ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 17, 2019

புரையேறும் உணர்வால் எத்தகைய பாதிப்பு வரும்…? என்று தெரிந்து கொள்ளுங்கள்


நண்பர்களாகப் பழகுகின்றனர். பழகிய நிலைகள் கொண்டு சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்படைகின்றது. வெறுப்படையும் பொழுது தொழிலில் நஷ்டம்.

இரண்டு பேருமே…
1.எனக்குத் துரோகம் செய்தார் என்று இவரும் எண்ணுகின்றார்
2.துரோகம் செய்தார் என்று அவரும் எண்ணுகின்றார்.

சந்தர்ப்பத்தால் சிறு பிழைகள் வரப்படும் பொழுது பலவீனமான நிலையை உருவாக்கி விடுகிறது. அதை நுகரப்படும் பொழுது அந்தப் பலவீனத்தை ஏற்படுத்தும் அணுக்கள் உடலுக்குள் அந்தக் கருக்களாக உருவாகத் தொடங்கிவிடுகின்றது.

இவ்வாறு அதிகமாகி விட்டால் அது தன் உணர்ச்சியைத் தூண்டும்.

அப்பொழுது சந்தேகம் என்று வந்துவிட்டால் அதை வளர்க்கும் பொழுதெல்லாம் இந்த உணர்வுகள் கண்களிலே பாய்ச்சும்.
1.கண்ணிலே பாய்ச்சப்படும் பொழுது
2.நல்லவராக இருந்தாலும்… சந்தேகப்பட்டுப் பார்த்த பின் என்ன ஆகும்..?

இந்தப் பார்வையைக் கண்ட பின் அவர் தலைகள் ஆடுவதும் உடலை அசைப்பதையும் வித்தியாசமான நிலைகள் வரும்.

நல்லவராகவே இருக்கட்டும் சந்தேகப்பட்டு ஒருவரை எண்ணிப் பாருங்கள்.
1.உங்கள் பார்வை பட்டவுடனே… ஏன் இப்படிப் பார்க்கிறார்…? என்ற நிலையில்…
2.நான் நினைத்தேன் அந்தச் சந்தகேகம் சரியாகப் போய்விட்டது என்ற இந்த உணர்வுகள் அங்கே இயக்கி விடுகின்றது.

இதைப் போல அந்த உணர்வுகள் இயக்கத் தொடங்கினால் அது வளர்ச்சி அடைகின்றது. அந்தச் சந்தேகத்தின் நிலைகள் கொண்டு ஒருவருக்கொருவர் “பகைமை” வளர்கின்றது.

அந்தப் பகைமை வளர்ந்த பின்னாடி வெகு தூரத்தில் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழ்ந்தாலும் இரண்டு பேரிடமும் பழகிய ஒரு நண்பன் வருகின்றான்.

அவன் வந்தவுடனே சொல்கிறான். இந்த மாதிரி உன் நண்பரை அமெரிக்காவில் பார்த்தேன் என்று…!

அவனா…? துரோகி.. உருப்பட மாட்டான் அவன்..! என்ற இந்த உணர்வுடன் சொல்கள் வெளி வருகின்றது. ஏனென்றால் அவனை நினைவுபடுத்தியவுடனே “கண்ணின் நினைவு” அங்கே செல்கிறது.

கண்ணின் நினைவு அங்கே செல்லப்படும் பொழுது ஏற்கனவே உள்ள அந்தப் பகைமை உணர்வுகள் என்ன செய்கிறது…? பதிவாகின்றது.

பதிவான உணர்வுகளுடன் அது மோதியவுடனே
1.அங்கே அவர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இது ஊடுருவி
2.உறுப்புகளை இயங்கவில்லை என்றால் “புரை” என்ற நிலையில்
3.ஒரு சோற்றுப் பருக்கை நுரையீரல் பக்கம் இந்த மூச்சு இழுக்கும் பொழுது உள்ளுக்குள் போனால் அவ்வளவு தான்…!

ஏனென்றால் புரைகளில் இது மிகவும் விசித்திரமானது…! உணவு உட்கொள்ளும் பொழுது இந்த மாதிரிப் புரைகள் ஏற்பட்டால் அந்த ஆகாரம் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.

சிறிது தேங்கிவிட்டால் அங்கே நாளடைவில் அழுகும். அந்த அணுக்கள் அங்கே பெருகி டி,பி. போன்ற நோய்களை உருவாக்கும் தன்மை வந்துவிடும். அந்த நுரையீரலையே ஓட்டை போடும் அளவுக்கு ஆகிவிடும்.

