ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 12, 2016

துருவ நட்சத்திரத்தைப் புருவ மத்தியில் நிறுத்தி உயிருடன் ஒன்றி உணர்வின் ஒளியைப் பாய்ச்சினால் “விஷ்ணு தனுசு”

இந்த உடலில் விளைந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது சிவ தனுசு. நுகர்ந்தவர் உடல்களிலும் இந்த உணர்ச்சிகளை மாற்றி அதன் வழியே வழி நடத்தும் இது சிவ தனுசு.

தீமைகள வென்ற அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்ந்து தீமையான உணர்வுகள் நுகர்வதை நிறுத்தி (பிற உடலில் விளைந்த உணர்வுகள் நுகர்வதை) எங்கள் உடல் முழுவதும் அருள் சக்தி படர வேண்டும் என்று இந்த உணர்ச்சிகளை உள் செலுத்தினால் விஷ்ணு தனுசு.

தீமைகளை அகற்றிய உணர்வு கொண்டுதான் ஒளியின் சரீரம் ஆக முடியும்.

நமது வாழ்நாளில் எத்தகையை தீமையான உணர்வுகளைச் சந்தித்தாலும் எதனையும் பார்க்கலாம். நோயாளியையும் பார்க்கலாம், கடும் வேதனைப்படுவோரையும் பார்க்கலாம்.

ஆனாலும், அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உடலுக்குள் சேர்க்கப்பட்டு இதை வலுவாக்கி எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும் என்று எண்ணி உடலுக்குள் பாய்ச்ச வேண்டும்.

அடுத்து அந்த நோயாளிக்குத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி படரவேண்டும். அவர் உடல் நலம் பெற்று மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டும், அவர் நோயிலிருந்து விடுபடவேண்டும் என்ற உணர்வினை நமக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

இப்படி அந்த உணர்வின் தன்மையைச் சொல்லப்படும் பொழுது இது விஷ்ணு தனுசாகின்றது.

நீ மகரிஷிகளின் அருள் சக்தி நீ பெறுவாய், துருவ நட்சத்திரத்தின் அருளைப் பெறுவாய். உன் நோய் நீங்கும் நீ நலமாவாய் என்று அவரிடத்தில் சொல்லி, இந்த உணர்வின் தன்மையை நம் உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியை நாம் பாய்ச்சப்படும் பொழுது கூடுமான வரையிலும் அவஸ்தையிலிருந்து நாம் குறைக்க முடியும்.

இதன் வழி அந்தத் துருவ நட்சத்திரத்தை எடுத்துக் கொண்டால் உனக்கு நோய் நீங்கும் என்று சொன்னால் அதன் உணர்வுகள் மீண்டும் நினைவுபடுத்தும் போது அவன் நுகர்ந்தால் அந்த விஷ்ணு தனுசு அவர் நோயைத் தணிக்கும் அதே சமயத்தில் உணர்வை ஒளியாக மாற்றும்.

அந்த நோயின் உணர்வைப் பற்றாது இந்த உடலை விட்டுச் சென்றபின் எந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பற்றுடன் பற்றினோமோ அங்கே செல்கின்றோம்.