“மரண பயம்…!” என்ற உணர்வு மனிதனுக்கு மட்டுமல்ல. ஜீவ பிம்பம் அனைத்திற்குமே
உண்டு. பிறப்பில் நாம் எடுக்கும் சுவாச உணர்வின் அலைத் தொடரில் பிறந்த
குழந்தைக்கும்… ஏன்… கருவில் இருக்கும் குழந்தைக்குமே… மரண பயம் என்ற அச்ச உணர்வு
உண்டு.
பிறந்த குழந்தைக்கு அந்தக் குழந்தையின் உடலில் கடிக்கும் கொசுவினால் வலி
ஏற்பட்டாலும்… உலுக்கும் தன்மை கொண்டு உலுக்கி விழுந்து சில குழந்தைகள் வீர்…!
என்று அழவும் செய்யும். அதிர்வு நிலை ஏற்பட்டவுடன் இக்குழந்தைகள் அழுகும்.
கருவிலேயே மரண பயம் என்ற அச்ச உணர்வுடனேதான் கருவே உருவாகின்றது. அதன் வழியில்
கரு வளர்ச்சியின் நிலை கூடி வருவதினால் இவ்வுணர்வின் அச்சம் மாறி “மரண பயத்தை
எப்படி விட முடியும்…?”
1.மரண பயம் என்ற உணர்வின் பிடியில் வாழ்க்கை உள்ளதனால்தான்
2.மனித வாழ்க்கையில் சோர்வும் இன்னலும் கலகங்களும் கோபத் தன்மையும்
3.பொறாமை உணர்வும் போட்டி நிலைகளும் பேராசை நிலையும் புகழ் நிலையும்
ஏற்படுகின்றன.
ஆனால்
1.”பிறவா வரம் வேண்டும் இறைவா…!” என்று இறை சக்தியை இறைஞ்சி
2.இன்னமுதுடன் இனிதிசை கொண்ட இல்லற இன்ப இல்வாழ்க்கை என்ற இனிய வழித் தொடரில்
3.ஈன்றெடுக்கும் இறைச் செல்வ மக்களுடன் இயற்கை வழி இனிய ஒளி இன்பம் பெற
4.பிறவா வரம் பெறும் இறை ஞானம் நிலையுடன்தான்…
5.வாழ்க்கை நிறைவு செ(ய்)ல்வது “பிறவா வரம் பெறும் நிலை…!”
பிறவா வரம் பெறும் உணர்வு கொண்டு சேமிக்கும் உணர்வின் எண்ணத்தில் கூடும் அமிலச்
சாற்றில்
1.மரண பயம் என்ற உணர்வுடன் வளரும் பருவக் காலமும் வளர்ந்த வாழ்க்கைக் காலமும்
2.மனிதனின் உணர்வில் இவ் அச்ச உணர்வினால் தான் இப்பேராசை புகழ் போட்டி பொறாமை
எல்லாமே வருகிறது.
ஆறிலும் சாவு… நூறிலும் சாவு…! என்ற பயத்தையும் ஊட்டி… பின் பிறவா வரம் என்ற
இயற்கை உணர்வுடன் நாம் ஒன்றிச் சென்றால் இல்லறம் இன்பம் கொள்ளுமா…! இயற்கை
வாழ்க்கையும் நமக்குக் கூடுமா…? நாளை… நாளை…! என்ற உணர்வே மனிதனுக்கு உழன்று கொண்டு
உள்ளது.
தாவரங்களைப் போன்றும் பூமிக்கடியில் வளரும் கனி வளங்களைப் போன்றும்…
1.பூமியின் ஈர்ப்புப் பிடியுடன் வளராமல்
2.எங்கும் சென்று எதனையும் செயலாற்றக்கூடிய நிலையில் நடந்தோடும் செயலைக் கொண்ட
ஜீவ பிம்ப மனிதனுக்கு
3.இன்றைய நாகரீகச் சுழற்சிப் பிடிப்பு வாழ்க்கையில்
4.தன் ஜீவனுக்குப் பிறகு சேமிக்கும் பேராசை பொருள் செல்வச் செயலினால் தான்
5.இன்றைய ஜீவ சக்திகளின் மரண பய உணர்வு ஒவ்வொரு நொடிக்கும் அதிகப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் தான் உண்ணும்… உடுக்கும்… வசிக்கும்… வாழ்க்கைப் பிடியில் சிக்கி…
தேவைக்கு மேல் அடையும் பேராசை குணத்தினால் தன் வாழ்க்கையையே மரண பயத்திற்கு அடகு
வைத்து விட்டான் இன்றைய கலி மனிதன்.
