“கருநொச்சி” என்று தபோவனத்தில் வைத்திருக்கின்றோம்.
நீங்கள் இங்கே தபோவனம் வரும் பொழுது அதிலே ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு போய்
உங்கள் வீடுகளிலோ அல்லது அங்கே இடம் இல்லை என்றால் பக்கத்து வீட்டிலேயோ ஊன்றி
வளர்த்துக் கொள்ளுங்கள்.
1.ஏனென்றால் அந்த நொச்சி மரத்தில்
2.மிகச் சக்தி வாய்ந்த நிலைகளைப் பாய்ச்சி வைக்கப்பட்டுள்ளது.
அது முளைத்து வரும் பொழுது ஒரு ஐந்து இலைகளை எடுத்து அதை நீங்கள் காய்ச்சி ஒரு
அரை டம்ளர் சாப்பிட்டால் போதும். சாப்பிட்ட பின் இது இரத்தத்தில் கலக்கின்றது.
நாம் நுகர்ந்த… சுவாசித்த உணர்வுகளில்… வைரஸ் என்ற அணுக்கள் இரத்தங்களிலே உருவாகி
இருந்தால் அதிலே இது (நொச்சி) பட்ட பின் அது பலவீனம் அடைகின்றது.
1.நம் உடல்களில் சளி என்ற நிலைகள் வந்தாலும் சரவாங்கி நோய் (மூட்டு நோய்)
என்று வந்தாலும் அதை எல்லாம் குறைத்து நமக்குள் நலம் பெறும் சக்தியாக மாறும்.
2.இரவு படுக்கப்போகும் பொழுது அரை டம்ளர் குடியுங்கள். இருதயத்தில்
இருக்கக்கூடிய, நுரையீரலில் இருக்கக்கூடிய சளி எல்லாம் கட்டி கட்டியாக வெளியே
வந்துவிடும்.
3.காய்ச்சல் வந்தால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அந்த வைரஸ் கிருமிகள்
அழிந்துவிடும். உஷ்ணம் அதிகம் இருப்பதால் நொச்சி இலையைச் சாப்பிட்டால் அடிக்கடி
வரக்கூடிய காய்ச்சலைத் தடுக்கும்.
4.அதே போன்று தும்மலுக்கு… மூக்கில் தொடர்ந்து தண்ணீர் வருபவர்களுக்கு மஞ்சள்
நொச்சி இலை வேப்பிலை பச்சையாகப் போட்டு புகையை போடுங்கள்…! அதை நுகருங்கள்…!
சரியாகப் போகும்.
5.ஆஸ்த்மாவிற்கு வாத நோய் எல்லாவற்றுக்குமே இந்த நொச்சி இலையைச் சாப்பிட்டாலே
சரியாகும்.
அதே சமயத்தில் நோயாளிகளை நீங்கள் பார்த்து விட்டால் அடுத்த கணமே ஈஸ்வரா…!
என்று உங்கள் உயிரான ஈசனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்… கண்ணின் நினைவைச் செலுத்தி…!
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கித்
தியானியுங்கள். பின் கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தி அந்தச் சக்தி எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் என்று தியானியுங்கள்.
அடுத்து துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அந்த நோயாளியின் உடலில் படர வேண்டும்
அவர் நோய் நீங்கி உடல் நலம் பெறவேண்டும் என்று நீங்கள் எண்ணுங்கள்.
1.அவர் உடலில் எதை எல்லாம் நலமாக வேண்டும் என்று எண்ணுகின்றீர்களோ
2.அதை எல்லாம் உங்கள் உயிர் இங்கே உருவாக்குகின்றது
3.அதாவது உடலிலே அணுத் தன்மை ஆகும் கருவாக உருவாக்குகின்றது.
இப்படி நாம் ஒவ்வொரு நிமிடமும் எத்தகைய தீமைகளைக் கண்டாலும் அந்தத் தீமையின்
நிலையைத் தணிக்கச் செய்து அந்த அருள் ஒளியை நமக்குள் கூட்டச் செய்து நமக்குள்
நல்லதாக்க வேண்டும்.