ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 15, 2016

கம்ப்யூட்டரில் பதிவாக்கியது தான் அதை இயக்குகின்றது அருள் உணர்வை நீங்கள் பதிவாக்கிக் கொண்டால் அது உங்களைக் காக்கும்

விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு இயந்திரத்தில் கெமிக்கலைக் கலந்து அதிலே காந்தப் புலன்களை ஊடுருவச் செய்து ஆக மோதலாகும் பொழுது அந்தக் கெமிக்கலுக்குத் தக்கவாறு உணர்வின் அதிர்வுகளாகி அதில் ஏற்படும் ஒளிக் கற்றைகள் இன்று மனிதனைப் போல ரூபமாக்குவதும் மற்ற இயந்திரங்களை இயக்குவதும் அந்த ஒலி அலைகளை இயந்திரத்தில் பொருதி விட்டால் காற்றலைகளில் வரக்கூடியதை அந்த உணர்வலைகளை மாற்றியமைத்து அதனுடைய இயக்கத்தின் உண்மையைக் கவர்ந்து அதனின் செயலாக்கங்களை நமக்கு உணர்த்துகின்றது.

இன்று கம்ப்யூட்டரில் பல பதிவான நிலைகள் கொண்டு பிற இயந்திரத்தில் இத்தகைய பதிவாக்கங்களைச் செய்துவிட்டால் அதன் உணர்வு கொண்டு அதைக் காக்கும் தன்மை வருகின்றது. அதை அறியும் ஆற்றலும் பெறுகின்றது. அதன் வழி இந்த இயந்திரங்களை இயக்குகின்றது.

நான் ஒன்றும் அறியாதவனாக இருக்கப்படும் பொழுது குருநாதர் எனக்குள் பதிவாக்கினார். அவர் கூறியதை உற்று நோக்கினேன். உணர்வின் தன்மை பதிவாக்கினேன்.

அந்தப் பதிவின் நினைவு வரப்படும் பொழுது இந்தக் காற்றலைக்குள் இருக்கும் பல தீமைகளையும் இதன் உணர்வு கொண்டு என்னால் அறியக் கூடிய பக்குவத்தை ஏற்படுத்தினார்.

ஆகவே, இதைப் போன்று தான் நீங்கள் ஒன்றுமே தெரியாதவர்களாக இருப்பினும் அதே பக்குவத்தை நீங்களும் பெறுதல் வேண்டும்.

ஏனென்றால், நீங்கள் படித்து உணர்ந்து வருவதற்கு முன் இந்த உணர்வை உற்று நோக்கினால் ஒரு கம்ப்யூட்டர் அதன் உணர்வின் தன்மையைப் பதிவாக்குவது போல் உங்களுக்குள் பதிவாக்கிவிட்டால் இதன் வலுவின் தன்மை கொண்டு நீங்கள் நாளை வரும் விஞ்ஞான அறிவால் விஷத் தன்மை உங்களைத் தாக்கப்படும் பொழுது அதிலிருந்து மாற்றியமைத்து அதற்குத் தப்ப முடியும்.

விஞ்ஞான அழிவில் சிக்கி உணர்வின் தன்மை மீண்டும் அதில் சிக்குண்டு விஷப் பூச்சிகளாக மாறுவதைக் காட்டிலும் கல்கி என்ற உணர்வின் தன்மை கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் அழைத்துச் சென்று என்றும் பிறவி இல்லாத நிலை அடைவதே கல்கி, கடைசி நிலை.

இன்று இந்த அழிவில் சிக்குண்டால் மீண்டும் கலி என்ற நிலைகள் கொண்டு நாம் ஆரம்ப நிலைப் புழுவிற்கே வந்துவிடுகின்றோம். ஆரம்ப நிலை ஆனால் உயிர் ஆரம்பத்தில் இருந்த நிலையே தான் மற்றொன்றை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.

ஆரம்ப நிலையிலிருந்து மனிதனாக மீண்டு வர வேண்டும் என்றால் பல கோடி ஆண்டுகளாகிவிடும். அது வரை வேதனைப்பட்டுக் கொண்டு தான் இருக்க வேண்டும். சற்று சிந்தித்துப் பாருங்கள்.

ஆகவே, இந்த உயிர் மனிதனான பின் கார்த்திகேயா என்ற நிலையான பின் இந்த உணர்வின் தன்மையைத் தான் வளர்க்கப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி உயிரைப் போலவே உணர்வை ஒன்றாக்கி கல்கி என்ற நிலை அடைவதே “நம் குரு காட்டிய அருள் வழி”.

நாம் நல்ல நினைவுடன் இருக்கும்போதே அருள் உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்ளுங்கள். இதை வளர்த்துக் கொள்ளுங்கள். எமது அருளாசிகள்.