ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 2, 2019

ஆயுள் ஹோமம்… ஆயுளை நீட்டித் தருமா…!


விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்…? பல விதமான ஆராய்ச்சிகளைச் செய்கின்றார்கள். பல மரபணுக்களை எடுத்து உயிரினங்களை மாற்றுகின்றார்கள். மனித உடலிலும் எத்தனையோ வகையான உறுப்புகளை மாற்றுகின்றார்கள். ஆணைப் பெண்ணாக மாற்றுகின்றார்கள்.
1.ஆனால் இந்த உயிரின் தன்மையை
2.உணர்வை ஒளியாக மாற்றும் திறன் அவனுக்கு இல்லை...!

உடல்களை மாற்றிக் கொள்ள முடியும் இவனுடைய சிந்தனைகளை எடுத்துக் கொள்வான். இந்த ஆராய்ச்சி இவனுக்குள் வரும். ஆட்டை மாட்டாக ஆக்கினான் என்றால் அந்த உணர்வுகள் வந்தபின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின் இந்த ஞானத்தின் தொடர் கொண்டு புது விதமான உடலைத் தான் அவன் பெறுவான்.

எதை மாற்ற வேண்டும் என்று எண்ணினானோ இந்த உணர்வுகள் தன் உயிரிலே வளர்க்கப்பட்டு இந்த விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு பெரிய தத்துவம் ஆனாலும் இந்த உணர்வின் தன்மை அணுவாக்கப்படும்போது இறந்தபின் எதன் உணர்வை மாற்றி அமைக்கச் செய்தானோ அதே உணர்வு கொண்ட உடல்களில் புகுந்து விடுவான்.

1.ஆட்டின் மேலே ஞாபகம் வைத்தான்…
2.ஆட்டை மாற்றியமைக்க எண்ணினான்…
3.இதே உணர்வு கொண்டு உடலைவிட்டுச் சென்றபின் இந்த விஞ்ஞானி அதோடு மடிந்துவிடுகின்றான்.
4.எந்த உணர்வின் தன்மையைப் பெருக்கினானோ அந்த உணர்வின் தன்மை இங்கு வருகின்றது.

ஆகவே இதையெல்லாம் வென்று ஒளியின் உணர்வாக உருவாக்கிடும் அந்த உணர்வை எவர் பெறுகின்றனரோ மீண்டும் உடல் பெறாதபடி அதை மாற்றி அமைக்க முடியும்.

இதையெல்லாம் நாம் சாதாரணமாக அலட்சியப்படுத்தி விடுகின்றோம். காவியங்களில் அவ்வளவு பெரிய தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள். நாம் அதையெல்லாம் இழந்துவிட்டோமே…!

இப்பொழுது என்ன செய்கின்றோம்…? யாகங்களைச் செய்து பாவங்களைத் தான் ஜாஸ்தியாகச் செய்கின்றோமே தவிர பாவத்தைப் போக்கும் மார்க்கம் இல்லை.

உடலில் நோய் வந்துவிட்டது என்றால் காளி கோவிலிலோ மற்ற கோவில்களிலோ யாகத்தைச் செய்து அந்தப் பாவத்தை எல்லாம் போக்க முற்படுகின்றோம்.

அடுத்ததாக… அதாவது சாகா நிலை கொண்டு வரக்கூடிய நிலையாக  அறுபதாவது வயது வந்த பின் “சஷ்டிஅப்த பூர்த்தி…” செய்கிறோம்.  வயதைக் குறைக்காமல் வாழ வேண்டும் என்ற அந்த உணர்வை வளர்ப்பதற்காக வேண்டி அதைப் பூர்த்தி செய்கிறார்கள்.

1.ஆனால் அதைப் பூர்த்தி செய்ய மந்திரம் சொல்கின்றார்களே
2.மந்திரம் சொல்பவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா…?

சாகாமல் இருப்பதற்காக வேண்டிச் சில கோவில்களில் ஒரு யாகத்தைச் செய்கின்றார்கள். அந்த யாகத்தைச் செய்பவன் உயிரோடு இருக்கின்றானா என்றால் இல்லை…!

