
யாம் யாரையும் குறை கூறவில்லை.
அரசுகள் தான் வாழ வேதங்களின் நிலைகள் உருவாக்கப்பட்டு மறைமுக பாஷைகளை விட்டு மற்ற
நிலைகள் உபநிஷத்துக்கள் என்று பிரிக்கப்பட்டு அதிலே பல நிலைகளை மாற்றி அவர்கள் மட்டும்
அறிந்திடும் நிலைக்கு உருவாக்கியுள்ளார்கள்.
மனிதர்கள் உண்மைகளை அறிய முடியாதபடி சில உணர்வின் தன்மைகளை மறைத்து உபநிஷத்து என்று
மாற்றப்பட்டு ஞானிகள் காட்டிய நிலைகளைப் பெறாதபடி செய்துவிட்டனர்.
அவர்கள் கண்டுணர்ந்தவர்கள் கோவில்களில் சிலைகளாக்கி இன்றைக்கு உருவமாக்கி ஸ்தல
புராணமாக்கி விட்டார்கள்.
ஸ்தல புராணத்தின்படி நீ இங்கே இந்தக் குளத்தில் மூழ்கினால் உன் பாவங்கள் எல்லாம்
போய்விடும் என்ற காவியத் தொகுப்புகளை எழுதியிருப்பார்கள்.
நளச் சக்கரவர்த்தி இந்தெந்த நிலைகளில் இங்கே வந்தான். சனி பகவான் அவனைத் துரத்திக்
கொண்டு வந்தான். சனிப் பெயர்ச்சி என்று வரப்படும் பொழுது காரைக்காலில் அந்தக் குளத்தில்
மூழ்கி பாவத்தைப் போக்கியுள்ளான் என்று சொல்வார்கள்.
குளத்தில் மூழ்கிவிட்டு வந்து சனி பகவானுக்கு அர்ச்சனை செய்தால் சனி நீக்கமாகி
அடுத்து குரு பெயர்ச்சி வந்து அவனுக்குள் நல்லது வரும் என்று காவியத் தொகுப்புகளைக்
காட்டியுள்ளார்கள்.
இந்தத் தொகுப்புகளில் சொல்லியபடிதான் இன்றைய நிலைகளில் மக்கள் பின்பற்றிச் செல்கின்றார்கள்.
ஆனால், நள சக்கரவர்த்தி மூழ்கிய குளத்திற்குள் சென்றால் அதற்குள் பல கசடுகளும்
பல அழுக்குகளும் எண்ணெய் தேய்த்துக் குளித்த நிலைகள் அங்கே உள்ளது. அதைத்தான் அங்கே
ஒட்ட வைத்துக் கொண்டு வர முடியும்.
பாவ நிலைகளைத் தொலைப்பதற்கு சனிப் பெயர்ச்சிக்கு, “நீ அங்கே செல் சந்தோஷம் கிடைக்கும்”
என்று கடனெல்லாம் வாங்கி இங்கிருந்து பஸ்ஸில் ஏறிச் சென்று செல்லும் போது எத்தனையோ
தொல்லைகள்.
அப்புறம் சனி பின்னாடி துரத்திக் கொண்டுதானே வரும்.
கடனை வாங்கித் தப்பிக்க வேண்டுமென்று அங்கே எண்ணினால் அங்கே உள்ள வியாபாரிகள் தட்டிப்
பிரிக்கும் நிலையில் குங்குமம் அது ஒன்றுக்கும் ஆகாது அதிலே எதையாவது ஒன்றைப் போட்டு
வைத்திருப்பார்கள்.
சாந்தி கழிப்பதற்காக வேண்டி வியாபாரிகள் தன் பிழைப்புக்காக இதைச் செய்கின்றனர்.
மற்றவர்கள் பிழைப்புத் தேடிச் செல்ல முடியும். ஆனால், பாவத்தை மூட்டை கட்டிக் கொண்டு
தான் வர முடியும்.
ஆக, பாவத்தைப் போக்கும் நிலை அங்கில்லை.
நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன், இந்தத் தெய்வத்தை வணங்கினேன், இந்தத் தெய்வத்திற்கு
யாகத்தைச் செய்தேன் என்ற இந்த மந்திர ஒலியைக் கேட்டபின் சோர்வடைந்து இதனின் உணர்வு
முதிர்வான பின் இறந்தால் என்ன நடக்கின்றது?
இதே மந்திரத்தைச் சொன்னால் மற்றவரைக் கெடுப்பதற்கு இந்த உணர்வின் ஆவியை வைத்து
ஒலிகளை எழுப்பி முதலில் கைவல்யம், பின் ஏவல் என்ற நிலைகளுக்கு வரும்.
இதைப் போன்ற நிலைகள் தான் மனிதனுக்குள் விளையும் தன்மையைத்தான் இன்று ஒருவருக்கொருவர்
எடுத்துக் கொள்கின்றோம்.
யார் எவரை எந்த மந்திரத்தைச் சொல்லி நான் தெய்வத்திற்கு சக்தி ஊட்டுகிறேன் என்று
சொன்னால் அதே மந்திரத்தை அவர் மடிந்த பிற்பாடு சொன்னால் எந்த மந்திரத்தைச் சொல்கிறானோ
இங்கே கைவல்யம் வந்தேதான் தீர வேண்டும்.
ஆக, மோட்சம் போவதோ ஞானத்தைப் பெறுவதோ இல்லை.
இதைப் போல காவியத் தொகுப்புகள் மெய் ஞானிகள் காட்டியது அனைத்தும் தவறான பாதையில்
செல்லப்பட்டு நாம் தவறாக அழைத்துச் சென்றுள்ளார்கள்.
யாம் யாரையும் குறை கூறவில்லை. அரசர்கள் தான் வாழ ஞானிகள் காட்டிய பேருண்மைகளை
மறைத்தனர். அந்த மறைப்பட்ட நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச்
சொல்கிறோம்.
