ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2019

“வள்ளலார் கூறிய அருள் பெரும் ஜோதி…” பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


மனிதனுக்கும்… மற்றெல்லா மிருகங்களுக்கும்… பட்சிகள் யாவைக்குமே… இயற்கையின் ஒளி ஈர்ப்பு… தனக்கு முன்னாடி உள்ளதை ஊடுருவிப் பார்க்கும் தன்மையில் தான் அமையப் பெற்றுள்ளது.

ஒரே சுழற்சி கதியில் தான் ஈர்ப்பின் சுழற்சி ஓட்டமே சுழன்று ஓடுகின்றது.
1.முன்னோக்கிச் செல்லும் சுழற்சி கதியில்தான் வாகனங்களையும் மனிதன் அமைக்கின்றான்
2.மேல் நோக்கிய கதியில் தான் தெய்வ சக்தியை எண்ணி வணங்குகின்றான் மனிதன்.

ஆனால் மேல் நோக்கிச் சுவாசம் ஈர்த்து பூமி கக்கும் பூமி எடுத்து வெளிப்படுத்தும் ஈர்ப்பின் சுவாசத்தை
1.ஜீவராசிகள் தன்னுடைய சுவாச ஈர்ப்பிற்கு
2.கீழ் நோக்கிய சுவாசமாகத் தான் எடுத்துப் பூமியின் பிடியில் சிக்கி
3.பூமியின் ஈர்ப்புடன் ஈர்ப்பாகவே இந்தப் பூமி வளர்த்த வளர்ப்பெல்லாம் உள்ளன.

ஆரம்பக் கதியில் எந்த உயிரணு எந்த அலைத் தொடர் அமிலக் கூட்டின் உருவகத் தன்மை எடுத்து ஆவியாகிப் பிம்பமாகி ஒவ்வொரு பிம்ப மாற்றத்திலும் வழிப்படுத்திக் கொண்ட உணர்வெண்ணக் கூட்டு அமில ஈர்ப்பின் பிடி…
1.இந்தப் பூமியின் சுவாசப் பிடியின் தொடர்பு ஈர்ப்புப் பிடியிலே சிக்குண்ட தன்மையில்
2.கீழ் நோக்கிய சுவாச ஈர்ப்புடன் வாழும் தன்மையிலேயே உள்ளது.

இதையே பகுத்தறியக்கூடிய ஞான வளர்ச்சி கொண்ட மனிதன் தன் ஜீவ பிம்ப உடலின் எண்ண சக்தியை நற்குண வழித் தொடரில் மேல் நோக்கிய சுவாச அலையை ஈர்த்தெடுக்ககூடிய ஜெபம் கொண்ட சக்தி பெற்றால்… அதனால் ஏற்படும் வளர்ச்சி நிலை என்ன…?

ஏனென்றால் இந்தப் பூமியின் ஈர்ப்பில் சிக்குண்டு வாழும் நிலையில் “நற்குண ஜெப முறையினால்…” இந்த உடல் முழுமைக்கும் படர்ந்துள்ள அனைத்து அணுக்களுக்கும் மேல் நோக்கிய சுவாச அலை ஈர்ப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மேல் நோக்கிய சுவாசத்தால்…
1.உடலின் அணுக்களுக்கு எல்லாம் ஊடுருவும் உயர் காந்த சக்தியின் செயல் ஏற்பட்ட பிறகு
2.இந்த ஜீவ பிம்ப உடலில் இருந்தே இவ்வெண்ணத்தை ஒளியின் அலையாக
3.தனித்த ஒரு ஜோதி உணர்வாகச் செயல்படுத்த முடியும்.

கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அதுவும் எரிந்து பஸ்பமாகத்தான் செய்யும்.. ஒளியாகத்தான் காட்டும். அதைப் போல் இவ்வுணர்வால் எடுக்கும் எண்ண ஜெப முறையின் வழியினால் உயிரான்மாவைப் பேரொளியாக ஆக்கிட முடியும்.

1.சூரியனின் ஒளி.. கண்ணாடியில் பட்டு மறுபக்கம் ஊடுருவுவதைப் போல் இல்லாமல்
2.அதே சூரியனின் ஒளி… பாதரசம் பூசிய கண்ணாடியின் மேல் படும் பொழுது
3.இவ்வொளியை ஈர்த்து இரசக் கண்ணாடி வெளிப்படுத்தும் ஒளியைப் போல்
4.இந்த உடல் பிம்பக்கூட்டிற்கு நற்குண அமில இரசத்தைப் பூசி ஜெபம் கொண்டோமானால்
4.வள்ளலார் உணர்த்திய அருட்பெரும் ஜோதி என்ற நிலையான தனிப் பெரும் கருணை கொண்ட அவர் உணர்த்திய முறையான
5.நம் ஆத்மாவை ஜோதியாக… அருட்பெரும் ஜோதியாக.. ஆக்கிடல் வேண்டும்.

பூமியின் ஈர்ப்புச் சுவாசப் பிடியில் உள்ள நிலையில் ஜீவன் பிரிந்தால் இதே சுழற்சி ஓட்டத்தில் மீண்டும் மீண்டும் சிக்குண்டு சுழலும் தன்மை தான் பெற்றிட முடியும்.

அவ்வாறு பூமியின் பிடியுடன் மேன்மேலும் சிக்கிப் பல அமில குணங்களின் மாற்றத்திலும் இவ்வுடல் பிம்ப உயிரணுக்கள் எவையுமே எவ் வீர்ப்புப் பிடிக்கும் செல்லாமல் மற்ற ஜென்மத் தொடர் வழிக்கும் செல்லாதபடி நம் ஜெப நிலை இருந்திடல் வேண்டும்.

ஆகவே நம் உயிர் ஆத்ம ஜோதியை அருட்பெரும் ஜோதியாக… தனிப் பெரும் கருணை கொண்ட எச்செயலையும் உருவாக்கும் தன்மைக்கு… உயிர் ஆத்மாவின் உயர் ஆத்ம ஜோதியை நாம் வளர்க்க முடியும்... வளர்க்க வேண்டும்..!