அதிலிருந்து இஜ்ஜீவ பிம்ப உடலை மீட்டத் தெரியாத அச்ச உணர்வில் இருக்கும் வரை
1.உண்ணும் உணவையும் உணரும் காம இச்சையின் இன்பத்திலும்
2.செயற்கை வாழ்க்கை முறையிலும் தான் இன்பம் உள்ளது என்று ஏங்கியே வாழ்ந்து
3.இதன் தொடர் நிலையிலேயே நீடிக்க அதற்கு வேண்டிய பொருளை ஈட்டவும்
4.அதிலே தவறு ஏற்படும் பொழுது செய்த தவறை மறைக்கப் பிறிதொரு தவறின் நிலைக்குச்
சென்று
5.பொருள் (சொத்து செல்வம்) என்ற சேர்க்கை இருந்தால் தான் எந்த இன்பத்தையும்
அடையலாம்
6.எந்தச் செயலையும் செய்யக்கூடிய “வல்லுனரையும்” பணத்தால் சேவகம் (அடிமையாக்க)
செய்ய வைக்க முடியும்..! என்ற குணமும்
7.முன்னேறிய இன்றைய அரசியல் ரீதியிலும் பொருள் என்ற பிடியில் புகழ் என்ற
இன்பம் காணவும்… சென்று விட்டதால்
8.உயர்ந்த ஞான சக்தி கொண்ட ஞான வித்தகர்களின் ஞான போதனையே இவ்வாயிரம் ஆண்டு
காலத்தில் அற்றுப்போய் விட்டது.
ஒவ்வொரு மனிதனும் தன் ஜீவ சக்திக்குத் தகுந்த தேவையின் செயல் கொண்டு வாழாமல்
1.உடல் குன்றி விட்டால்… நாளை என்ன செய்வோம்…?
2.செய்யும் தொழில் நசிந்து விட்டால்… நாளை என்ன செய்வோம்…? என்ற எண்ணத்துடனே
வாழும் நிலை உள்ளது.
இன்று வாழும் சுக வாழ்க்கைக்காக
வேண்டி “அன்றன்று சேமிக்கும் பொருளே பிரதானம்…!: என்ற எண்ணத்தின் பேராசைப்பிடியில்
மரண பயம் என்ற அச்ச உணர்வுடனே உள்ளார்கள்.
ஆகவே…
1.பக்தி என்ற முறையில் ஆண்டவனை வணங்குவதிலிருந்தும்
2.எதிர்காலத்திற்காகச் சேமிக்க வேண்டிய பொருளின் சேர்க்கையிலிருந்தும்
3.மரண பயத்தைத் தன்னுள் ஏற்றிக் கொண்ட மனிதனுக்கு
4.எப்படியப்பா மரண பயத்தை விட்டு விட்டு
5.ஞான வளர்ச்சியையோ தெய்வ சக்தியையோ வளர்த்துக் கொள்ள முடியும்…? அல்லது பெற
முடியும்…!
விஞ்ஞானத் துறையில் எடுத்துக் கொண்டாலும் அதிலே பல செயல்களை ஆராயும் மனிதர்கள்
எல்லாம் தற்கொலை என்ற தன்னை மாய்த்துக் கொள்ளும் முடிவிற்கு ஏன் செல்கிறார்கள்…?
பிறவா வரம் பெறும் இனிய சக்தி கொண்ட ஞானிகள்… தன் உடலைப் பாதுகாக்க இந்த
வாழ்க்கையில் உள்ள பொழுதே உடல் என்ற கூட்டின் முதுமை உணர்ந்து.. பிறவா சக்தி கொண்ட
நிலையில் உடலைச் சமாதி நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.
அதனால் அவர்களுக்கு இந்த உணர்வின் மரண பயம் என்ற அச்ச உணர்வு இருப்பதில்லை.
ஆனால் நமக்கு…?