நாம் இந்த வாழ்க்கையில் அறியாமல் வரும் தீமைகளைப்
பிளத்தல் வேண்டும்.
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அந்தத்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை எனக்குள் ஆழமாகப் பதிவு செய்தார். அதை நினைவு கொள் அதிலிருந்து
அருள் ஒளி வந்து கொண்டிருக்கின்றது.
அதை நீ எப்பொழுதெல்லாம் நினைக்கின்றாயோ தீமைகளை நீக்கும்
சக்தி பெறுகின்றாய், உனக்குள் அது பேரருள் பேரொளியாகப் பெருகுகின்றது. இதை நீ பழகிக்
கொள் என்றார்.
1.உன்னுடைய தீமைகளை நான் துடைக்க முடியாது,
2.நீ தான் துடைத்துக் கொள்ள வேண்டும்.
2.நீ தான் துடைத்துக் கொள்ள வேண்டும்.
3.நான் இன்று தீமைகளைத் துடைத்து விட்டுப் போகின்றேன்.
4.நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது?
4.நாளைக்கு வரக்கூடிய தீமைகளை யார் துடைப்பது?
இன்று உடலில் இருக்கின்றேன்... போய்விடுகின்றேன்...! சிறிது
நாள் உடலில் வாழ்கிறேன், பிறகு போய்விடுகின்றேன். இந்த உடல் சதமில்லையே என்று சொல்கிறார்
குருநாதர் (உடலுடன் குரு இருக்கும் போது).
1.அவனோடு (உயிருடன்) சதமாயிருப்பதற்காக வேண்டி நான்
போய்விடுகின்றேன்.
2.நீ என்ன செய்யப் போகிறாய்...? என்று இப்படி வினா எழுப்புகின்றார்.
2.நீ என்ன செய்யப் போகிறாய்...? என்று இப்படி வினா எழுப்புகின்றார்.
3.நான் அங்கிருந்து (சப்தரிஷி மண்டலத்திலிருந்து) இங்கே
வந்து உன் தீமைகளைத் துடைப்பேனா?
எனக்குள் விளைந்த உணர்வுகள் நான் அழிவதில்லை. இருளை
ஒளியாக்கினேன். ஒளியின் உணர்வு இங்கே பரவுகின்றது. அதை நீ எடுத்துப் பழகிக் கொள் என்றார்
குருநாதர்.
உன் தீமைகளை அகற்ற முடியும், உணர்வினை ஒளியாக்க முடியும்
என்றார். குரு அருள் எமக்குள் திரு அருளாக நின்று வழி காட்டியது.
நம் குரு காட்டிய அருள் வழியில் நாம் சென்றால் எளிதில்
விண் செல்லலாம். பேரின்ப பெருவாழ்வு என்ற வாழ்க்கை வாழ முடியும்.