ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2019

நாம் செய்யும் தவறை மறைத்தால் ஏற்படும் தீமையான விளைவுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...!


இன்று மனிதனின் வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அன்புடன் பண்புடன் பழகுகிறோம் எல்லாம் செய்கிறோம். இருந்தாலும்…
1.வெளியிலே தெரியாதபடி நமக்குள் குறைகளை வளர்த்துக் கொண்டால்
2.வெளியிலே நாம் பேசும்போது அல்லது கேட்கும் பொழுது
3.எனக்கும் அவருக்கும் ஒரு குறையும் இல்லை…! என்று நாம் மறைத்துப் பேசினாலும்
4.நம் உயிருக்குள் அதை மறைக்க முடியாது.

அதே சமயத்தில் நாம் ஒரு தவறையே செய்துவிட்டோம் என்றால் அந்தத் தவறின் தன்மை பிறருக்குத் தெரிந்தால்
1.நம்மைக் குற்றவாளியாக்கி விடுவார்களே…! என்று
2.இதற்காக வேண்டி நாம் பலதுகளைப் பொய்யாகச் சொல்லி மறைப்போம்.

ஆனால் மறைத்தால் என்ன ஆகும்…?

இப்படி மறைத்திடும் உணர்வுகளை நமக்குள் வளர்க்க வளர்க்க நமக்குள் வளரும்… வளர்க்க வேண்டிய உண்மையை… மறைத்திடும் நிலை வருகின்றது.

1.அப்படி மறைத்திடும் நிலை வரப்படும் பொழுது இருள் சூழ்ந்த நிலைகளே நமக்குள் வரும்
2.பின் சூனிய நிலைகளாக அது விளையும்... நம் சிந்திக்கும் திறனையே இழக்கச் செய்யும்
3.கடைசியில் இருள் சூழும் தன்மையையே உருவாக்குகின்றது.

நாம் தவறு செய்யவில்லை. நாம் நுகர்ந்த உணர்வுகள் இப்படியெல்லாம் அந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது… அதன் உணர்வின் செயலாக நம்மை இயக்குகின்றது…!

அப்பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்..?

ஆனால் இதை அடக்கும் ஆறாவது அறிவைக் கொண்டு மாற்றி அமைத்துச் செயல்படுத்த முடியும். விநாயகர் கையில் என்ன வைத்திருக்கின்றது…? அங்குசம்.

1.நாம் நுகர்ந்த உணர்வுகள் அதனின் உணர்ச்சிகளை ஊட்டி
2.தவறான பாதைகளுக்குச் செல்லும் உணர்ச்சிகளை ஊட்டி
3.நம்மை அழைத்துச் செல்லும் அதனின் இயக்க நிலையை மாற்றிட
4.நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வைப் பெறவேண்டும் என்று ஏங்கி எடுத்து அதை அடக்க வேண்டும்.

அதனால் தான் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா… சேனாதிபதி…! என்று ஞானிகள் காட்டினார்கள். மகரிஷிகளின் அருளை நாம் நுகர்வோம் என்றால் நம்மை அறியாமல் தவறு செய்யும் உணர்வுகளை அது அடக்குகின்றது.

பின் இந்த உணர்வின் தன்மை இப்படி அடக்கிப் பழகிவிட்டால்
1.எப்பொழுது அந்த உணர்வுகள் தவறு செய்ய அல்லது மறைக்கத் தூண்டினாலும்
2.அடுத்த கணம் இந்த மகரிஷிகளின் அருள் உணர்வை இணைத்தே
3.அந்த உணர்வின் தன்மை உணவாக எடுக்கும் அந்த (ஒளியான) அணுக்கள்.
4.அப்பொழுது நமக்குள் அந்த உணர்ச்சிகளைத் தடுக்கும் அணுக்களாக இது விளையும்.

அத்தகைய அணுக்கள் விளைந்தால் வாழ்க்கையில் வரும் இருளை அகற்றி நம் மனதைத் தூய்மைப்படுத்தி மன நோயாகவோ உடல் நோயாகவோ மாற்றாதபடி நம்மை மகிழ்ந்து வாழச் செய்யும்.

இது எல்லாம் நம் வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டும்.