விநாயகர் தத்துவத்தில் கூறப்பட்டுள்ளபடி ஆதிமூலம் என்ற உயிர் பல கோடி
உடல்களில் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும்… விடுபட வேண்டும்… என்று சேர்த்துக்
கொண்ட வினைகளுக்கு நாயகனாக தீமைகளிலிருந்து விடுபடும் உடலாக மனிதனை உருவாக்கியது “விநாயகா…
கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா…!” என்று உயிரை வணங்கும்படிச் செய்கின்றனர்.
நம் உடல் நஞ்சை மலமாக மாற்றிய பின் எதையுமே உருவாக்கும் சக்தி பெற்ற மனிதனாக உருவானது.
இது எல்லாம் பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாடி அகஸ்தியன் கூறிய பேருண்மைகள்.
1.நாம் நுகர்ந்த உணர்வுகள் சிவமாகி
2.அந்த உணர்வின் இயக்கம் வினையாகி
3.வினைக்கு நாயகனாக வாழ்க்கையாகி
4.அதன் உணர்வின் தன்மை உடல்களை மாற்றி
5.இன்று நஞ்சினை மாற்றிடும் திறன் பெற்ற மனிதனை உருவாக்கியது.
சூரியனுக்கெல்லாம் சந்தர்ப்பத்தால் ஏற்படும் நிலைகள் தான் உருமாற்றங்களும்
உணர்வுகள் மாற்றம் எல்லாமே. அதே போல் தான் செடிகள் மாற்றம் கொடிகளின்
மாற்றங்களும். (இவைகள் எல்லாம் தானாக எதையும் மாற்றிட முடியாது)
எத்தனையோ கோடிச் செடிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒன்றை ஒன்று தாக்கப்படும்
பொழுது உணர்வுகள் மாறுகின்றது.. அதனின் சத்துகளும் ரூபங்களும் மாறுகின்றது.
அதே போல் எது வலு கொண்டதோ உயிரினங்கள் ஒன்றுக்கொன்று கொன்று சாப்பிடுகின்றது. ஆனால் அதே சமயத்தில்
உணர்வுகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றது,
ஆனால் மனிதனான நாம் முழு முதல் கடவுள்…!
ஏனென்றால் இன்று புதிதாக ஒரு உயிரினத்தையே உருவாக்கக்கூடிய அளவுக்கு
விஞ்ஞானிகள் வந்துவிட்டார்கள். உயிரணுவின் நிலையையே மாற்றும் தன்மைக்கு
வந்துவிட்டார்கள்.
1.ஒவ்வொரு உடல்களிலும் உள்ள அணுக்களை மாற்றுகின்றான்.
2.ஒரு உயிரணு கருவிலே இருந்தாலும் அந்தக் கருவிலேயே இவன் நேரடியாக
2.அந்தக் கருவுக்குண்டான நிலைகளை மாற்றி உருவத்தையே மாற்றுகின்றான்..
3.இப்படி உயிரினங்களையே மாற்றும் தன்மைக்கு வந்துவிட்டான் விஞ்ஞானி.
மனிதனுக்கு நோய் வந்தால் அந்த உடலில் உள்ள எந்தெந்த திசுக்கள் பலவீனம்
அடைகின்றதோ அவைகளுக்கு இஞ்செக்சன் மூலம் மருந்தைச் செலுத்தி திசுக்களை செருகேற்றி
மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.
ஒரு உறுப்பில் குறைகள் ஏற்பட்டாலும் அதையே மீண்டும் அந்தத் திசுக்களை வலு
கொண்டு மாற்றும் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.
1.திசுக்களை மாற்றி மாற்றி
2.இன்று ஒரு மனிதனை ஆயிரம் ஆண்டுகள் கூட வாழ வைக்க முடியும் என்று
3.அணுக்களின் தன்மையைக் கூட்டிச் செயல்படுத்துகின்றனர்.
ஆனால் ஆயிரம் ஆண்டு காலம் இப்படி வாழ்ந்து வந்தாலும் அதற்குப் பின் எங்கே
செல்வது…?
உயிர் ஒளியானது அதற்கு அழிவில்லை.. வேகா நிலை கொண்டது. ஆனால் உடல்கள்
கருகுகின்றது. இது மெய் ஞானிகள் கண்டது. ஆகவே உயிரைப் போல நாம் வேகா நிலையை அடைதல்
வேண்டும்.
1.அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக ஆனது
2.அதைப் பெறுவது தான் “நமது கடமையாக..” இருக்க வேண்டும்.
ஏனென்றால் எத்தனையோ கோடித் துன்பங்களிலிருந்து மீட்டி நம்மை மனிதனாக
உருவாக்கிய உயிரை ஈசனாக மதித்து அவனால் இந்த மனித உடலைப் பெற்று ஆறாவது அறிவால்
அறிந்து கொள்ளும் சக்தியும் பெற்றிருக்கின்றோம்.
அதை எல்லாம் இப்பொழுது உபதேசித்தாலும்
1.அதைக் கேட்டுக் கொள்ளும் அறிவும்
2.கேட்டுக் கொள்ளும் அறிவிருந்தாலும் அதை மாற்றிக் கொள்ளும் அறிவும்
உங்களுக்கு உண்டு.
இப்படித் தீமைகளை மாற்றி நல் உணர்வுகளை நாம் சேர்த்துக் கொண்டோம் என்றால் நம்
வாழ்க்கையை அமைதியான வாழ்க்கையாகக் கொண்டு வரலாம்.
இந்த லௌகீக வாழ்க்கையில் எப்படி வேதனைப்பட்டாலும் நாம் கடைசியில் கொண்டு போவது
என்ன…? வேதனையைத்தான் கொண்டு போக வேண்டும்.
1.வேதனையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நாம் பெற்றுப்
பழகினோம் என்றால்
2.அந்த வேதனையை நீக்கும் சக்தியாகப் பேரொளியாக நமக்குள் வளர்கிறது.
2.அந்த உணர்வை நம்முடன் சேர்த்துக் கொண்டு வரும் பொழுது நாம் பிறவி இல்லா
நிலையை அடைகின்றோம்.
இதைப் பெறுவதற்குண்டான முயற்சிகளை நீங்கள் எடுங்கள்… எமது அருளாசிகள்…!