இதுகள் எல்லாம் நாம் ஆசையின் நிலைகள் கொண்டு காசைக் கொடுத்து விலைக்கு வாங்கும் ஆசைகளைத் தான் வளர்த்துக் கொள்ள முடிகிறது. எந்த யாகத்தை வளர்த்தோமோ செத்த பிற்பாடு எந்த மந்திரக்காரன் சொன்னானோ அவனிடம் கைவல்யமாகிப் போய்விடுவோம்.

இது சாகாக்கலையாக இன்னொரு உடலுக்குள் போய் இதே உணர்ச்சிகள் கொண்டு இதே நிலையைத் தான் உருவாக்கும். ஆனால் வேகா நிலை அடைவதில்லை.

உதாரனமாக நெருப்பிலே குதித்தால் உடல் கருகுகிறது… ஆனால் உயிர் வேகுவதில்லை… அழிவதில்லை. அது போல்
1.அருள் ஒளி என்ற உணர்வை நமக்குள் சேர்த்து விட்டால்
2.எதிலேயும் இது சிக்காது ஒரே ஒளியாக மாறுகின்றது
3.இது தான் வேகாநிலை… எதுவுமே இதை அழிக்க முடியாது.

ஆகவே நாம் எப்படி வாழ வேண்டும் என்ற நிலையை நமக்குள் தெளிவாக்கிக் கொள்தல் வேண்டும்.

ஜாதகத்தைப் பார்த்தவுடனே ஆயுள் கம்மியாக இருக்கின்றது என்று தெரிந்தவுடனே ஆயுளைக் கூட்டுவதற்காக வேண்டி ஆயுள் ஹோமம் செய்து பல யாகங்களைச் செய்து மந்திரங்களைச் செய்வார்கள்.

அறுபதாம் கல்யாணம் முடிந்தவுடனே சில கோவில்களில் எல்லாம் இந்த ஆயுள் ஹோமத்தைச் செய்வார்கள். ஆனால் ஆயுள் ஹோமம் செய்து தருபவன் சாகாமல் இருக்கின்றானா என்றால் இல்லை…! அப்பொழுது அவனிடம் போய் ஆயுள் ஹோமம் செய்தால் எப்படி இருக்கும்…?

நமக்குத் தெரியும்… அவனே சாகப்போகின்றான் என்று…! இருந்தாலும் அவன் ஆயுள் ஹோமம் செய்து நம் ஆயுளைக் கூட்டித் தருவான் என்ற ஆசை. சாங்கியங்களைச் செய்து கொஞ்ச நாளாவது வாழ முடியாதா…?

ஆயுள் ஹோமம் செய்து முடிந்த பிற்பாடு என்ன நடக்கின்றது..? சில கஷ்டங்கள் வந்தபின் இப்படி ஆகிவிட்டதே…! என்று இந்த வேதனையை எடுத்துக் கொள்வார்கள்.

இந்த வேதனையான உணர்வு அதிகமான பின் துடுக்கு… துடுக்கு… என்று கடைசியில்
1.“இத்தனை சம்பாரித்தேனே… எல்லாம் போய்விட்டதே…!
2.இத்தனை சம்பாரித்தேனே… ஆண்டவன் என்னை ரொம்பவும் சோதிக்கின்றானே…! என்று
3.இந்த வேதனைகளையே உருவாக்கிக் கொண்டு வரும்.

அப்பொழுது இந்த உடல் குறுக… குறுக… வேதனை என்ற உணர்வை வளர்க்க… வளர்க்க… இந்த உடலின் ஆயுள் என்ன ஆகின்றது…? ஆயுள் ஹோமம் செய்து இந்த வேதனையை வளர்த்தது தான் மிச்சம்…!

ஆகவே நாம் எதைச் செய்ய வேண்டும்…?

ஆயுள் ஹோமம் என்றால்
1.அந்த அருள் மகரிஷிகளின் ஒளியான உணர்வுகள் எனக்குள் பெற வேண்டும்
2.என்னை அறியாத இருள் நீங்க வேண்டும் என்று இந்த உணர்வை வளர்த்துக் கொண்டால்
3.இந்த உடலின் தன்மை நீங்கிய பின் என்றும் ஒளியாக நாம் இருக்க முடியும்…!