ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 11, 2016

நமக்கு நோய் இருக்குமோ என்று சந்தேகப்பட்டால் வரும் விளைவுகள்...!

வேதனை என்று அதிகரிக்கும் பொழுது கேன்சர் என்ற நோய் வருகின்றது. உடலுக்குள் வலியாக இருக்கும். ஆனால் தெரியாது.

டாக்டரிடம் கொண்டு போய்ப் பார்க்கும் பொழுது அவர் கேன்சர் என்று கண்டுபிடித்துச் சொன்னால் போதும். ஒரு பத்து நாளுக்குள் அதிகமாகப் படர்ந்து நடக்கக் கூட முடியாமல் ஆகிவிடுவார்.

பத்து வருடமாக அவருக்குள் இந்த வலி இருந்திருக்கும், ஆனால் தெரியாது.

கிராமங்களில் இதைச் சாதாரணமாகப் பார்க்கலாம். இது ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்றிருப்பார்கள். கை வலி, கால் வலி, உடல் வலி என்றே சொல்லிக் கொண்டிருப்பார்கள். பத்து வருடமாக இப்படியே வாழ்ந்திருப்பார்கள்.

ஆனால், டாக்டரிடம் போய் “செக் அப்” செய்த பிற்பாடு “கேன்சர் போலிருக்கிறது..,” என்று சொன்னால் போதும்.

உடனடியாக அது வேலை செய்துவிடும்.

கேன்சர் அவர் உடலில் பரவப்பட்டு அந்த உணர்வு துரித நிலைகள் கொண்டு நல்ல எண்ணங்கள் எடுப்பதைத் தவிர்த்து விஷத்தின் தன்மையைப் பெருக்கி கேன்சர் உடனடியாக வளர்ந்துவிடும்.

அப்புறம் நீங்கள் என்ன தான் சொன்னாலும் கூட இந்த விஷத்தின் உணர்வைத் தான் நுகர முடியும். ஏனென்றால், பிழைக்க மாட்டார்கள் என்ற உணர்வு வந்துவிடுகின்றது.

இந்த உணர்வின் தன்மையை உடலுக்குள் சேர்த்த பின் நல்ல அணுக்கள் அனைத்தையும் கொன்று விடுகின்றது. விஷத்தின் தன்மை அதிகமாகி உடலை விட்டுப் பிரிய நேரும் போது மனிதனல்லாத விஷம் கொண்ட உடல்களுக்குள் நம்மை அழைத்துச் சென்றுவிடும் நம் உயிர்.

இதுவெல்லாம் இந்த இயற்கையின் நிலைகளில் நடக்கும் சில சூழ்நிலைகள்.

“நாம் நுகரும் உணர்வுகள்” நம்மை எவ்வாறு இயக்குகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறோம்.

ஆகவே, ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் அருள் உணர்வுகளை நுகர்ந்தால் துருவ நட்சத்திரம் வெளிப்படுத்தும் உணர்வை நுகர்ந்தால் அது நம்மை அதன் ஈர்ப்பு வட்டத்திற்கு அழைத்துச் செல்லும்.