உதாரணமாக நமக்கு ஒருவர் தீங்கு செய்கிறார் என்றால் அதைத் தடைப்படுத்த என்ன
செய்ய வேண்டும்…?
1.மகரிஷிகளின் அருள் ஒளிகளை நமக்குள் பெருக்கிக் கொண்டு
2.என் பார்வை அவர்களை நல்லதாக்க வேண்டும்…! என்று எண்ணினால் போதும்.
நமக்கு யார் தீமை செய்தாலும் சரி… இவ்வாறு தான் எண்ண வேண்டும்.
நாம் வளர்த்துக் கொண்ட அந்த அருள் மகரிஷிகளின் உணர்வுகள்
1.அவர்கள் தீமையை எண்ணும் பொழுதெல்லாம்
2.நமக்குத் தீமை செய்ய எண்ணும் பொழுதெல்லாம்
3.சிறுகச் சிறுகச் சிறுகச் சிறுக அவர்கள் உடலிலே இது ஊடுருவப்பட்டு
4.அங்கே இருக்கும் தீமையின் உணர்வுகள் - நம் பேரில் இருக்கக்கூடிய அந்த
அணுக்களை இது தணியச் செய்யும்.
அதே சமயத்தில் நமக்குள் அந்தத் தீமையின் அணுக்கள் வளராது… நோய் வராது… அவைகளைத்
தடைப்படுத்தும் தன்மை வருகின்றது.
நாம் ஒரு காரியத்திற்கே செல்கிறோம்… திரும்பத் திரும்ப செல்கிறோம்… என்றால்
அதனால் அடிக்கடி சோர்வு என்ற நிலைகள் வரும். அப்பொழுது அதுவே நமக்கு
எதிரியாகிவிடுகின்றது.
அப்படி எதிரியாகாதபடி தடுக்க வேண்டும் என்றால் ஈஸ்வரா என்று உயிரிடன்
வேண்டுதல் வேண்டும்.
அந்தத் துருவ மகரிஷியை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள்
பெறவேண்டும் அது எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர
வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த
உணர்வுகளை உடலுக்குள் செலுத்துதல் வேண்டும்.
ஏனென்றால் தீமைகளைக் காட்டிலும் இது வல்லமை பெற்றது.. அதை அடக்கும் சக்தி
கொண்டது.
ஆகவே அருள் உணர்வின் தன்மையை இப்படிக் கவரும் பழக்கம் வந்து விட்டால்
1.அந்தத் தீமையான உணர்வுகளையோ மற்ற துன்பங்களையோ எண்ணும் பொழுது
2.நாம் அதை எண்ணி எண்ணி அடைகாக்காதபடி.. அதை வளர்க்காதபடி
தடைப்படுத்துகின்றோம்.
இது எல்லாம் நமக்குள் ஒரு பழக்கத்திற்கு வர வேண்டும்.
அப்படிப் பழக்கத்திற்கு வந்தபின் ஒரு காரியத்தை நாம் சரியான முறையில் செய்ய
முடியவில்லை என்றாலும் அதை அடுத்து…
1.நாம்… இப்படித்தான் நடக்க வேண்டும்…! என்ற மகரிஷிகளின் அருள் உணர்வைத்
தனக்குள் வளர்த்து
2.இந்தக் காரியங்கள்… “இப்படித்தான் சித்தியாக வேண்டும்…!” என்ற அந்த உணர்வினை
3.மகரிஷிகளின் அருள் வட்டத்துடன் இணைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அப்பொழுது நமக்குள் அந்த அருள் ஞானத்தை வளர்க்கும் சக்தியும் அருள் ஒளியை
வளர்க்கும் சக்தியும் பெருகுகின்றது. நம் காரியங்களும் சீராகின்றது. மகிழ்ந்து
வாழும் உணர்ச்சிகளையும் ஊட்டுகின்றது.
செய்து பாருங்கள்..!