(A) அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ
மத்தியில் இருக்கும் உங்கள் உயிருடன் ஒன்றி உங்கள் கண்களின் நினைவினை அகஸ்தியன்
வாழ்ந்த காலத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல்
முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று
1.உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு
2.குருநாதர் காட்டிய அந்த உணர்வின் நிலையை
3.உங்களுக்குள் குருவாக வேண்டும் என்று ஏக்கத்துடன் ஏங்கியே தியானியுங்கள்.
அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள்
உடலிலுள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று நினைவினை உடலுக்குள் செலுத்தி அதை
இரத்தநாளங்களில் கருவுறச் செய்து உங்கள் உடலுக்குள் இருக்கும் அணுக்களும் அந்த
அகஸ்திய மாமகரிஷிகளின் சக்தி பெறவேண்டும் என்று ஏக்கத்துடன் தியானியுங்கள்.
இப்பொழுது…
1.அந்த அகஸ்தியன் பெற்ற சக்தியும்
2.நம் குருநாதர் பெற்ற அந்தச் சக்தியும் கலந்து நீங்கள் நுகரும் பொழுது
3.அருள் சக்தியாக… புதுப் புது தாவர இனங்களின் மணங்களை
4.நஞ்சினை வென்றிடும் அருள் சக்தியாக நீங்கள் பெறுவீர்கள்.
5.உங்கள் உடலுக்குள் நஞ்சினை வென்றிடும் அணுக்கருக்கள் இப்பொழுது உருப்பெறும்.
6.நஞ்சினை வென்றிடும் அபூர்வ மணங்கள் வரும்… அதை நீங்கள் நுகர்வீர்கள்
7.அதை உங்கள் உடலுக்குள் அணுக்கருவாக மாற்றுவீர்கள்.
8.உடல் முழுவதும் அந்தச் சக்தி பரவுவதை உங்களால் உணர முடியும். மணத்தை
நுகர்ந்தறிய முடியும்…!
(B) துருவ மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் இரத்தநாளங்களில் கலந்து எங்கள் உடல்
முழுவதும் படர்ந்து எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற
அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கித் தியானியுங்கள்.
1.அகஸ்தியரும் அவர் மனைவியும் தியானத்தால் அன்று எடுத்துக் கொண்ட அந்தச்
சக்திகள்
2.அவர்கள் உடலிலே “மின் அணுக்களாக… ஒளியின் உணர்வாகப் பெற்ற உணர்வுகளை…” நீங்கள்
இப்பொழுது நுகர்வீர்கள்
3.அது உங்கள் உடலுக்குள் செல்லும் பொழுது உங்கள் உடல் அணுக்களையும் “மின்
அணுக்களைப் போன்று பெறும்…”
(C) உங்கள் நினைவைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள்
உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அந்தச் சக்தி பெற அருள்வாய் ஈஸ்வரா என்று
ஏங்கித் தியானியுங்கள்.
அதனின்று வரும் அந்தச் சக்தி வாய்ந்த உணர்வுகளை உங்கள் உடல் முழுவதும் பெறச்
செய்யுங்கள்.
தியானத்தின் மூலம் நீங்கள் பெறும் சக்திகள்
(1) அகஸ்தியர்
அகஸ்திய மாமகரிஷிகளை எண்ணி ஏங்கித் தியானிக்கும் பொழுது உங்கள் உணர்வுகளில்
1.“பச்சிலை மணங்களும்…
2.அபூர்வ மூலிகைகளின் வாசனைகளும் கிடைத்திருக்கும்.
அந்தப் பச்சிலைகளின் மணங்கள் உங்கள் உடலுக்குள் சென்ற பின் உங்கள் உடலில்
ஏற்கனவே இருந்த கை கால் குடைச்சல் அல்லது மேல் வலி அசதி மனச் சோர்வு இருந்தால் அது
எல்லாம் குறைந்திருக்கும்.
உங்கள் உடலில் மற்ற ஏதேனும் குறையான உணர்வுகள் இருந்தால் அது இப்பொழுது
குறைந்திருக்கும்.
