ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 29, 2016

பிரதோஷத்தைக் காசைக் கொடுத்துக் கழிக்க முடியாது

நாம் பல கோடிச் சரீரங்களிலில் துன்பங்களை நீக்கி நீக்கி இன்று துன்பத்தை நீக்கிடும் சக்தி பெற்ற மனித உடலில் இதனைச் செயல்படுத்தத் தவறினால் மனிதன் அல்லாத உருவை உருவாக்கி விட்டால் பல காலம் இங்கே உழல வேண்டும்.

ஆகவே நல்ல நினைவில் இருக்கும் பொழுதே தீமையை நீக்கிடும் நிலையை இப்போதே இழுக்கும்போது இதனைச் செயல்படுத்தி நமக்குள் அந்த அருள்வழி என்ற நிலைகளை அது ஓங்கிச் செயல்படுத்தப்பட வேண்டும்.

அது நம் உடலுக்குள் தீமைகளை அதர்வண என்று அடக்கி ஆக உணர்வின் தன்மை அந்த வித்தாக ஒளியின் சரீரமாக உருவாகும் அணுக்களை நமக்குள் ஆகும் யஜூர்.

இதனின் உணர்வின் தன்மை நமக்குள் விளைந்தால் அது தன் உணவுக்காக ஏங்கும். உயிரின் தன்மை உடலைவிட்டு இது செல்லும்போது எதன் உணர்வின் தன்மையை எடுத்தோமோ அங்கே செல்லும்.

எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை உயிர் கவர்ந்ததோ இந்த அணுக்கள் அந்த உணர்வின் தன்மை அதன் ஈர்ப்பு வட்டத்தில் சென்று அதன் உணர்வை எடுத்து இந்த உடலில் வந்த நஞ்சினைக் கருக்கிவிட்டு உன்னத ஒளியாக மாற்றும் நிலை.

அதன் ஈர்ப்பு வட்டத்தில் இருப்பதுதான் சப்தரிஷி மண்டலம். ஆகவே  ஞானிகள் காட்டிய அருள்வழியில் நாம் இதைப் பெறுதல் வேண்டும்.

நம் ஆலயங்களிலெல்லாம் நல்ல உயர்ந்த பண்புகளைப் காட்டப்பட்டுள்ளது. அங்கே பிரதோஷங்களை நீக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

காலை நான்கு மணிக்கெல்லாம் சிவன் ஆலயத்தில் போய் நின்று ஈஸ்வரா என்று நம் உயிரை வேண்டி அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று பல முறை சொல்ல வேண்டும்.

தன் மனைவிக்கும் அது பெற வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கும் பெறவேண்டும் என்றும் இரு உணர்வுகளையும் ஒன்றாக்க வேண்டும்.

ஒன்றாக்கிய பின் இந்த ஆலயம் வருவோர் எல்லாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும். அவர்கள் குடும்பம் முழுவதும் அது படர வேண்டும். அவர்கள் குடும்பத்தில் அறியாது சேர்ந்த சாப வினைகள் தீய வினைகள் நீங்க வேண்டும்.

அவர்கள் வாழ்க்கையில் பேரருள் பெறவேண்டும். இருள் நீக்கி பெரும் அருள் பெறக்கூடிய அந்த சக்தி பெறவேண்டும். இந்த ஆலயம் வருவோர் அனைவரும் மகிழ்ச்சி பெறும் உணர்வுகள் பெறவேண்டும் என்றால் பிறருடைய தோஷம் நமக்குள் வராது எண்ணுகின்றோம்.

ஆலயம் வருவோரெல்லாம் அந்த நிலைகளைச் சொல்ல வேண்டும். நாம் சொல்லும் உணர்வுகள் அங்கே படர்கின்றது. அந்த மனிதனுக்கு முன்னால் இருக்கின்றது. அதை அவன் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.

அது பிறருக்கு நல்லதாக வேண்டும் என்று இந்த அருள் ஒளி பெற்று எனக்குள் நந்தீஸ்வரன் சுவாசித்து இந்த உணர்வின் தன்மை செல்லப்படும்போது உங்கள் உடலான நிலைகள் நீங்கள் எண்ணப்படும்போது நீங்கள் அதே மாதிரி எண்ணி சுவாசித்த உணர்வுகள் அந்த நந்தீஸ்வரனாக மாறுகின்றது.

நமக்குள் பிறர்ப்பட்ட துன்பத்தின் நிலையை நமக்குள் வளராது அந்த தோஷத்தை மாற்றுகின்றது. இதுதான் ஆலயங்களின் பண்பு.

காசு கொடுத்து விலைக்கு வாங்கி அவன் காப்பாற்றுவான் என்றால் அவன் இங்கு இல்லை. அது கல். நினைவுபடுத்தும் நிலை பெற்றது. நினைவுச் சின்னமே அது.

இந்தத் தெய்வ குணத்தை நீ பெற்றால் அதன் உணர்வை நுகர்ந்தால் அது துவைதம். அதாவது மனித உடல் ரிக். துருவ நட்சத்திரம் ரிக். அதிலிருந்து வரக்கூடிய மணம் சாம இசை.

ரிக் என்று நிலைகளில் வரப்படும்போது இங்கு துவைதம் என்பது உடல் உருவம். ஆலயங்களில் காவியமாகப் படைத்து, அந்த உருவத்தை காட்டி குணத்தைச் சித்தரித்துக் காவியமாகப் படைத்து இந்த உணர்வை நீ எடுத்தால் அந்த தெய்வமாக நீ ஆகின்றாய்.

அந்த உணர்வுகள் உனக்குள் வந்து அந்தத் தெய்வச் செயலாக உருவாக்கும் என்ற நிலையை நினைவுப்படுத்துவதற்காகத் தான் அங்கே சிலையை உருவமாக வைத்துள்ளார்கள்.

நாம் ஆலயங்களுக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஆலயத்தை மதித்து நடக்க வேண்டும். அது கல் என்று விட்டுவிடக்கூடாது.

நமக்குள் நல்ல உணர்வை ஊட்டும் நினைவுச் சின்னம் அது. அந்தத் தெய்வ குணத்தை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்.

தெய்வ நிலைகள் நாங்கள் பெறவேண்டும். அந்த மகரிஷியின் அருள் உணர்வு நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். எங்கள் ஜீவாத்மா பெறவேண்டும் என்ற உணர்வை நாம் எடுத்துக் கொண்டால் நமக்குள் தீமைகளை நீக்கிடும் அந்த நல்ல குணங்கள் வளருகின்றது.

எல்லாரும் நன்றாக ஆக வேண்டும் என்பது அந்தத் தெய்வ சக்தியாக அது நமக்குள் வருகின்றது. நம் சொல் தெய்வச் சொல்லாக அது இயக்குகின்றது.