ஒரு காரியத்திற்கே செல்கிறோம் என்றால் நாம் நல்ல ஒழுக்கங்களுடன் நடந்துள்ளோம்.
ஆனால் அதே சமயத்தில் அபகரிக்கும் நோக்கத்துடன் வருபவர்கள் பல தவறுகளைச் செய்து
தங்களை நியாயப்படுத்துகின்றனர்.
செல்வத்தை அபகரிக்கும் நிலையில் அவர்கள் நியாயப்படுத்தும் பொழுது “உண்மைக்குப்
புறம்பாக நடக்கின்றாரே…!” என்று நாம் வேதனையை நுகர்ந்து விட்டால்
1.அது நம்முடைய ஞானத்தை குறைத்து…
2.சிந்திக்கும் திறன் அற்ற நிலையில் செயலிழந்து
3.இருள் சூழும் நிலைக்குக் கொண்டு சென்று விடுகின்றது.
நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும் ஒரு விஷத்தை உணவாக உட்கொண்டால் நம்
நல்ல குணங்கள் உணர்வுகள் எப்படி இருள் அடைகின்றதோ இதிலிருந்து வரக்கூடிய சொல்லை
நாம் பிறரிடம் சொன்னால் அவருடைய உணர்வும் இருளடையும் நிலையே வருகின்றது.
உதாரணமாக நமக்காக வாதாடும்… நமக்காகச் செயல்படும் வக்கீலின் உணர்வுகளையும் இது
செயலற்றதாக மாற்றிவிடுகின்றது. இது எல்லாம் “நம்மிலிருந்து தோன்றும் நிலைகள்…”
1.நம்மை எண்ணித்தான் நமக்காக வாதாடுபவர்களும்.. செயல்படுபவர்களும்
செய்வார்கள்.
2.ஆனால் நம்முடைய வேதனைப்பட்ட உணர்வுகள் அந்த வேதனையின் இயக்கமாக அவர்களையும்
இயக்கிவிடும்.
ஏனென்றால் தவறு செய்பவர்களின் வலிமை அதிகமாகிவிட்டால் இப்படி நடக்கிறதே…! என்ற
வேதனையை நாம் எடுத்தால் நமக்குள் இருக்கும் வலிமை இழக்கப்பட்டுவிடுகின்றது.
ஒரு பாம்பினம் எப்படி மற்றொன்றின் மீது விஷத்தைப் பாய்ச்சி அதனின் வலுவை
இழக்கச் செய்து விழுங்குகின்றதோ இதைப் போல
1,அவர்கள் விஷத்தைப் பாய்ச்சிய உணர்வுகள் நமக்குள் இயக்கப்பட்டு
2.நாம் அவர்களுக்கு இரையாகக்கூடாது… இரையாகி விடக்கூடாது.
தீமையின் உணர்வின் இயக்கத்தால் நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களை இரையாக்காது
காக்க அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாம் பெறவேண்டும் என்ற வலிமையைக் கூட்ட வேண்டும்.
மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர்ந்து இரத்த நாளங்கள்
முழுவதும் கலந்து உடல் உறுப்புகளை உருவாக்கிய எல்லா அணுக்களிலும் படர வேண்டும் என்று
சிறிது நேரமாவது ஏற்றுக் கொள்ளுங்கள்.
பின் கோர்ட்டுகளில் வியாஜ்யமோ மற்றதுகள் நடந்தால் இதே நினைவை எண்ணி “உங்கள்
பார்வை” அனைத்தையும் அவர்கள் பால் செலுத்துங்கள்.
நீதிக்காக வாதாடும் அவர்களுக்குள் நல்ல உணர்வுகள் விளைய வேண்டும் என்ற
எண்ணத்தைச் செலுத்துங்கள். உங்களுக்காக யார் வாதாடிச் செல்கின்றனரோ அவர்களுக்கு
1.அந்த ஆற்றல்மிக்க சக்தி பெறவேண்டும்
2.அவர்கள் பேச்சும் மூச்சும் ஆக உண்மையின் உணர்வை உணர்த்தும் சக்தி பெறவேண்டும்
3.உண்மைகள் வெளிப்பட வேண்டும்… உண்மையின் நிலைகள் அங்கே நிலைநாட்ட வேண்டும்
4.அவர்களுக்கு அந்த மன பலம் வேண்டும் என்றும்
5.அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் உண்மையின் உணர்வுகளை உணர வேண்டும் என்று
எண்ணினால் போதும்.
நம் வக்கீல் அங்கே இருந்தாலும் ஜட்ஜ் அங்கே இருந்தாலும் நம் பக்கம் நியாயம்
இருக்கிறது என்றால் நாம் இங்கிருந்தே இந்த உணர்வினைப் பாய்ச்சினால் அங்கே அந்த
நல்ல தீர்ப்புகள் வரும்.
பதட்டமும் பயமும் கொண்டு என்ன ஆகுமோ…? என்ற உணர்வை எடுத்தால் “என்ன ஆகுமோ…?”
என்ற வலுவை நாம் எதிரிக்கே வலு கொடுக்கின்றோம்.
அத்தகைய வலு உருவாக்கி விட்டால் எதிரி தான் வெல்ல முடியுமே தவிர நாம் வெல்ல
முடியாது. ஏனென்றால்
1.வேதனைப்படுத்தும் விஷங்கள் அவர்கள் உடலிலும் கலந்த பின்
2.அந்த விஷத்தை உணவாக உட்கொள்ளும் அந்த உணர்வே வரும்.
3.அதன் வழி நமக்குள் நல்ல உணர்வுகளை எதிர்ப்பார்ப்பது கடினம்.
இதைப் போன்று நாம் ஒவ்வொரு காரியங்களிலேயும் நாம் அந்த மகரிஷிகளின் அருள்
சக்தி பெறவேண்டும் என்ற உடலுக்குள் சிறிது நேரம் செலுத்திக் கொள்ளுங்கள்.
பின் எந்தக் காரியங்களுக்குச் சென்றாலும் அது ஜெயம் பெறவேண்டும்… எங்கள்
வாடிக்கையாளர்கள் நலம் பெறவேண்டும்… நாங்கள் உற்பத்தி செய்யும் ஆடைகளை அணிவோர்
நலம் பெறவேண்டும்… பொருளை உட்கொள்வோர் நலம் பெறவேண்டும்… என்னிடம் தொழில் செய்வோர்
நலமும் வளமும் பெறவேண்டும்.. என்ற உணர்வினை நீங்கள் எடுங்கள்.
1.நமக்குள் சீராக்கும் உணர்வுகள் நிச்சயம் வரும்
2.அச்சுறுத்தும் உணர்வுகள் அணுக்களின் தன்மைகள் குறையும்
3.அருள் ஒளி பிறக்கும் உணர்வின் அணுக்கள் நமக்குள் வரும்.
எதனையுமே நாம் சீர்படுத்தும் உணர்வுகளை அந்த மகரிஷிகளின் உணர்வுடன் ஒன்றி
இதைச் செயல்படுத்துவோம் என்றால் “வேகா நிலை” என்ற நிலையை நமக்குள் உருப்பெறச்
செய்ய முடியும்.