சகஜ வாழ்க்கையில் மனிதனுக்கு மனிதன் நாம் பழக்கத்தில் பிறருடைய தீமைகளைக்
கேட்டறியும்போது அது நமக்குள் தோஷமாக மாறுகின்றது. பல தீமைகளைச் செய்கின்றது.
அதை மாற்றுவதற்காக நாம் ஆலயத்திற்குச் சென்று காலை நான்கிலிருந்து ஆறுக்குள்
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும். துருவ நட்சத்திரத்தின் பேரருள்
பேரொளி எங்கள் உடலில் படர வேண்டும். என்றுன் எண்ணுதல் வேண்டும்.
அதே சமயத்தில் தன் கணவனுக்கு மனைவி கிடைக்க வேண்டும் என்றும் மனைவி கணவனுக்கு கிடைக்க
வேண்டும் என்று இருவரும் சொல்லிவிட்டு இந்த ஆலயம் வருவோர் அவர்கள் அனைத்திற்கும்
அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி அவர்கள் உடல் முழுவதும் படர்ந்து அவர்
ஜீவான்மாக்கள் பெற்று அவர் வாழ்க்கையில் அந்த மகரிஷிகளின் அருள் வட்டத்தில்
வாழ்ந்திட வேண்டும்.
அவர்கள் குடும்பம் எல்லாம் நலம் பெறவேண்டும் வளம் பெறவேண்டும். அவர்
வாழ்க்கையில் வளமாக இருக்க வேண்டும். கனியைப் போன்ற சுவையான சொல்லும் செயலும்
அவர்கள் பெறவேண்டும். மலரைப் போல மணமும் மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும்
என்று ஒவ்வொருவரும் ஆலயத்தில் எண்ணுதல் வேண்டும்.
ஆகவே, இவ்வாறு நான் உங்களைச் சொல்கின்றேன். நீங்கள் என்னைச் சொல்லுகின்றீர்கள்.
அப்பொழுது என்ன செய்கின்றது?
இருவருடைய உணர்வுகள் நாம் பரிவால் பண்பால் கேட்டறிந்தாலும் நமக்குள் பதிவான
நிலைகளை இதை அந்தத் தீமையென்ற உணர்வை நாம் நினைவை இழக்கின்றோம்.
காலை நான்கில் இருந்து ஆறுக்குள் இவ்வாறு இதை நினைத்தால் ஆறு மணிக்கெல்லாம்
சூரியன் உதயமாகின்றது. தீமைகளை இழுக்கும் சக்தியை நாம் இழந்ததால் நமக்குள்
இருக்கும் தீமையான உணர்வினை சூரியன் அழைத்துச் சென்று விடுகின்றது.
புவியின் ஈர்ப்பு வட்டத்தில் மற்ற தாவர இனங்கள் பூமியில் பதிந்துள்ளது. பூமியில்
அந்த தாவர இனங்களின் சத்து படர்ந்துள்ளது. தாவர இனத்தில் விளைந்த வித்தை எடுத்து
அந்த வித்தினை மீண்டும் பூமியில் ஊன்றினால் புவியின் ஈர்ப்பைக்கொண்டு அது பூமியில்
பரவியுள்ள தன் இனச் சத்தை எடுத்து செடிகள் வளருகின்றது.
இதைப் போன்றுதான் இந்தத் தீமையான உணர்வுகள், தீய அணுக்கள் வளராமல் தடுக்க
வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? ஆக அந்த தீமைக்கு உணவு எங்கிருந்து
கிடைக்கின்றது.
பிற மனிதர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியன் கவர்ந்து வைப்பதை நாம்
எண்ணத்தால் உணர்ச்சியில் உந்தும் போது அதன் உணர்வுகள் கண்வழி இருந்து கவர்ந்து நமக்கு
முன் ஆன்மாவாக மாற்றுகின்றது.
ஆன்மாவிலிருந்து நாம் சுவாசிக்கும் போது உயிரில் இயக்கப்பட்டு இரத்தத்தில்
கலந்து இரத்தத்தின் வழி அந்த அணுக்களுக்கு அது உணவைக் கொடுக்கின்றது.
துன்பப்படுவோர் ஒருவரை உற்றுப் பார்த்தால் அதே உணர்வு செவி வழி பட்டபின் கண்
வழி நுகர்ந்து அந்த உணர்வை உயிர்வழி நுகர்ந்தால் உயிரிலே பட்டபின் நாமும்
வேதனைப்படுகின்றோம்.
ஆகவே, இதைப் போன்ற நிலைகளை நாம் தடைப்படுத்த வேண்டுமா? வேண்டாமா..,? அதற்கு
என்ன செய்ய வேண்டும்?
பிற தீமையான உணர்வுகளை அந்தப் பிரதோஷங்களை நாம் நீக்க வேண்டுமென்றால் நமது
உணர்வுகள் அனைத்தும் அந்த அருள் ஒளிபெற வேண்டும் என்றும் எல்லோரும் அதைப் பெற
வேண்டும் என்று நாம் கூட்டமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
கூட்டமைப்பாகச் செயல்படுத்தும் போது, இந்த ஆலயம் வருவோரெல்லாம் சொல்லும்போது எல்லோருடைய
செவிகளில் விழுகின்றது. உயர்ந்த உணர்ச்சியை ஊட்டுகின்றது.
அந்த உணர்வின் தன்மையக் கண்கள் கவருகின்றது. எல்லோரும் நலம் பெறவேண்டும் என்ற
உணர்வைப் பரப்புகின்றது. அருள் ஒளி என்ற உணர்வை நுகரச் செய்கின்றது. நமக்குள் வரும்
தோஷத்தை நீக்குகின்றது.
நான் உங்களுக்கு நல்லதாக வேண்டும் என்று சொல்லும் போது உங்களுக்குள் இந்த
உணர்வின் தன்மை செவிகளில் படுகின்றது. நான் எதை எண்ணி எதனுடய நிலைகளில்
சொல்கின்றோமோ உங்கள் கண்ணின் நினைவுகள் அங்கே செல்லுகின்றது.
அந்த உணர்வின் தன்மை நுகரப்படும்போது உடலில் உள்ள துன்பங்களைப் போக்கும்
அணுக்கள் உங்களுக்குள் விளைகின்றது.