ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 30, 2016

தியான வழியில் உள்ளவர்கள் சிலரின் செயல்கள்

இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.

இவ்வளவு தூரம் தியான வழியில் இருக்கின்றீர்கள் அல்லவா..., கேட்டுப் பாருங்கள்.

கோவிலுக்குச் சென்று தேங்காய் பழத்தை வைத்து அதை அர்ச்சனை செய்து சாமியைப் பார்த்தால் தான் நன்றாக இருக்கும் என்று செய்வார்கள்.

ஆனால், கோவிலுக்குள் சென்று அந்தத் தெய்வீகக் குணத்தை நாங்கள் பெறவேண்டும். இந்தக் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் தெய்வீகக் குணம் பெறவேண்டும். அவர்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் நலமும் வளமும் பெறவேண்டும் என்று எண்ணுபவர்கள் யாராவது ஒருவரைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

தியான வழியில் தான் இருக்கின்றார்கள். அவர்களுக்குச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனால், வழி நடத்தி யார் வருகின்றார்கள்?

நானும்.., தியானம் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். என்னமோ..., இன்னும் குருநாதர் என்னைச் சோதித்துக் கொண்டு இருக்கின்றார். பக்தி மார்க்கத்தில் இருந்த மாதிரித்தான் எண்ணுகின்றார்கள்.

நாம் நுகர்வதுதான் இந்த உணர்வுகள் நம்மைச் செயல்படுத்துகின்றது என்று பல முறை சொல்கிறேன். “சாமி செய்வார்..,” என்று எண்ணினால் நான் என்ன செய்ய முடியும்?

சமையல் செய்து நல்ல முறையில் கொடுக்கின்றேன்.

“பார்த்தவுடன் என்னால் முடியவில்லை.., என்னால்..., சாப்பிட முடியவில்லை” என்று சொல்லிக் கொண்டு சாப்பிடவில்லை என்றால் என்ன செய்ய முடியும்?

நீங்கள் இப்படிச் செய்யுங்கள் என்று சொல்லிச் “சக்தியைக்” கொடுக்கின்றோம். நாம் நுகர்ந்ததை உயிர் இப்படித்தான் இயக்குகின்றது என்ற உண்மையைத் தெரியப்படுத்துகின்றோம்.

ஏனென்றால், சித்திரை. நமக்குள் நடக்கக்கூடிய சிறு சிறு சம்பவங்களில் அந்தத் தீமையான நிலைகளை துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுத்துத் துடைத்துப் பழகிக் கொள்தல் வேண்டும்.

அந்தத் துருவ நட்சத்திரம் எப்படி ஆனது? இந்த உயிர் தான் அப்படி ஒளி ஆனது.

அகத்தின் உணர்வுகளைத் தெரிந்தவன் தான் அந்த அகஸ்தியன். நாம் நுகரும் உணர்வுகள், நமக்குள் இருக்கக்கூடிய குணங்கள் எப்படி இயக்குகின்றது என்பதை எல்லாம் கண்டுணர்ந்தவன் அகஸ்தியன்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் அந்த அகஸ்தியனின் உணர்வின் தன்மை கொண்டுதான் உங்களுக்குத் தெளிவாக்கிக் கொண்டேயுள்ளோம்.

தீமைகளை வென்ற நஞ்சை ஒளியாக மாற்றிய அந்த அகஸ்தியன் அருளாற்றல்களைத்தான் உங்களுக்குள் திரும்பத் திரும்ப ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்குவது போல் பதிவாக்கிக் கொண்டேயுள்ளோம்.

நீங்கள் உங்களுக்குள் இதைப் பதிவாக்கினாலே போதுமானது. தீமை வரும் பொழுது தீமையை நீக்கும் உணர்ச்சிகள் உங்களுக்குள் தோன்றும். அப்பொழுது அந்தத் துருவ நட்சத்திரத்தினை எண்ணி எடுத்தால் தீமைகளை அகற்றும் ஆற்றல் பெறுகின்றீர்கள்.

மகிழ்ச்சி தன்னாலே வரும். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம். உங்களை நீங்கள் நம்புங்கள்.