(2) துருவ மகரிஷி
துருவ மகரிஷியின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கித் தியானிக்கும் பொழுது
1.ஒரு வெல்டிங்கைத் தட்டினால் எப்படி அந்தப் பளீர்…ர்ர் பளீர்…ர்ர்…! என்று
அந்த ஒளிக் கற்றைகள் வருமோ
2.அதாவது மின்னலைப் போன்று ஒளி தெரிவதைப் போன்று
3.உங்கள் புருவ மத்தியில் இளம் நீலமாக நீலக் கலரில் அந்த ஒளிகள் உங்களுக்குள்
கிளம்பியிருக்கும்.
அதே உணர்வுகளை உங்கள் உடலுக்குள் ஈர்க்கும் நிலைகள் கொண்டு உடலுக்குள் சென்ற
பின் உடலிலிருந்து வெளிச்சமாகத் தெரியும். வெல்டிங் அடிக்கும் பொழுது வெளிச்சம்
எப்படி வருகின்றதோ அதே போல் தெரிந்திருக்கும்.
சிலருக்கு இரவிலே உறங்கும் போது கெட்ட கனவுகள் அடிக்கடி வரும். ஏனென்றால் பகலிலோ
அல்லது மற்ற நேரங்களில் உடலில் தீய உணர்வுகள் பதிந்திருந்தால் இரவிலே கெட்ட
கனவுகள் வரும்.
கெட்ட கனவுகள் என்பது நாம் பதிவு செய்த உணர்வுகள் இரவிலே புலனடங்கித் தூங்கும்
பொழுது சோர்வடையும் பொழுது அந்த உணர்வுகளை நாம் சுவாசித்த பின் நம் உயிரிலே அந்த
உணர்வுகள் படும் பொழுது எது எது வந்ததோ அந்த உணர்வின் ரூபங்களைக் காட்டும்.
அப்பொழுது நம்மை அறியாமலே பய உணர்ச்சிகளைக் காட்டும்.
துருவ மகரிஷிகளை எண்ணித் தியானித்து அதன் வலுவைக் கூட்டும் பொழுது கெட்ட
கனவுகள் வராது தடுக்கப்படும்.
(3) துருவ நட்சத்திரம்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று உங்கள் நினைவினைத்
துருவ நட்சத்திரத்துடன் இணைத்து எண்ணும் பொழுது
1.உங்கள் புருவ மத்தியில் குறு குறு என்று உணர்ச்சிகளை ஊட்டி
2.இளம் நீலமாகத் தெரிந்திருக்கும்.
சிலருக்கு வெளிச்சமாகத் தெரியவில்லை என்றாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின்
சக்தி உடலுக்குள் செல்லும் பொழுது “ஒரு சக்கரம் போல்…” சுழன்று வரும்
உணர்ச்சிகளைத் தூண்டியிருக்கும்.
அதாவது ஒரு ஈரமான துணியிலோ மற்றதுகளிலோ லேசாக மின்சாரம் (EARTH) பாய்ந்தால்
எப்படி மினு..மினு… என்று இழுக்குமோ அந்த மாதிரித் தெரிந்திருக்கும்.
இவை எல்லாம் நாம் நுகர்ந்தறிந்த உணர்வுகள்
நமக்குள் ஏற்கனவே பயத்தால்… அவசரத்தால்… ஆத்திரத்தால்… வெறுப்பால்…
வேதனையால்… சோர்வால்… சங்கடத்தால்… இதைப் போன்ற அணுக்கள் உருவாகியிருந்தால்
1.நாம் நுகரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பட்ட பின் அந்த
அணுக்கள் அஞ்சி நடுங்கும்.
2.அதனால் அந்த உணர்வுகள் ஈரக் கையில் மின்சாரம் ஓடுவதைப் போன்று
தெரிந்திருக்கும்.
அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தை எண்ணி நாம் தியானிக்கும் பொழுது
1.புவி ஈர்ப்பின் பிடிப்பற்று மேலே மிதப்பது போல் தெரிந்திருக்கும்.
2.அதாவது இந்தப் பூமியின் பிடிப்பில்லாது (காற்று போல்) பறப்பது போல் தெரிந்திருக்கும்.
தியானத்தைச் சீராகக் கடைப்பிடிப்பவர்கள் மேலே சொன்ன அனைத்தையும் நிச்சயம் காண
முடியும்.. உணர முடியும்… நுகர முடியும்…!