அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து தீமை என்ற நிலையை மாற்றி மாற்றி
நம் உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி மாற்றி நாம் இதைப் பெறச் செய்யப்படும் பொழுது
நாம் உடலை விட்டுச் சென்ற பின் தனுசு கோடி. அது அங்கே சேர்கின்றது.
நம் உடலிலே விளைந்த உணர்வுகள் நோய் என்ற உணர்வு வரும் பொழுது நோயாளியைக்
கேட்கும் பொழுது சிவ தனுசு. உடலிலிருந்து விளைந்தது இன்னொரு மனிதனை வீழ்த்துகின்றது.
இருளை நீக்கிய ஒளி என்ற உயிரென்ற விஷ்ணு தனுசை நாம் எடுத்தால் உயிருடன் ஒன்றிய
உணர்ச்சிகளை நாம் பாய்ச்சுவோம் என்றால் இந்தத் தீமை என்ற உணர்வை மாற்றிவிடலாம்.
நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியிலும் தீமை என்று கண்டபின் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நமக்குள் சேர்த்துத் தீமைகளை மாற்றி மாற்றி இந்த
உடலுக்குள் எல்லா உணர்வுகளும் இருந்தாலும் அந்த உணர்வுகளை ஒன்றெனச் சேர்த்துத்
தனுசுகோடி என்ற நிலைகளில் எல்லா உணர்வும் உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரம் பெறும்
தன்மை பெறவேண்டும்.
ஆகவே, நாம் செய்ய வேண்டிய முறைகள் எது?
ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனும் மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போல
வாழ்ந்து காட்ட வேண்டும். முந்தைய காலங்களில் வாழ்ந்த பெரியவர்களைப் பார்க்கலாம்.
கணவன் இறந்துவிட்டார் என்றால் உடனே மனைவியும் சேர்த்து இறந்துவிடும். மனைவி
இறந்துவிட்டால் அதே போன்று கணவனும் ஒரே மூச்சில் இரண்டு பேரும் இறந்துவிடுவார்கள்.
இப்பொழுது அந்த மாதிரி எங்கே இருக்கின்றார்கள்?
ஏனென்றால், ஒன்றிய உணர்வுகள். அவர்கள் உணர்வின் தன்மை ஒளியான பின் அவர்கள்
சொல்வர்கள். நான் இத்தனை நாளில் போகின்றேன். என்னைப் பற்றி யாரும்
கவலைப்படாதீர்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக இருங்கள் என்று சாகிறதற்கு இரண்டு
நாள் முன்னாடி சொல்வார்கள்.
இப்பொழுது ஒன்று இரண்டு பேர் தப்பி அவ்வாறு செல்கிறார்கள்.
காரணம் இதெல்லாம் அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் தன்மை அவர்கள் உடலை
விட்டுப் பிரியும் நேரம் எதன் உணர்வைப் பெற்றனரோ அதை அறியும் தன்மை அவர்களுக்கு
வருகின்றது.
ஆக, பண்டைய காலங்களில் தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் காலையில் அந்தத் துருவ
தியானங்களைச் செய்து பழகியவர்கள். அது காலத்தால் மறைந்து விட்டது.
அன்று வாழ்ந்த அகஸ்தியனும் அவர் மனைவியும் இரு மனமும் ஒரு மனமாகி இரு உணர்வும்
ஒன்றெனெ இணைந்து இரு உயிரும் ஒன்றி இல்லற வாழ்க்கையில் இருளை அகற்றி ஒளியின்
சரீரம் பெற்று துருவ நட்சத்திரமாக இணைந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தான் பெற்ற சக்தி தன் மனைவி பெறவேண்டும் என்றும் தன் கணவன் பெறவேண்டும் என்று
ஒன்றி வாழ்வோம். இந்த வாழ்க்கையில் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று ஒன்றுபட்டு
வாழ்வோம். நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடப்போம். சாவித்திரியைப் போன்று
ஒன்றியே வாழ்வோம்.
அகஸ்தியமாமகரிஷி பெற்ற நிலைகளை நாமும் பெறுவோம். அவர் சென்ற அருள் வழியினைக்
கடைப்பிடிப்போம். மகிழ்ந்து வாழ்ந்திடும் அருள் சக்தியைப் பெறுவோம்.