள்.

அந்த அவருடைய உணர்வுகள் நமக்குள் வருவது தணிந்து விடும்.

எப்படிச் செடி கொடிகளுக்கு நாம் உரம் கொடுக்கின்றோமோ இதைப் போல் இப்படிக் கொடுத்து நல்ல உணர்வுகளை ஓங்கி வளரச் செய்ய வேண்டும்.

ஏனென்றால் அவர்கள் உணர்வுகள் நமக்குள் விளைந்து அணுக்களாக ஆன நிலையில் அது தன் உணர்ச்சியை உந்தித் தான் அது உணவை எடுத்துக் கொள்கிறது.

ஆனால் மேலே சொன்ன மாதிரி நாம் மாற்றி கண்களைத் திறந்து எடுத்துச் சுவாசித்து இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை உள் செலுத்தினால் அந்த அணுக்களும் மாறிவிடும்.

இல்லை என்றால்…
1.நீங்கள் தியானத்தில் அவர்கள் அப்படிச் செய்தார் இப்படிச் செய்தார் என்று எண்ணும் பொழுதெல்லாம்
2.அந்த அணுக்கள் அதிகமாகி நம் உடலில் உள்ள நல்ல அணுக்களுடன் போர் செய்யத் தொடங்கும்.
3.அப்பொழுது நமக்குள் மனக் கலக்கம் மன நோய் போன்ற நிலை வரும்.

பின் உடல் நோய் அதிகரிக்கத் தொடங்கிவிடும். நமக்குள் மனிதன் என்ற ஆறாவது நிலைக்கே எட்டாதபடி ஐந்தாவது அறிவுக்கே திருப்பிக் கொண்டு போகும்.

இதை எல்லாம் நாம் கண்டிப்பாக மாற்றி அமைத்துப் பழக வேண்டும்.