ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 18, 2019

கொடுமையான தீங்கை ஒருவன் செய்தால் பதிலுக்கு என்ன செய்கின்றோம்…! எதைச் செய்ய வேண்டும்..? ஏன் செய்ய வேண்டும்…?


உதாரணமாக எடுத்துக் கொண்டால்… என்ன…! சாமிக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது...! தபோவனத்தில் இருப்பவர் இந்த மாதிரிச் செய்துவிட்டாரே என்று..! சில பேருக்கு இந்த எண்ணம் வரலாம்.

எனக்கு (ஞானகுரு) இந்த உடலைப் பற்றிய நினைப்பே இல்லை.

இந்த மனித வாழ்க்கையில் எப்பொழுது நாம் இந்த உடலை விட்டுப் பிரிந்தாலும் நம் ஆன்மா அந்த ஒளியின் நிலை பெறுகின்றது.

1.அவன் தீங்கு செய்துவிட்டான்… (தபோவனத்தில்) என்ற எண்ணங்கள் வரப்படும் பொழுது
2.அதை எடுத்துக் கொண்டால் பழி தீர்க்கும் எண்ணங்களாக வருகின்றது.

குருநாதர் (ஈஸ்வரபட்டர்) எனக்குப் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். கை விரலை நீட்டினால் ஒரு மரத்தையே தூக்கி எறியச் செய்யும்.

எண்ணத்தால் எண்ணி.. இவன் மடிந்துவிடுவான்.. அல்லது இப்படித்தான் ஆகிவிடுவான்…! என்றால் இந்த உணர்வின் தன்மை பதிவாகி அவனுக்குள் வேலை செய்யும். துரித நிலையிலும் மடிந்து விடுவான் (தீங்கு செய்தவன்).

நாம் ஏன் சொல்வானேன்…? அவனை ஏன் நாம் வீழ்த்துவானேன்…! அவன் எண்ணிய உணர்வுகள் அவனுக்குள் வீழ்த்தும் அறியும் தன்மை வரும்.

இப்படித்தான் நாம் இருக்கின்றோமே தவிர குருநாதர் பல சக்திகளையும் கொடுத்துள்ளார். ஆனால் அது பயன்படுத்துவதற்கு அல்ல…!

ஆஹா… எங்கள் சாமி எப்படிப்பட்டவர் பார்…! கெடுதல் செய்தான்…  விரலை நீட்டினார்… விழுந்து விட்டான்… என்று நீங்கள் பெருமை பேசலாம்…!

அப்படிச் செய்தால் இது…
1.மற்ற அவன் உடலில் உள்ள நல்ல அணுக்களையும் சேர்த்துக் கொன்றதாகத் தான் அர்த்தம்.
2.அவனுக்குள் இருக்கக்கூடிய தீமையின் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சி அடைந்ததாகத் தான் பொருளாகுமே தவிர
3.அவன் தீங்கின் செயல் நமக்குள் வந்து
4.அவன் உணர்வு வலிமையாகி நம்மை இயக்கும் பொழுது
5.அவன் தான் தவயோகியாகின்றான்.

அப்பொழுது நமக்குள் என்ன இருக்கின்றது…?

ஆகவே இந்த அருள் ஞானத்தின் வலிமை கொண்டு தாங்கும் சக்தி வர வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்து அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்து அதைத் தான் வலிமையாக்க வேண்டும். அந்த உயர்ந்த உணர்வின் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இன்றைய செயல் நாளைய சரீரம்…!

1.அருள் ஒளியின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக
2.இனி அகண்ட அண்டத்தில் என்றும் நாம் வாழ முடியும் என்ற நிலையை நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

மனிதனாக ஆன நாம் இதைச் செயலாக்கும் தன்மைக்கே வர வேண்டும்.