“எனக்கு இப்படித் துரோகம் செய்தான் பாவி..,” என்று எண்ணினால் இந்த உணர்வைப்
பெற்றால் அடுத்து அவன் உணர்வுக்குள் நம்மை இழுத்துச் சென்று அவனைக் கெடுத்து பாம்பாகவோ
தேளாகவோ பிறக்கச் செய்யும் நம் உயிர்.
அவனையும் கெடுக்கும். ஆகவே, மீண்டும் இங்கே பிறவிக்கு இழுத்து வரும். இதைப்போன்ற
நிலைகளில் இருந்து நாம் மீளவேண்டும் அல்லவா?
அதற்குத்தான் ஆலயங்களிள் பிரதோஷம் என்ற நிலைகளைக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
நமது வாழ்க்கையில் நாம் யாருமே தவறு செய்யவில்லை. நல்ல பண்பும் பரிவும் கொண்டு
பிறருடைய துயரங்களைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்தாலும் அவர்கள் செய்த பாவ
நிலைகளும் தோஷ நிலைகளும் நமக்குள் வந்து சேர்ந்து விடுகின்றது.
பல தோஷங்கள் செய்திருப்பார், பல பாவ நிலைகள் செய்திருப்பார், பல கொடூர
உணர்வுகளைப் பார்த்திருப்பார், அவர் உடலில் தோஷமாக ஒட்டி அந்த உணர்வின் தன்மை
வரும்.
அவரை நாம் பார்த்தால் அதன் உணர்வுகள் நமக்குள் தோஷங்களாக மாறுகின்றது.
இந்தத் தோஷத்தை மாற்றுவதற்காக சாயங்காலம் ஈஸ்வரன் கோயிலில் போய்
நந்தீஸ்வரனுக்குப் பூஜை செய்துவிட்டு “நீ ஈசனிடம் போய்ச் சொல்லப்பா..,”
என்கிறார்கள்.
நான் எல்லோருக்கும் அவர்கள் கஷ்டப்படும்பொழுதெல்லாம் உதவி செய்தேன், அவர்களுக்கு
உதவினேன், இவர்களுக்கு உதவினேன் என்று சொன்னால் அவன் போய்ச் சொல்லப் போவதில்லை.
ஒரு நோயாளியின் உணர்வைச் சூரியன் கவர்ந்து வருகின்றது. நோயாளியை நாம் உற்று
நோக்கினால் அந்த உணர்வின் தன்மை அதே நிலையை நமக்குள் ஆக்குகின்றது. ஆகவே, தோஷங்கள்
இங்கே சாடுகின்றது.
இத்தகைய தோஷத்தை எல்லாம் நீக்கியவன் அந்த அகஸ்தியன். அகஸ்தியன் துருவனாகி
துருவ நட்சத்திரமானான் அந்தத் துருவ நட்சத்திரத்திலிருந்து உணர்வுகள் வெளிப்படுவதை
சூரியன் கவர்ந்து வருகின்றது.
அதிகாலை 4 மணிக்கு எல்லாம் அது வெளிப்படுவதை நமது பூமி துருவப் பகுதியில்
கவருகின்றது. நம் எண்ணத்தை காலை 4 மணியில் இருந்து 6 க்குள் துருவத்தின் வழியாக அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்திப் பழகுதல் வேண்டும்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் எங்கள் உடல்
முழுவதும் படர வேண்டும் எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல்
வேண்டும்.
நம்மை மனிதனாக உருவாக்கியதே தாய், தந்தை. அம்மா அப்பா அருளால் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிப் பெறுதல்
வேண்டும்.
ஏனென்றால், தாய் நம்மை எப்போதும் காக்கும் உணர்வு பெற்றவள். நம்மை எப்பொழுதும்
பாதுகாக்கும் நிலை பெற்றவள். தந்தையைக் காட்டிலும் தாயின் நினைவுகள் நமக்குள் அவர்
உடலின் நிலைகள் உருவாக்கி நமக்கு உணவாகக் கொடுத்து நம்மை உருவாக்கி மனித உருவைச்
சீராக்கிக் கொடுத்தவள்.
பிறந்தபின் தன் துன்பத்தைப் பாராது நம்மைக் காத்தவள் தாய். ஆகவே அந்தத் தாயின்
உணர்வை நாம் எப்படி கொண்டுவர வேண்டும்?
நாம் சுவாசித்த உணர்வு நமக்குள்
நந்தீஸ்வரன் ஆக இயக்குகின்றது.
தீமையின் நிலைகளைப் போக்க வேண்டும் என்று நாம் இச்சைப்பட்டால் நம் உயிர் அந்த
உணர்வின் தன்மை நுகர்ந்து அதே உணர்வின் அணுவாக நமக்குள் உருவாக்குகின்றது.
அதைப் பெறச் செய்வதற்குத்தான் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள்
பெற வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெறவேண்டும் என்று எண்ணி இதைப் பல முறை
எண்ணி அந்த உணர்வை நமக்குள் சேர்த்துக் கொள்தல் வேண்டும்.
அகஸ்திய மாமகரிஷியை எண்ணி அவன் பெற்ற உணர்வுகள் நாங்கள் பெறவேண்டும். அவன்
சென்ற பாதையில் நாங்கள் செல்ல வேண்டும் என்று எடுக்க வேண்டும்.
ஏனென்றால் அவன் இதைப்போல தீமைகளை இந்த தோஷங்கள் எல்லாம் நீக்கி ஒளியின் தன்மை
பெற்றவன். அதன் உணர்வை நாம் நுகர்ந்தால் நந்தீஸ்வரன்.
அந்தத் துருவ நட்சத்திரம் நமக்குள் உருவாகி அது ஈசனாக உருவாக்கி நம்முடைய உடலில்
உள்ள தோஷங்களை நீக்க வல்லமை பெற்றது.