ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2019

சூரியக் குடும்பத்தின் படைப்பின் “உயர்ந்த வளர்ச்சி” எது…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது


1.வளர் சக்தியான உயர் ஞானம் மனித பிம்பத்திற்கு எப்படி வந்தது…?
2.சொல்லாற்றல் செயலாற்றல் என்று உரைக்கும் வழித் தொடர் ஞான வளர்ச்சி நிலை உருவானது எந்த நிலை கொண்டு..?
3.நாற்பத்தியேழு கோளங்களில் இல்லாத சக்தி இந்தப் பூமி வளர்த்த மனித ஞானத்திற்கு எப்படி வந்தது..?
4.ஜாதகம் பார்ப்பவரால் சனி மண்டலத்தைத் தருவான்… அழிப்பான்… என்று உணர்த்திய முறை எல்லாம் எப்படியப்பா வந்தது…?

சந்திரனிலும் செவ்வாய் புதன் வியாழன் ராகு கேது சூரியன் இப்படி நாற்பத்தியேழு கோளங்களுக்கும் இல்லாத் தன்மை நம் பூமிக்கு உண்டு.

பார்க்கின்றான்.. கேட்கின்றான்… சுவைக்கின்றான்… நுகருகின்றான்… வாழுகின்றான் பல சக்தியையும் பெற்ற மனித பிம்பம் (மனிதர்கள்).

சுழற்சி கதியின் இயற்கை வளர்ச்சி செயல்தான் சூரியனே தவிர நினைத்த செயலைச் செயலாக்கும் எண்ண ஞான வளர்ச்சி சூரியனுக்கே இல்லை.
1.சூரியனுக்கே இல்லாத ஞான வளர்ச்சியின் செயல் மனிதனுக்கு எப்படி உருப்பெற்றது…?
2.இந்த நிலை கொண்ட மனித சக்தி எப்படி உருவானது…?

மிதந்து சுழன்று ஓடிக்கொண்டேயுள்ள சூரியனின் வளர்ச்சியின் அங்கங்கள் தான் சூரியக் குடும்பத்தின் நாற்பத்தியேழு மண்டலங்களும்… சூரியனைச் சேர்த்தால் நாற்பத்தியெட்டு.

இஜ்ஜீவ பிம்ப உடல் கோளத்தில் இயங்கும் அவயங்களைக் கொண்டு தான் (கை கால் ஐம்புலன்கள் மற்றும் உடலில் உள்ள உள் உறுப்புகள்) மனித பிம்ப ஆத்மாவின் வளர்ச்சி நிலை உள்ளது.

அதைப் போல் சூரியனின் அங்கங்களாக ஒன்றின் ஈர்ப்பின் துணை கொண்டு ஒவ்வொன்றின் வளர்ச்சியுமே அது வளர்க்கும் சக்தி கொண்ட உரத்தைச் சூரியன் பெறுகின்றது.

சூரியன் இயங்கிட… செயல்பட்டிட.. சூரியனின் அங்கங்களாக உள்ள நாற்பத்தியேழு மண்டலத்தின் துணை வேண்டும். அது இல்லையேல் சூரியனுக்குச் செயலில்லை.

மனிதனின் உடல் உறுப்பில் செயல்புரியும் அங்கமாக மனித இருதயத்திற்கு எந்தச் செயல் உள்ளதோ அந்தச் செயலைப் போன்ற நிலையைத் தரவல்ல மண்டலம் தான் சனி மண்டலம்.

சனியின் சக்தியினால் அது எடுத்து வெளிக்கக்கும் அமில ஈர்ப்பின் குளிர் தன்மையான ஆவி சக்தி சூரியனுக்கு இருதயம் போன்று செயல் கொள்கிறது.

மனித அங்கத்தின் செயலைப் போன்று ஒவ்வொரு மண்டலத்தின் செயலும் சூரியனைச் செயல்படுத்துகிறது.

ஆனால் ஜீவ ஆத்மாவான சூரியனின் அங்க அவயங்களான நாற்பத்தியேழு மண்டலங்களில் உருவத்தின் ஞானத்தின் சொல் எண்ண வலுவாற்றல் வளர் குழந்தையை வளர்ப்பது இந்தப் பூமி தான்.

நாற்பத்தியேழு மண்டலங்களின் அவயங்களை சூரிய பிம்ப ஜீவன் வளர்க்கும் வளர்ப்பு நிலை செயல் “இந்தப் பூமியில் வளர்த்த மனித பிம்ப வளர்ச்சியைக் கொண்டுதான் வளர்ந்திட முடியும்…!”

சப்தரிஷிகளின் சக்திச் செயலாக…
1.இந்தப் பூமிக்குப் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்தே
2.வளர்ப்பின் வளர்ப்புக்கான இந்தப் பூமிக்குப் பல அலைத் தொடரின் ஈர்ப்பு சுழற்சியை ஏற்படுத்திய நிலை கொண்டு
3.எந்நிலையையும் உருவாக்கவல்ல தெய்வ சக்தியை உருவாக்கும்
4.மனித பிம்ப ஞானத்தை வளர்க்கச் செயல் கொண்டனர்.

ஏனென்றால் உருவாக்கும் உயர் சக்திக்கு எண்ணத்தால் எடுக்கும் ஞானச் சுழற்சி ஜீவன்கள் அவசியம் தேவை
1.இந்தப் பூமியின் சக்திக்கு இவ்வீர்ப்பு அலையின் சுழற்சியைச் சுழலச் செய்து
2.ஜீவ பிம்ப மனித ஞானத்தை வளர்க்க
3.சூரியனை மையப்படுத்தி இந்த நாற்பத்தியேழு மண்டலங்களிலிருந்து வெளிக்கக்கும் அலைத் தொடர்பைத் தான் எடுத்து
4.பல பிரளய மாற்றங்கள் தந்து இந்தப் பூமியில் மனிதக் கரு ஞானத்தை வளர்த்தான் சப்தரிஷி.