காற்றலையில் புவி ஈர்ப்பின் பிடியில் வாழும் நாம்… நம் உணர்வில் உணர்வில்
உந்தப்படும் எண்ணத்தில் உணர்வின் செயலைக் கொண்டு மட்டும் உடல் சேர்க்கை
அமிலக்கூட்டு வளரவில்லை.
எறும்பு கொசு தேள் பாம்பு மூட்டை இதைப் போன்ற உயிரினங்கள் சந்தர்ப்பத்தால் நம்மை
அவை கடிக்கும் பொழுது அவை சேமித்த விஷ நிலை கொண்ட அமில உணர்வானது அதன் கடி உணர்வை
நாம் அறியும் பொழுது அதன் ஈர்ப்பு குண அமிலம் முழுவதையும் நம் உடல் பிம்ப
உணர்வலையின் அமிலத்துடன் எடுத்துக் கொள்கின்றோம்.
வாழ்க்கையில் சில ஜீவராசிகளான இந்தப் பூச்சிகள் நம்மைக் கடிக்காமல்
இருக்குமா…?
இவற்றின் ஈர்ப்பலையின் உணர்வின் அச்சம் நம் எண்ணமுடன் மோதும் பொழுது
1.அதனுடைய விஷம் நம் உடலில் ஏறிக் கடிக்கும் பொழுதும்… தாக்கும் பொழுதும்…
நசுக்கும் பொழுதும்…
2.அதற்கு ஏற்படும் மரண பயம் நம் உடலிலும் ஏறிவிடுகின்றது.
எவ்வமில குண ஜெந்துவின் கடிபட்டதோ அதனுடைய உணர்வையும் நாம் பெற்று அவற்றின்
விஷ உணர்வின் தீய அமிலங்களும் நம் உடலுக்குள் சேர்ந்து விடுகின்றது.
நம் உடல் அமிலத்துடன் அப்படிச் சேரும் பொழுது அதனுடைய வழித் தொடர் கொண்ட எண்ண
குணத்தை இந்த உடலைக் கடிக்கும் சில ஜீவ ஜெந்துக்களின் நிலையை நாம் அடைகின்றோம்.
இதிலிருந்து தப்பும் முறை எப்படி..?
1.ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரி யார்…?
2.ஞானத்தை வளர்க்க விடாமல் இருப்பதும் எல்லா நிலைகளுக்கும் தடை ஏற்படுத்தும்
எதிரி யார்,,,?
3.இந்த மனிதனுக்கு நற்குண வழிக்குச் செல்ல வழி காட்டும் நண்பன் யார்…?
4.அன்பான எதிர் அலையின் உணர்வை அடையவல்ல சக்தி நண்பன் யார்…?
எதிரியான நிலையை ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்பக்கூடுதான்… நற்சக்தியின் ஞான
அலையைப் பெறவல்ல தன்மையைச் செயல்படுத்தவல்ல நண்பனும் இந்த உடல் பிம்பக் கூடுதான்…!
ஆகவே தீய குணத்தின் எண்ணத்தை மேற்கொள்ளும் பொழுது தீய சக்தியின் நிலையை
ஏற்படுத்துவதும் இந்த உடல் பிம்ப வீட்டினுள் வாழும் உணர்வின் எண்ணச் செயல் தான்.
நல்ல வழிக்கு வழி நடத்திச் செல்வதுவும் இந்த உணர்வின் எண்ணச் சக்தி கொண்ட நல்
அலையின் சக்தியினால் தான்.
உணர்வில் எடுக்கும் எண்ணத்தின் செயல் எத்தன்மை கொண்டுள்ளதோ அத்தன்மை கொண்ட
ஒவ்வொரு மனிதனையும் அந்தந்த நிலைக்கு உட்படுத்துவது இந்த உடல் என்ற பிம்பக்கூடு
தான்.
விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் தற்கொலையின் செயலில் ஈடுபடுவதும் அவற்றின்
வளர்ப்புத் தன்மையும் எதனால் ஏற்படுகின்றது…?
மருத்துவர்கள் சந்திக்கும் ஆத்மாக்களின் உணர்வில்…
1.பெரும்பகுதி எண்ணத்தின் வியாதியான “மரண பயம்…” கலந்தே வருவதால்
2.அத்தகையவர்களின் எண்ணத் தொடர்புடனே இவர்களின் வாழ் நாள் செல்ல நேர்கின்றது.
3.இப்படி அந்த அச்ச உணர்வின் பிடிக்கு இவர்களின் உணர்வலையும் செல்வதினால்
4.இதே சுழற்சி வட்டத்தால் இவர்கள் உணர்வுடன் இந்த மரண பயம்
உந்தப்பட்டுவிடுகிறது.
அதனால் இவர்களின் உணர்வின் எண்ணமே இந்த மரண பய ஈர்ப்புப் பிடியில் சிக்குண்ட
நிலையில் பலரின் செயல் இதே உணர்வுடன் செயல் கொள்கிறது…. தன்னால் அதைத் தாங்க
முடியாது போகின்றது.