நாம் எதிர்பார்த்த அளவுக்கு தொழில் நடைபெறவில்லை என்றால் அடுத்த நிமிடம் நாம்
என்ன எண்ணுகின்றோம்…?
சோர்வடைகின்றோம்... சோர்வை எந்த வழியில் அடைகின்றோம்…?
நாம் எண்ணியது நடக்கவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு (நல்ல அணுக்களுக்கு)
அதற்குகந்த ஆகாரம் கிடைப்பதில்லை.
1,நாம் எதை எண்ணி அந்த உணர்வின் அணுக்கள் வளர்ந்திருக்கின்றதோ
2.மகிழ்ச்சியான உணர்வுகள் வரவில்லை என்றால் அந்த அணுக்கள் சோர்வடையும்.
அதனுடைய சக்தியை இழக்கும் பொழுது தான் சோர்வான உணர்வை நாம் சுவாசிக்கின்றோம். அப்பொழுது
சோர்வடையும் அணுக்கருக்களாக நம் உடலில் உருவாகிவிடுகின்றது.
இப்படி… வியாபாரம் நடைபெறவில்லை…! என்றால் அடுத்தடுத்து சோர்வடைவோம் உணர்வுகள்
வந்து ஒரு கோழி தன் இட்ட முட்டையை அடைகாப்பது போல் அந்த அணுக்கள் நமக்குள் பெருகத்
தொடங்குகின்றது.
சோர்வான அணுக்கள் பெருகும் பொழுது இதற்கு முன்னாடி எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை
செய்து கொண்டிருந்தாலும் அல்லது வியாபாரத்திற்குச் சென்றிருந்தாலும் கூட… அடுத்தாற்போல்
என்ன செய்வோம்…?
இங்கே பக்கத்திலேயே நல்ல சரக்கு கிடைக்கிறது என்றாலும் கூட இந்தச் சோர்வான
உணர்வு வந்தவுடனே
1.சே…! எங்கே பார்த்தாலும்… எப்பொழுது பார்த்தாலும் இதே தான் ஆகிறது…! என்ற
இந்த உணர்வு கொண்டு
2.அந்தக் குறித்த நேரத்திற்கு அந்த உணர்வுகள் செயல்படுவதில்லை… வேலை செய்ய
விடுவதில்லை.
மேலும் மேலும் இந்த உணர்வுகளை அதிகமாக வளர்க்கப்படும் பொழுது எதன் வழியில்…
யாரால்… இது போக முடியாமல் தடைப்படுத்தப்படுகிறதோ… “அவருடைய நினைவு” வருகின்றது.
அந்த உணர்வின் தன்மை தனக்குள் வளர்த்து
1.நம்முடைய சோர்வும்
2.அவர்கள் உணர்வையும் இந்த இரண்டையும் சேர்த்து ஒரு அணுவாக உருவாகும்.
3.அதாவது “இவரால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது…! என்ற இந்த உணர்வுகளை
எண்ணி எண்ணி வளர்த்து விட்டால்
4.அந்த அணுக்கருக்கள் இதன் வரிசைப்படுத்தி “இரண்டாவது அணுக்களாக” இது
விளைகின்றது.
அப்படி விளைந்து விட்டால் நமது வாழ்க்கையில் அந்த அணுத் தன்மை பெருகிப் பெருகி
நமக்குள் அது நோயாக உருவாகத் தொடங்குகின்றது.
நோயின் தன்மை ஆன பின்… இந்த வாழ்க்கையில் அதிகமாக நாம் அதே எண்ணங்களை
எடுத்துவிட்டால் உடலுக்குப் பின் அவருடைய உடலுக்குள் செல்கின்றோம்…!
அதே மாதிரி கடையை வைத்து வியாபாரம் நடத்துகின்றார்கள். அங்கே அடிக்கடி எலிகள்
தொல்லை கொடுத்து அங்கிருக்கும் பொருள்களை உணவாக உட்கொள்கிறது.
அதைப் பார்த்ததும்… “எலி தொல்லை தாங்க முடியவில்லை…!” என்று அந்த எலியின்
உணர்வுகள் நிறைய வரும்... உடலுக்குள் அந்த அணுக்கள் கருவாகும்.
இவர்கள் என்னதான் எலியைப் பிடித்து நசுக்கிக் கொன்றாலும் கூட அந்த எலியின்
உணர்வுகள் இங்கே வந்து கொண்டே தான் இருக்கும்.
1.அந்த எலியின் உணர்வுகள் வளர்ந்து விட்டால்
2.மனித உடலை உருவாக்கிய அணு செல்கள் அது மாறுபடுகின்றது.
3.கடையில் எலிகள் அதிகமான பின் அந்த எண்ணங்களே தோன்றும்.
இதைப் போல் நுகரும் உணர்வுகளால் உடலில் உள்ள உறுப்புகள் சிறுகச் சிறுக குறையத்
தொடங்கிவிடும். நினைவு பூராமே அந்த எலியின் பால் வரும்.
அவர்கள் நோய்வாய்ப்பட்ட பின் பாருங்கள்…! இங்கே எலி வருகிறது.. அந்தப் பக்கம்
போகிறது.. அதைக் கடிக்கிறது…! என்று அவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள்.
சில பேர் மரணமடையப் போகும் முன் எலியின் பால் எண்ணங்களை அதிகமாகச் செலுத்தியிருந்தால்
அடுத்து அவர்கள் எங்கே செல்வார்கள்…?
இறந்த பின் இன்னொரு மனித உடலுக்குள் சென்று இந்த உணர்வை முழுமையாக்கிக் கொள்வார்கள்.
அந்த உடலுக்குள் சென்று இந்த எலியின் நினைவு தனக்குள் வரப்படும் பொழுது அதை முழுமையாக்கிய
பின் அங்கிருந்து சென்ற பின்
1.எலியின் உடலுக்குள் தான் உயிர் அழைத்துச் செல்கின்றது.
2.எலியின் உணர்வை வளர்த்து அதனுடைய கருவாகி இந்த உயிர் எலியாகத்தான் பிறக்கச்
செய்கிறது.
நாம் நினைக்கிறோம் மனிதனாக இன்று இருக்கின்றோம் என்று…! ஆனால் மனிதனுக்கு
அப்புறம் பிறவி என்ன…? என்கிற வகையிலே தெரிந்து கொள்ள வேண்டும்.
இதற்குத்தான் “நந்தீஸ்வரன் சிவனுக்குக் கணக்குப் பிள்ளை..!” என்று ஞானிகள் தெளிவாகக்
காட்டியுள்ளார்கள்.