ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2019

நாரதனைக் “கலகப்பிரியன்…” என்று ஏன் சொல்ல வேண்டும்…?


இந்த வாழ்க்கையில் சொத்து சுகம் என்ற நிலைகள் வரப்படும் பொழுது இந்த உடலின் பற்றே அதிகரிக்கின்றது.

அந்த உடல் பற்றினால் சந்தர்ப்பத்தில் நம் காரியங்கள் தடைப்பட்டால் வேதனைப்படுகின்றோம்.

தொடர்ந்து வேதனைப்படும் உணர்வுகள் நமக்குள் வரப்படும் பொழுது அதையே…
1.நாம் பிடிவாதமான முறையில் அந்த வேதனை உணர்வுகளை அடைகாத்து
2.வேதனையை உருவாக்கும் அணுக்களை வளர்த்து
3.யாரால் வந்தது…? என்று அந்த எதிரிகளை எண்ணியபடி நம் தொழிலைப் பலவீனப்படுத்தி
4.அதனால் நம் நல்ல எண்ணங்களையும் தடைப்படுத்தி
5.கடைசியில் ஒருவரிடத்தில் உதவிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் கூட
6.நாம் வளர்த்துக் கொண்ட இந்த உணர்வுகள் எல்லாம் சேர்த்து “நமக்கே எதிரியாகின்றது…”

உதவி செய்வோரின் நிலைகளிலிருந்தும் மாறுபடச் செய்கின்றது. இதைப் போல் நாம் செயல்படும் உணர்வுகள் நமக்குள் அந்த் எதிரியை உருவாக்கும் தன்மை தான் வருகின்றது.

அதை நாம் தடைப்படுத்த வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியிலேயும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வினை உடலுக்குள் அந்தக் கருவாக உருவாக்க வேண்டும்.

இந்த உணர்வை நாம் வளர்த்துக் கொண்டே வந்தோம் என்றால் இந்த வாழ்க்கையில்…
1.நாரதன் கலகப் பிரியன் கலகம் நன்மையில் முடியும்.
2.அதாவது நமக்கு இப்படித் தீங்கு செய்துவிட்டானே… என்ற இந்த எண்ணங்கள் வளராது அதைத் தடைப்படுத்தும்
3.அந்த அருள் ஞானிகளின் உணர்வை நமக்குள் வளர்க்க வளர்க்க இது வலு பெறும்.

எனக்கு இப்படிச் செய்கிறானே…! என்ற கோபமான வேதனையான எண்ணத்தை விடுத்துவிடும் அல்லது விடுக்கும்படிச் செய்யும். அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் அதிகமாக வளர்க்கும்படி செய்யும்.

நாம் எடுக்கும் இத்தகைய எண்ணங்கள் நமக்கு எவர் தீங்கு செய்கின்றாரோ அவர்களுக்குள் பாய்ந்து அதை நினைவுக்குக் கொண்டு வரும்.
1.நம்மை எண்ணும் பொழுதெல்லாம் அவர்களைப் பலவீனப்படுத்தும்.
2.தீங்கு செய்யும் நிலைகளை மடக்கும்.

ஏனென்றால் இந்த உணர்வுகளைத்தான் நாரதன் கண்ணனிடம் செல்வார்… இந்திரனிடம் போகின்றார்… அசுரனிடமும் போகின்றார்…  எல்லோரிடமும் போகின்றார்… என்று இந்திரலோகத்தையே சொல்லிக் காட்டுகின்றார்கள்.

ஒவ்வொருவரிடமும் இந்த உண்மைகளை உணர்த்திச் சொல்லி அந்த உணர்வுகளை எப்படிச் சீர்ப்படுத்துகிறார் என்ற நிலைகளை விளக்கவுரைகளாகக் காட்டுகின்றார்கள்.

