ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

May 4, 2016

ஞானப் பசியைப் போக்கும் மெய் ஞானிகளாக, மகரிஷிகளாக நீங்கள் உருவாகுங்கள்

தீய அணுக்களின் உணர்வுகள் நமக்குள் மறைத்திருக்கும் நிலையில் முழு நிலா போல நமக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுக்களையும் நாம் ஒளியாக மாற்றியமைத்தல் வேண்டும்.

இது தானாக மாறுவதில்லை. தானாகச் சேர்தெல்லாம் இருளின் தன்மைதான்.

வேதனைப்படுபவர் உணர்வை நுகர்ந்தால் தனக்குள் தன்னையறியாமலே புகுந்து நல்ல உணர்வை மறைக்கின்றது.

அந்த அருள் ஒளியின் உணர்வு கொண்டு மனிதனான நாம் இந்த இருளைத் துடைத்துப் பழகவேண்டும்.

அருள் வழி செல்வோம். அருள் ஞானத்தைப் பெருக்குவோம். இந்த உலகில் இந்தக் குறைந்த காலத்தில் வாழும் நிலையில் உலக மக்களை இருளிலிருந்து மீட்டிடுவோம்.

அருள் ஒளி பெறவேண்டும் என்று நாம் தவமிருப்போம். அருள் ஒளியின் உணர்வை நமக்குள் தியானிப்போம், அதை வளர்ப்போம். அனவரும் பெறவேண்டும் என்ற நாம் எண்ணங்களைப் பரவச் செய்வோம்.

அனைவரையும் நலம் பெறச் செய்யும் உணர்வை நமக்குள் வளர்ப்போம். தியானம் செய்யும் ஒவ்வொரு குடும்பத்திலேயும் ஒற்றுமையும் பற்றும் ஏற்பட்டு குடும்பத்தில் வாழும் மக்களையும் ஞானிகளாக மாற்றுதல் வேண்டும்.

நாம் அனைவரும் ஞானிகள் அன்று கண்டுணர்ந்தார்கள் என்றால் குரு காட்டிய அருள் வழியில் நாம் அனைவருமே மகரிஷிகளாக வேண்டும். அருள் ஒளியை உருவாக்கும் பெரும் தத்துவ ஞானிகளாக மாறுதல் வேண்டும்.

ஒவ்வொரு மக்களையும் மனிதனென்ற நிலையில் தன்னை அவர்களுக்குள் அறியும் அருள் ஞானத்தை உருவாக்கும் ஞானிகளாக நீங்கள் உருவாக வேண்டும்.

நீங்கள் சிறிது பேராவது நாங்கள் பார்த்தோம் நோய் நீங்கியது, நாங்கள் பார்த்தோம் அவர்கள் திருந்தினார்கள் ங்கள் பார்வையால் நாங்கள் பாக்கும் குடும்பங்களில் ஒற்றுமை ஏற்பட்டது என்ற மகிழ்ச்சியான செய்திகள் தொடர்ச்சியாகக் கொண்டு இங்கே வருதல் வேண்டும்.

அந்தத் தகுதிகளை நீங்கள் உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வித்தை வைத்து நல்ல ஞானத்தின் நிலை அடைந்தால் அதே வித்து தான் பல வித்துகளாகப் பெருகுகின்றது. ஒரு வித்தை வைத்துத்தான் பல வித்துகளாக ஆகின்றது.

ஞானத்தின் உணர்வு எமக்குள் வளர்த்தால் வளர்த்த வித்தினை உங்களுக்குள் விளைய வைத்து அருள் வித்தாக அருள் ஞானத்தை உங்களுக்குள் பெருக்கி அனைவருடைய ஞானத்தின் நிலைகளை ஞானப் பசியைப் போக்கும் நிலைகளாக நீங்கள் உருப்பெறவேண்டும்.

ஒவ்வொருவரும் ஞானியாக வேண்டும். அதன் வழி மகரிஷிகளாக வேண்டும். சிருஷ்டிக்கும் உணர்வின் தன்மை பெறவேண்டும்.