ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2019

சில நேரங்களில் இனம் புரியாத நிலைகளில் நமக்கு வேதனையான உணர்வுகள் தோன்றுகிறது… ஏன்…?


அதனின் காரணம் என்ன என்றால் நமக்குள் முந்தைய நிலைகளில் சந்தர்ப்பத்தால் கவரப்பட்ட வேதனைகள் உணர்வுகள் வெளிப்பட்டு அந்த நிமிடம் அது உடலில் இருந்து வேதனையைத் தரும்.

அப்பொழுது அந்த வேதனை உணர்வுகள் உணர்ச்சிகள் ஆன பின் கண்ணின் நினைவு உயிருக்கு வருகின்றது.

உதாரணமாக காலில் முள் குத்தினால் உடனே உயிருக்குத் தான் அந்த உணர்வுகள் வரும். கண் என்ன செய்கிறது…? அது முள்ளா அல்லது வேறு எது குத்தியது…? என்று தேடுகிறது.

அப்பொழுது இந்த உணர்வின் தன்மை நமக்குள் வரும் பொழுது
1.அதைக் கூர்ந்து கவனிக்கும் தன்மை வருகின்றது…
2.அதை நுகர்கின்றது…
3.அதை உற்றுப் பார்த்துக் காலில் ஏறிவிட்டதா…! என்ன…? என்கிற வகையில்
4.அந்த உணர்வுகள் வேதனையுடன் நுகரச் செய்கின்றது.

இதைப் போன்ற நமக்குள் முந்தைய நிலைகள் பெற்ற இந்த உணர்வுகள் அந்த அணுக்கள் அது தன் பசிக்காக உணர்ச்சிகளைத் தூண்டும்.

உடலில் வலி இருக்கிறது…! என்றால் சந்தோஷமாக இருங்கள் என்றால் உங்களால் இருக்க முடியுமோ…? நம் உடலிலே ஏற்கனவே பெற்ற அந்த அணுக்கள் தன் பசிக்கு அதன் உணர்ச்சிகளை உந்தும்.

அந்த வேதனையான உணர்வை நுகரும் பொழுது உயிரிலே பட்டு அந்த உணர்ச்சிகளும் அந்த வேதனையின் நிலையை நாம் அறிய முடிகின்றது.

அந்த நேரத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்…?

ஈஸ்வரா…! என்று புருவ மத்தியில் உயிருடன் தொடர் கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நினைவினைத் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்த வேண்டும்.

ஏனென்றால்…
1.சுவாசிக்கும் பொழுது இங்கே (புருவ மத்தியில்) தடைப்படுத்திவிட்டு
2.வேதனைப்படும் அணுக்களுக்கு உணவு போகாதபடி தடைப்படுத்த வேண்டும்.

பின் கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி
1.எங்கே வலி எடுக்கின்றதோ…
2.அங்கே உங்கள் நினைவைச் செலுத்துங்கள்.

வேதனையை உருவாக்கும் அணுக்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று கண்ணின் நினைவை உடலுக்குள் செலுத்தித் திரும்பத் திரும்பச் செய்து கொண்டு வாருங்கள்.

இப்படிச் செய்ய…
1.அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அங்கே பட…
2.அந்த விஷத் தன்மைகள் அங்கே குறைந்து…
3.நமக்குள் இருக்கும் அந்த வலியைக் குறைக்க உதவும்.

அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் எடுத்து உடலில் செலுத்தச் செலுத்த வேதனையை உருவாக்கும் அணுக்கள் சிறுகச் சிறுக வீரியத் தன்மை இழந்து உடலில் உள்ள நல்ல அணுக்கள் வலிமை அடையக்கூடிய சக்தி பெறுகின்றது.  

அதற்குத்தான் இதைச் செய்யச் சொல்கிறோம்…!