ஆக நமக்குள் இருக்கக்கூடிய பிடிவாதமான குணங்களுக்கு அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை ஒவ்வொன்றும் படரச் செய்து அது மட்டுமல்லாதபடி…
1.எதிரி தீங்குகளையும் தவறுகளையும் செய்கிறான் என்றால்
2.இதே உணர்வுகள் கண்கள் கொண்டு பார்க்கப்படும் பொழுது
3.இந்த எண்ணம் அவர்கள் நுகரப்படும் பொழுது ஊடுருவி
4.பிடிவாதமாக இருப்பதையும் தொந்தரவு செய்வதையும் உணர்த்தி
5.அதனால் உங்களுக்கு என்ன விளைவு ஏற்படுகிறது…? என்றும் அவர்களுக்குள் உணர்த்தச் செய்கின்றது.

இதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் அவன் கண்ணனிடத்திலும் செல்கிறான் மும்மூர்த்திகளிடமும் செல்கிறான் மற்றவர்களிடத்திலும் செல்கின்றான் என்ற நிலையில்
1.அந்த நாரதன் என்ற மகரிஷியின் அருள் உணர்வுகள்
2.நாம் பகைவர்களை எண்ணும் பொழுது கூட
3.கண்ணன் அங்கே அழைத்துச் சென்று அங்கே பதியச் செய்து இந்த உணர்வை ஊட்டுகின்றான்.

அதாவது நாம் எதைக் கொண்டு எண்ணுகின்றோமோ இந்த உணர்வலைகள் படரச் செய்யப்படும் பொழுது இந்தக் கண்களின் நினைவாற்றல் கொண்டு அவர்கள் நம்மை எண்ணும் பொழுதெல்லாம்
1.அதே கண்கள் அங்கே அழைக்கப்பட்டு இந்த நாரதன் உள்ளே சென்ற பின்
2.அவர்கள் செய்யும் தவறான உணர்வுக்குள் நாரதன் கலகப் பிரியனாகி
3.அந்தக் கலகமோ நன்மையில் முடியும்… அப்பொழுது அந்த உணர்வுகள் சென்ற பின் அது அங்கே அடக்குகின்றது.

அவர்கள் அறியாது செய்யும் இச்சைகளும் வெறுப்பான நிலைகளில் அவர்கள் செய்யப்படும் பொழுதும் அவராலும் சந்தோஷத்தை அனுபவிக்க முடிகின்றதா… அதனால் தொல்லைகள் அனுபவிக்கின்றனர்… வெறுப்பலைகளைச் சுவாசிக்கின்றனர்…! அவர்களுக்கும் இந்த நோய் வருகின்றது என்பதை முழுமையாக உணர்த்திக் காட்டுகின்றான் என்று காவியங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

நாரதனை மையமாக வைத்துக் காட்டினாலும் அந்த நாரதன் யார்..? அகஸ்தியமாமகரிஷி அவர் உயர்ந்த சக்தி பெற்று இன்று துருவ நட்சத்திரமாக இருப்பதும் அதனைப் பின்பற்றிச் சென்றோர் சப்தரிஷி மண்டலமாக இருக்கின்றார்கள். துருவ நட்சத்திரத்திலிருந்து வெளி வரும் சக்திகளைத்தான் ரிஷியின் மகன் நாரதன் என்று காட்டுகின்றார்கள்.

காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அந்த அரும்பெரும் சக்திகளை எடுத்து வளர்த்துக் கொண்டு கண்ணிலே எண்ணும் பொழுது
1.யார் தவறு செய்தாலும் அவர்கள் திருந்த வேண்டும்
2.அவர்கள் அறியாமை நீங்க வேண்டும் என்ற இந்த உணர்வைச் செலுத்திப் பாருங்கள்.
3.இந்த உணர்வை நாம் செலுத்தப்படும் பொழுது அவர்களின் தீமையின் உணர்வுகள் நமக்குள் விடுவதில்லை.

அவர்கள் தீமை செய்ய வேண்டும் என்ற உணர்வுகள் எண்ணும் பொழுது இது ஊருவும். உதாரணமாக… எப்படித் தீங்கு செய்தான் என்று எண்ணும் பொழுது புரை ஓடுகின்றதோ அதைப் போல் இந்த அலைகளை நாம் எடுத்துக் கொண்டால்
1.அங்கே அவர்கள் தீங்கும் செய்யும் உணர்வுகளைத் தடைப்படுத்துகின்றது
2.நம் உணர்வுகள் அவர்களைத் திருத்தவும் உதவுகின்றது.

இதை எல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.