ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 13, 2016

“மோசமானவன்.., மோசமானவன்.., மோசமானவன்” என்று ஒருவரைச் சொல்லிக் கொண்டிருந்தால் தவறு செய்பவர்களாக நாமும் ஆகிவிடுவோம் - விளக்கம்

இப்பொழுது நாம் நினைக்கின்றோம். ஒருவன் தவறு செய்துவிட்டான் என்றால் அவனைப் பார்த்தவுடனே, “இவன் தவறு செய்பவன்” என்று சொல்லிவிடுகின்றோம்.

ஆக, முதலில் தவறின் உணர்வு நமக்குள் பதிவாகிவிடுகின்றது. அதை நாளடைவில் எண்ணியபின் அணுவாகிவிடுகின்றது.

இந்தத் தவறின் உணர்ச்சிகளை ஏற்றுக் கொண்டபின் என்ன செய்கின்றது? அந்த அணுக்களே மாறிவிடுகின்றது. அப்பொழுது அந்த அணுக்களுக்கு அந்த உணர்வு தேவை.

அவன் தவறு செய்கிறான், அவன் தவறு செய்கிறான் என்று சொன்னவுடன் அவன் ஒரு பங்கு தவறு செய்தான் என்றால் “தவறு செய்கிறான் என்று சொல்பவர்கள்” நான்கு பங்கு நாம் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவோம், பார்க்கலாம்.

அப்புறம் சொல்வார்கள். இவன் ரொம்ப யோக்கியன் மாதிரிப் பேசினான். இப்பொழுது இவனைப் பார்த்தால் பக்காத் திருடனாக இருப்பான் போலிருக்கிறது என்று பேசுவதை நாம் பார்க்கலாம்.

காரணம் யார் உணர்வை எடுத்து அதை வளர்க்கின்றோமோ அதன் உணர்வை மாற்றிக் கொள்ளும்.

ஆனால், இணைந்த உணர்வுகள் ஒரு பங்கு விளைந்திருக்கின்றது. நமக்குள் என்ன செய்கின்றது? இது அதிகமாக வருகின்றது.

ஆனால், தவறு சந்தர்ப்பத்தால் ஏற்படுத்தப்பட்ட நிலை.

தவறு ஏற்பட்டது என்று வேதனைப்பட்டாலும் இவன் தவறு செய்கிறான்.., தவறு செய்கிறான்.., தவறு செய்கிறான்.., என்ற உணர்வை வளர்த்து வளர்த்து அவன் தவறை 1000 மடங்கு பெருக்கி தவறுள்ளவனாகவே மாற்றிவிடும்.

அதே மாதிரி ஒருவர் மேலே சிலர் சொல்லலாம். இவன் எல்லோருக்கும் துன்பம் செய்கிறான்..,. அவன் மோசமானவன்.., மோசமானவன்.., மோசமானவன்.., என்ற உணர்வை அவனைப் பார்த்துச் சொல்லப்படும் பொழுது அவனைப் பார்த்த உணர்வின் தன்மை நம் அணுக்களாக மாற்றிவிடுகின்றது.

மாற்றிவிட்டால் அதே உணர்வின் சுவையைச் சேர்க்கப்படும் பொழுது நம்மைப் பார்த்து அவன் நுகர்ந்து பார்க்கும் பொழுது “இவன் மோசமானவன்.., இவன் மோசமானவன்..,” என்று நம்மைச் சொல்ல ஆரம்பிப்பான்.

உங்கள் வாழ்க்கையில் பார்க்கலாம்.

ஏனென்றால், எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ அந்த மணத்தின் தன்மை வருகின்றது. அந்தச் சொல்லின் தன்மை வரப்படும் பொழுதுதான் ஓம் நமச் சிவாய.., சிவாய நம ஓம்.

நாம் நுகர்ந்தது ஜீவனாகி நமக்குள் அணுவாகி சிவமாகின்றது. எது ஜீவனாகி அணுவாக சிவமாக ஆனதோ நமக்குள் இருந்து அதனின் சொல்லாக செயலாக வெளிவரும்.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும் தன்னக் காட்டிலும் வலு கொண்ட உணர்வைச் சேர்த்துச் சேர்த்துத்தான் பரிணாம வளர்ச்சியில் இன்று மனிதனாக வந்துள்ளோம்,

பரிணாம வளர்ச்சியில் உச்சக் கட்டம் அடைந்த உயிருடன் ஒளியாக இன்று நிலைத்திருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் இழுத்து அந்த உணர்வை கணவன் மனைவி பெறவேண்டும் என்று இரண்டு உணர்வையும் இணைத்து மிக சக்தி வாய்ந்த நிலைகளில் மாற்றிக் கொள்ள வேண்டும்.

அப்படி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு நொடியிலேயும் வேதனைப்படுவோர் உணர்வைக் கேட்டறிந்தால் உள் போகாமல் நாம் தடைப்படுத்திவிட வேண்டும்.

தவறு செய்பவர்களையோ, கோபப்படுவோர்களையோ சண்டை போடுபவர்களையோ பார்த்தபின் அந்தத் தவறின் உணர்வுகளை நமக்குள் இழுக்காதபடி ஓம் ஈஸ்வரா என்று உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை இணைத்து நம் உடல் முழுவதும் படரச் செய்ய வேண்டும்.

அடுத்து தவறு செய்பவர்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உனர்வைப் பெற்று பொருளறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று உண்மையின் உணர்வை அறிந்து செயல்படும் சக்தி பெறவேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

இப்படி எண்ணினால், இந்த உணர்வு நமக்குள் உண்மையை உணரும்படிச் செய்யும். அதே சமயத்தில் உண்மையான உணர்வை நமக்குள் வளர்க்கும் நிலையும் அவன் தவறு செய்யும் உணர்வை நமக்குள் கவராது நம்மைத் தவற்றவனாகவும் மாற்றும்.