ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2019

புறப் பொருளால் சாதனை செய்யும் விஞ்ஞானத்தை விட மனித உடலுக்குள் சேமிக்கும் சக்தி கொண்டு செயற்கரிய செயலைச் செய்ய முடியும் – ஈஸ்வரபட்டர்


பாலில் சேர்க்கப்படும் பொருளைக் கொண்டு அதன் சுவையும் மணமும் நிறமும் எப்படி மாறுகின்றதோ அதைப் போன்று தான்
1.இந்த மனிதப் பிம்ப உடலில் சேர்க்கப்படும் உணர்வின் எண்ண சுவாச அமிலத்தால்
2.பிம்பக் கூட்டின் உருவ நிலையும்… குண நிலையும்… சொல் வடிவமும்… அமைகின்றதப்பா…!

நல் உணர்வு சுவாச முறையால்… நாம் எடுக்கும் ஜெப சக்தி காந்த மின் அலைச் சுவாசத்தால்…
1.உடல் பிம்பக் கூட்டில் உள்ள ஒவ்வொரு அணுக்களையும்
2.சக்திவாய்ந்த ஒளியில் வளப்படுத்த முடியும்.

இந்த உடல் பிம்ப ஜீவக் கூட்டிலிருந்து… ஜீவ சக்தியுடன் கூடிய இவ்வலை ஈர்ப்பின் குணத்தின் சக்தி கொண்டு தான்..
1.சகல சக்தியையும் அறியவல்ல ஆற்றலையும் செயல் முறையும்
2.என்றுமே அழியா வண்ணம் பல படைப்பைப் படைக்கவல்ல படைப்பின் சக்தியும்
3.இந்தப் பிம்பக் கூட்டிற்கு உண்டு

இந்தப் பிம்பக் கூட்டில் எடுக்கும் இச்சக்தியினால் எச்சக்தியையும் அடையலாம் என்று உணர்த்துகின்றீரே…! அப்படியானால் நீரிலும் நெருப்பிலும் குதிக்க முடியுமா…? என்ற வினா எழும்பலாம்.

கடும் உஷ்ண அலையைக் கக்கும் நெருப்புக் குண்டத்தில் இஜ்ஜீவ பிம்ப உடலுடன் அமர்ந்திருக்க முடியுமா..? என்றால் முடியுமப்பா…!

1.தான் எடுக்கும் உயர் சக்தி அலையின்… “ஒளியுடன் ஒளியாகும் ஒளி சக்தி பெற்றால்…”
2.தணல் விட்டு எரியும் நெருப்பில் அமர்ந்தாலும்
3.இந்த உடல் பிம்ப ஈர்ப்புச் சக்தியிலிருந்து வெளிப்படுத்தும் ஒளி அலையைப் பாய்ச்சினால்
4.அந்த நெருப்புக் கோளம் தான் அணையுமே தவிர இந்தப் பிம்ப உடலைப் பாதிக்காது.

இயற்கையின் சீற்றமுடன் விளையாடுவதற்கல்ல உயர் ஞான சக்தி. ஆனால் உள்ள சக்தியை உணர்த்துவதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆழ் கடலாக இருந்தாலும்… பூகம்பமோ…  சூறாவளியாகவோ.. இருந்தாலும் ஒலியின் சக்தியுடன் ஒளிரும் சக்தி கொண்டு எந்த வகையான இயற்கையின் சீற்றத்திலிருந்தும் பிம்ப உடலையும் தப்ப வைக்க முடியும்.

திராவகத்தில் போடப்படும் மற்ற உலோகங்கள் கரைந்தாலும் தங்கத்தின் குணம் எப்படிக் கரைவதில்லையோ அதைப் போன்று
1.இந்த உணர்வால் எடுக்கும் எண்ணச் சுவாசத்தால்
2.ஒலி கொண்டு ஒளி பெற்றோமானால்
3.உயர் ஞான சக்தியை வழி கொண்ட எச்சக்தியாகவும் நாம் ஆக முடியும்.

பூமியின் ஜீவ சக்தியைக் கொண்டு வளர்த்த சக்தியின் தாதுப் பொருள்களில் பிரிந்த திரவக சக்தியிலிருந்து (பூமிக்கடியில் இருக்கும் எண்ணை – CRUDE OIL) ஒன்றைக் கொண்டு பலவாகப் பெட்ரோலியப் பொருள்களைப் பல வகையிலும் பிரித்து பல சாதனைகளைப் புரிகின்றோம் அல்லவா…!

அதைப் போன்று..
1.இந்த உணர்வின் சுவாசத்தால் எடுக்கும் இஜ்ஜீவ சக்தியைக் கொண்டு
2.இப்பேரண்டப் பெருநிலையின் வளரத் தக்க முறைதனையும்
3.ஒவ்வொரு மண்டலங்களிலிருந்தும் ஒன்றின் தொடர் கொண்டு ஒன்றோன்று உருவாகும் முறைதனையும்
4.அணுவுக்குள் அணுவாக ஊன்றி அணுச் செயல் தொடர்பனைத்தையும்
5.ஒலியையும் ஒளிக் காட்சிகளையும் மணத்தையும் சுவை குணத்தையும் அவை மாறும் செயற்கை வடிவையும்
6.இவ்வெண்ணத்தைச் செலுத்தி எடுக்கும் சுவாசத்தால் எடுக்கவும் உணரவும் நமக்குள் வளர்த்திடவும் முடியும்.

இந்நிலையெல்லாம் பெறுவதற்கு மனித உணர்வில் ஊன்று கோலாக நிலைத்துள்ள “மரண பயம்” என்ற இந்த வித்தை முதலில் அகற்ற வேண்டும்.