ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2019

வீர குணத்துடன் தியானித்து மகரிஷிகளின் வீரிய சக்தியைப் பெறுவது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


ஈர்ப்புத் தன்மையின் வளர்ச்சித் தொடரில் ஆணாகவோ பெண்ணாகவோ உருவாகி வளர்ந்து ஒவ்வொரு ஜென்மங்களும் எடுக்கும் கருவில் உருவ பிம்ப உணர்வு எண்ண வாழ்க்கை முறையில்
1.இவ்வெண்ணத்தை எப்படி வழி நடத்துகின்றோமோ - அவ்வழியின் நிலைக்கொப்ப குண நலன்கள்
2.பிம்ப உடலின் கூட்டு அமிலமுடன் ஜீவ சக்தியுடன் கூடிய சுவாசத்தால்
3.உடல் அமில விகித நிலையும் ஒவ்வொரு பிறவியிலும் மாறுடுகின்றது.

ஆனால் மனித எண்ண பிம்ப உடலில் தான் செயலாற்றும் திறமையும் சொல் வடிவ உணர்வலைகளும் உள்ளது.

இந்த உடல் அமிலக்கூட்டையே உணர்வின் எண்ணத்தால் தாக்கப்படும் எந்த ஒரு குண நிலையையும் சமமான நிலைப்படுத்திச் செயல்படக்கூடிய தன்மை இவ்வெண்ணத்தால் வழிப்படுத்தும் முறை கொண்டு செயல்படுத்த முடியும்.

வாழ்க்கையில் நம்மை எதிர்கொள்ளும் மனித பிம்பத்தை விட்டுப் பிரிந்த ஆவி நிலை கொண்டோரின் அலையிலிருந்து இவ்வுடல் பிம்ப எண்ணத்தில் ஈர்க்கப்படும் உணர்வு நிலையை
1.எண்ணத்தால் சமப்படுத்தும் நிலை பெற்றுவிட்டால்
2.இவ்வெண்ண பலத்தினால் எந்தச் செயலையும் செயலாக்க முடியும்.

வீரமான உணர்வுகளையும் அவ்வீரத்தின் உயர் ஆற்றலையும் கொண்டு
1.நம்மை வந்து மோதும் எந்தத் தீய செயலையும்
2.நாம் எடுக்கும் எண்ணத்தின் பார்வை கொண்டே நம்மை அவை வந்து தாக்காமல்
3.நம் உணர்வின் சுவாசம் பட்ட நிலையிலேயே அந்தத் தீய சக்தியைப் பார்வையாலேயே மாற்ற முடியும்.

எண்ணத்தால் எடுக்கும் ஜெபத்தின் வீரிய… வீரச் செயல்… தன்மை இருந்தால் அதே சமயத்தில் நம்முள் உள்ள அமிலக் கலவையின் கூட்டு
1.நற்குண வழித் தொடர் பெற்றிருக்குங்கால்
2.இவ்வீரிய வீர உணர்வாக எந்த நிலையையும் நாம் பெற முடியும்.

அன்பு பாசம் ஞானம் அனைத்தும் நமக்கு வேண்டியது தான்…!

ஆனால் அனைத்துச் சக்திகளையும் சாந்தமுடன் சுழலவிடும் ஜெபத்தினால் இவ்வாழ்க்கை என்ற நிறைவுக் குணத்துடன் மட்டும் தான் சுழல முடியும்.

ஆக… வீரத்தின்… வீர சக்தித் துடிப்பு உணர்வின் செயல் கொள்ளும் செயல் நிலையை… இவ்வுடல் என்ற அமிலக் கூட்டிலேயே வீரியம் கொள்ள வேண்டும்.

1.வீரத்தின் வீரிய செயல் குணத் துடிப்பு உணர்வால் உந்தப்படும் இவ்வெண்ணத்தின் ஈர்ப்பலையை
2.உயர்ந்த ஜெப சக்தியின் தொடர்பு கொண்டு
3.சித்தர்கள் சப்தரிஷிகள் ஆகியோரின் உணர்வுடன் ஒன்றப்படும் செயலினால்
4.இம்மனித பிம்ப உடல் சக்தி தான் தெய்வ சக்தியாகின்றது.

ஆவலும்… ஆவலுக்குகந்த ஆசை விரமும்… உணர்வால் ஜெபமுடன் கூடிய அறிவும்… ஞான வழித் தொடரில் செலுத்தி அவ்வழியினில் நாம் சென்றோமானால்
1.நாம் செல்லும் அந்த வேகம் கொண்டு
2.நம் சுழற்சியுடன் நம்மை வழி நடத்திச் செல்லும் குருவின் நிலைக்கே
3.நம் செயலைக் கொண்டு சுழற்சியின் சக்தி வேகம் அதிகம் கொள்ளும்.

அறியும் அறிவாற்றல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டுமப்பா…!

இவ்வாழ்க்கை இன்பம் துன்பம் என்ற சுழற்சியின் கதியிலேயே எண்ணத்தைச் சமப்படுத்தி உண்டோம்… உறங்கினோம்… வாழ்ந்தோம்…! என்ற குறுகிய சுழற்சியில் இருக்கக் கூடாது.

எந்த நல்ல குணத்தின் சக்தியை நாம் பெற்றிருந்தாலும் அறிவோம்…! “ஹரிநாராயணா…” என்ற உண்மை நாமத்தின் வழித் தொடர் ஜெப நாமத்துடன் நம் செயல் சுழன்று கொண்டேயிருக்க வேண்டும்.

ஹரி ஓ…ம் (அறிவோம்) எதனையும் நாம் அறிந்து கொண்டேயிருப்போம். ஹரி நாராயணா… ஹரே… படைப்பின் படைப்பு நாராயணா…!
1.உன் படைப்பையே நான் அறிய
2.படைக்கப்பட்ட படைப்பையே அறிந்து படைக்க வருகின்றேன் என்ற
3.அறிவோம்…! என்ற வீர உணர்வு சுழற்சியின் செயல் வளர்ச்சியில்
4.ஞானச் செயல் வளர்ந்து கொண்டேயிருக்க வேண்டும்.

காலத்தின் மாற்றமும் உருவத்தின் மாற்றமும் மாறிக் கொண்டே தான் உள்ளது ஒவ்வொரு நொடிக்குமே.

இந்தச் சுழற்சியின் சுழற்சியாகச் சிக்குண்டு கிடைக்க முடியாத பாக்கியமாக மனித உருவத்தை எடுத்துள்ள நாம் இவ்வுருவத்தின் ஜீவத் துடிப்பு சக்தியைக் கொண்டு தான் எந்தச் சக்தியையும் பெற முடியும் என்ற உண்மையை உணர்ந்திடல் வேண்டும்.

இந்த உடல் பிம்ப உணர்வு எண்ணத்தையே “வீரம்…” என்ற உயர் சக்தியின் வீரிய குணமாக… நம் குணத்தை ஜெபம் கொண்டு மகரிஷிகளின்பால் நம் எண்ணத்தைச் செலுத்தி நாம் எடுக்கும் ஜெப நிலை கொண்டு பல உன்னத நிலைகளைப் பெறலாம்.