ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 6, 2016

மூன்றாம் பிறை - "இருளை நீக்கி நீ ஒளியாகு"

அன்று நபிகள் நாயகம் தீமைகளின் நிலையை தேய்பிறையாக நம்மை ஆக்கும் தன்மைகளிலிருந்து மீண்டிடும் நிலைகள் கொண்டு உன்னுடைய வளர்ச்சியில் இருளைப் போக்கி நீ ஒளியாகு என்று சொன்னார்.

அவர் அதனின் நிலைகள் கொண்டு தான் மேற்கே பார்க்க வைத்தார்.

ஏனென்றால், சூரியனின் ஒளிக் கதிர்கள் சந்திரனுக்குக் கிடைக்காது மற்ற கோள்கள் தடைப்படுத்தினாலும் அதை விரிவாக்கி அது ஒளியின் சிக்ரமாக அது ஓங்கி வளரும் நிலைகள் போல மனிதனின் வாழ்க்கையில் இருளைப் போக்கி ஒளியின் தன்மையாக உன் உயிருடன் ஒன்றி ஒளியாக நீ மாறு என்பதுதான் அவருடைய தத்துவங்களில் ஒன்று.

அன்றைய நிலைகள் கிழக்கே பார்த்து வணங்கினாலும் மேற்கே பார்த்து இந்த உணர்வின் தன்மை கொண்டு பிறைச் சந்திரன் வளர்வது போல உன் வாழ்க்கையில் இருளைப் போக்கி ஒளியின் சரீரமாக நீ வாழ வேண்டும் என்று நபிகள் நாயகம் இத்தகைய நிலைகளைச் சொன்னார்.

அவர் சொன்ன நிலைகளை உணராமால் மூன்றாம் பிறையைப் பார்த்து விட்டால் எனக்குத் தொழில் வளரும் என் குடும்பம் வளரும் என் கஷ்டம் போகும் என்ற இந்த நிலையில் தான் எண்ணுகின்றார்கள்.

மூன்றாம் பிறையைப் பார்த்தால் மோட்சம், மூன்றாம் பிறையைப் பார்த்தால் என் கஷ்டம் எல்லாம் போகும் என்ற எண்ணத்தில் தான் பார்க்கின்றார்கள்.

மூன்றாம் பிறையைப் பார்த்த பின் நோன்பை விடுகின்றார்கள். ஆனால், அந்த விரத்தத்தின் தன்மை என்ன?

தனக்குள் தீமையே இல்லாது தீமைகள் உட் புகாது நாம் இருக்க வேண்டும் என்ற இந்த நோன்பினை வளர வைக்கின்றார்.

நோன்பு என்றால் எதையும் விழுங்கக் கூடாது என்று உமிழ் நீரைத் துப்புகின்றனரே தவிர எவ்வாறு இதை விழுங்கக் கூடாது என்ற நிலைகளை நபிகள் நாயகம் தெளிவாகச் சொல்லியுள்ளார்.

ஒவ்வொரு நோடியும் உயர்ந்த நிலைகள் கொண்டு மக்களின் நிலைகளைத் தெளிவாக்க வேண்டும் என்று இந்த உமிழ்நீரைச் சுரக்கச் செய்ய வேண்டும். தீமைகளை நீ துப்பிவிட வேண்டும்.

தீமைகள் தனக்குள் வராதபடி அந்த உயர்ந்த நினைவினைத் தனக்குள் நுகர வேண்டும் என்று தான் அவர் சொன்னாரே தவிர உமிழ் நீர் சுரப்பதைத் துப்பிவிட்டு அதனின் நோன்பின் தன்மை வரும் போது இருள் சூழ்ந்த நிலைகளை உணவாக உட்கொள்ளச் சொல்லவில்லை.

தீங்கான உணர்வுகள் நுகரப்படும் பொழுது உனக்குள் இருளின் தன்மையே வரும்.

உயர்ந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் உட் கொள்ளு. தீமையை நுகராதே. தீமைகள் எங்கே இருந்தாலும் அதை நுகராதே. அனைவரும் நன்மைகள் பெறவேண்டும் என்ற நிலைகளைத் தான் அன்று நோன்பாக எடுக்கச் சொன்னார்.

ஆகவே, பிறைச் சந்திரனாக இருப்பது கதிரவனின் ஒளி கொண்டு எப்படி பூரண நிலவாக மாறுகின்றதோ இதைப் போல அனைவரும் மகிழ வேண்டும் என்ற உணர்வு கொண்டு உன் வாழ்க்கையில் வளரும் தன்மையே நீ பெறவேண்டும் என்பதுதான் அவருடைய சாஸ்திரங்களில் கூறப்பட்ட பேருண்மை.

அவர் சொன்ன மூலக் கூறை நீங்கள் அறிந்து கொண்டால் போதும்.