ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 13, 2019

உலகெங்கிலும் உள்ள இன்றைய தெய்வ பக்தி நிலையைப் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


பூண்டின் செடி வித்தான ஆரம்ப வளர்ச்சி நிலையில்… அதன் கிளைத் தொடர் அச்செடி வளர்வதற்குகந்த ஜீவ சக்தி இருக்கும் வரை… அப்பூமியின் சுற்றளவில் ஆரம்பப் பூண்டுக் கிழங்கின் வளர்ச்சிக் காலம் முடிவுற்றாலும்… அதன் தொடர் வளர்ச்சிக் கிளைப் பூண்டுகள் எவ்வித்தின் ஆரம்பத்தில் வளர்ச்சி கொண்டு வளரப் பெற்றதோ… அதன் குண ஜீவ சக்தியும்… தன் வளர்ச்சிக்குகந்த நிலப்பரப்பு உள்ளவரை வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதைப் போல் இம்மனிதக் கரு எண்ணத்தில் சக்தி கொண்ட ஆத்மாக்களின் வளர்ச்சியினால் பல ஆயிரம் காலங்களுக்கு முன் அவர்கள் உணர்ந்து வெளிப்படுத்திச் சென்ற உண்மை நிலைகளின் படர் தன்மை வழித் தொடர் அலைத் தன்மையில் இன்றளவும் இந்தப் பூமியில் பல தெய்வங்களை வணங்கக்கூடிய முறையாக வழி பெற்று விட்டது.

1.பல குணங்களை உணர்ந்த சித்தர்களினால்
2.நல் வழிப்படுத்தப்பட்ட சக்தி வாய்ந்த அலைத் தொடரின் உருவங்களாகப் படைக்கப்பட்டவை
3.எல்லாமே இன்று கால நிலையின் மாற்றத்தினால் மாறி விட்டது.

ஆக மனித எண்ணத்தின் உணர்வலைகள் பல கூறுகளில் மாறு கொண்டு… மாறு கொண்டு… சுழற்சி பெற்ற வழிதனில்
1.உண்மைச் சக்தியின் தெய்வ நிலை
2.வெறி கொண்ட பக்தி முறையாக இன்றுள்ள சுழற்சி நிலையில் உள்ளது.

இந்தியாவில் இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் ஜாதி வெறியற்ற நிலையின் இனமாற்றம் என்ற வெறி உணர்வின் ஈர்ப்பில் தெய்வ சக்தியின் அன்பு பாச பிணைப்பின் வழித் தொடர் செல்ல முடியா உணர்வு எண்ணங்கள் தான் உலகெங்கிலும் அங்குள்ளன.

ஆனால் மனித எண்ண உணர்வால் எடுக்கும் சக்தியினால் எச்சக்தியும் பெறவல்ல ஆற்றல் மனித பிம்பக் கூட்டிற்கு உண்டு.

விஞ்ஞானத்தின் தொடர்பினால் ஒன்றின் சேர்க்கை கொண்டு அறியக் கூடிய செயல் வன்மையினால் பலவற்றையும் உணரும் மனிதன் இவ்வுடல் பிம்பக் கூட்டைக் கொண்டு எந்நிலையையும் உணரவும் செயலாற்றவும் முடியும்.

ஆவி நிலையின் சுழற்சி ஈர்ப்பில் மனித உடலை விட்டுப் பிரிந்த ஆத்மாக்கள் படர் கொண்ட சுழற்சியில் இந்தப் பூமியின் ஈர்ப்புடன் ஒன்றியே மனிதன் எடுக்கும் எண்ணமுடனும் உணர்வுடனும் சுழன்று கொண்டுள்ள நிலையில் இந்த மனிதப் பிம்பக் கூட்டின் எண்ணத்திற்கொப்ப இவ்வாவி ஈர்ப்பின் அலைத் தொடரில் சிக்குண்ட மனிதர்களும் வாழ்கின்றனர்.

காற்றுடன் கலந்துள்ள படர் தொடரில் பல சக்திகளின் சுழற்சியின் மத்தியில் தான் மனிதனும் வாழ்கின்றான்.
1.எண்ணத்தின் சுவாச நிலைக்கொப்ப எல்லாம்
2.எண்ணிய நிலை கொண்ட அலைத் தொடர் வருகின்றது.

பயம்… சந்தோஷம்.. மற்ற எந்த நிலைகள் கொண்ட எவ்வெண்ணத் தொடராக இருந்தாலும் அந்நிலையான சுவாச நிலையின் அலைத் தொடர் பிம்பக் கூட்டின் சுழற்சியுடன் எண்ணத்தில் எண்ணும் நிலைக்கொப்ப எல்லாமே உடலுடன் சேமித்துக் கொண்டே தான் உள்ளது.

1.பக்தி மார்க்கமானாலும் யோக சக்தி மார்க்கமானாலும்
2.விஞ்ஞான அஞ்ஞான எஞ்ஞானமானாலும்
3.எண்ணத்தில் எண்ணும் வழித் தொடர் கூட்டு அமிலச் சேர்க்கையை
4.உடல் என்ற பிம்பங்கள் சேமித்துக் கொண்டேயுள்ளது.

எவ்வெண்ணத்தை உயர்த்தி… அதன் வழித் தொடர் கொண்ட குணத் தன்மையில் இவ்வெண்ண சுவாசம் உள்ளதுவோ… அவ்வழித் தொடர் கொண்ட அலையின் அமில குணத்தின் வீரியத் தன்மை தான் மனிதக் கூட்டின் பிம்பக் கலவையில் நிறைந்திருக்கும்.

நாம் எதை நமக்குள் நிறைத்திட வேண்டும் என்பதை உணர்ந்து இந்த மானிடப் பிறவியில் முழுமை அடைந்து ஞானைத்தின் முதிர்வு என்னும் நிலையை எய்திடல் வேண்டும்.