ஒரு பழத்தை வெளியிலே அப்படியே வைத்திருந்தால் எப்படி அது அழுகிப் புழுக்களாகிப் பின்  வெடித்துவிடுகின்றதோ அதைப் போல உடல் உறுப்புகளைச் சிதைக்கும் தன்மை வந்துவிடும்.

நாம் நினைக்கின்றோம்… சாதாரணமாகத் தான் நினைத்தோம்..! என்று. ஆனால் இயற்கை… இந்த உணர்வுகள் எப்படி மாறுகிறது…? என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடமும் குருநாதர் இதை எல்லாம் தெளிவாக்குகின்றார்.

ஒரு காரை ஓட்டிச் சென்றாலும் கூட முதலில் சொன்ன மாதிரி துரோகம் செய்தான் பாவி..! என்று எண்ணினால் புரை ஓடுவது போன்று ஆனால்
1.எதிரிலே வரக்கூடிய வாகனங்களைக் கண் கவர்ந்து சொல்லும் நிலைகளை இது இடைமறித்து
2.அவர் அதைச் சுவாசித்து விட்டால் காரை பிரேக் போடுவதோ ஸ்டீரிங்க் திருப்புவதையோ இழக்கின்றார்
3.விபத்துக்குள்ளாகி விடுகின்றது…!
4.துரோகம் செய்தான் பாவி என்று எண்ணப்படும் பொழுது இவ்வாறு இயக்கிவிடுகின்றது.

சந்தர்ப்பத்தில் நம்முடைய பழக்கவழக்கங்களில் நம்முடைய எண்ணங்களே நமக்கு எதிரியாகின்றது. ஆக அவர்கள் எண்ணும் சந்தர்ப்பமும் நாம் செயல்படும் சந்தர்ப்பமும் இந்த வெறுப்பின் உணர்வு வந்துவிட்டால் அங்கே விபத்துக்குள்ளாக்கி விடுகின்றது.

நாம் எங்கே சென்றாலும் இந்த ஆத்ம சுத்தியை மறவாது செய்து கொள்ள வேண்டும். ஆத்ம சுத்தி செய்து..
1.என்னுடைய பார்வை அனைவரையும் நல்லவராக்க வேண்டும் என்ற
2.இந்த எண்ணங்கள் கொண்டு நாம் செல்லப்படும் பொழுது
3.அந்தத் தீமையின் உணர்வுகள் நம்மை இயக்காது தடைப்படுத்த முடியும்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து வளர்த்துக் கொண்டே வருதல் வேண்டும்.

ஒருவர் நம்மிடம் வந்து இந்த மாதிரி உனக்குத் தீங்கான நிலைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றான் உன்னுடைய நண்பன் என்று சொன்னால் அடுத்த கணம் என்ன செய்ய வேண்டும்..?

ஈஸ்வரா…! என்று உங்கள் உயிருடன் தொடர்பு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் பெறவேண்டும் என்று இந்த உணர்வை உடலில் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அவர் அங்கே சொல்லப்படும் பொழுது
1,என்னை நினைக்கும் பொழுதெல்லாம் அவன் நல்லவனாக வேண்டும்
2.அவன் அறியாத இருள்கள் நீங்க வேண்டும்
3.என்னைப் பார்க்கும் பொழுதும் என்னை நினக்கும் பொழுதும் அவனுக்கு நல்ல எண்ணங்கள் வர வேண்டும் என்ற
4.இந்த உணர்வின் நினைவை வைத்து கண் கொண்டு நாம் பார்க்கப் போனால்
5.கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கிறான் என்று காவியத்தில் உணர்த்தியது போல்
6.நம் உணர்வின் தன்மை தாங்கிச் செல்லும் தன்மை நாரதன் என்ற உணர்வு கொண்டு அங்கே ஆணையிடப் போகும் பொழுது
7.இந்த உணர்வுகள் அவர்கள் உணர்வுக்குள் ஊடுருவி அங்கே இருக்கும் பிடிவாதமான குணங்களை அகற்றுகின்றது.
8.நமக்கும் நல்லதாகின்றது… அவர்களையும் நல்வழிப்படுத்தும் சந்தர்ப்பமாகின்றது.

ஆகவே நாம் எண்ணும் எண்ணங்கள் நம்மை எப்படி இயக்குகிறது…? என்ற நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.