
உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக மாற்றுவது தான் நமக்கு நல்லது
ஒரு ஆடு புலியைப் பார்க்கின்றது… புலியோ அதைக் கொன்று தின்னும் நிலை பெற்றது. அதனிடமிருந்து தப்பிக்கும் சிந்தனை ஆட்டிற்கு வருகிறது.
புலியின் உணர்வே நினைவாகின்றது. நினைவின் உணர்வே
உடலாகின்றது… ஆட்டின் உடலில் அது வலுப்பெறுகின்றது. அந்தச் சிந்தனை கொண்டு
அதனிடமிருந்து தப்பிக்க அதனின் வலுப்பெறுகின்றது…
அதுவாகின்றது.
மனிதர்களான நாம் இந்த உடலிலிக்கும் போது
1.எனக்கு இப்படிச் செய்தானே… துன்பம் கொடுத்தானே என்ற இந்த சிந்தனை இந்த உணர்வின்
தன்மை வருகிறது.
2.இந்த இடத்தை நாம் வலுவாக்குகின்றோம்… அந்த உடலுக்குள் சென்று விடுகின்றோம்.
ஆனால் உடலிலே வந்த தீமைகளை அகற்ற “மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…” என்று
1.அந்த உணர்வின் தன்மை… நம் சிந்தனையை அதற்குள்
செலுத்தினோம் என்றால்
2.அதனின் உணர்வாகி அதனின் நிலைகள் கொண்டு மனித உடலில் ஒளியாக மாற்றிக் கொள்ள
முடியும்.
இந்த உடலிலிருந்து தான் ஒளியாக மாற்றி அமைக்க
முடியும். இன்னொரு உடலுக்குள் இழுக்கப்பட்டு விட்டால் மீண்டும் வேறு ஒரு உருவாக உயிர் நம்மை மாற்றிவிடும்.
ஆனால் மகரிஷிகளின் அருள் சக்தியை
எடுக்கப்படும் பொழுது ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
1.அங்கே… உடல்கள் உருவங்கள் மாறுகின்றது.
2.இங்கே… ஒளியின் தன்மை பெறுகின்றோம்.
உயிர் ஒளியானது… மனிதனான பின்
அறிவாக அறிந்து கொள்கிறோம். அறிந்திடும் ஒளியின் உணர்வாக விளைகின்றோம். மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று உடலில் “சிந்தனை
வந்த பின்பு தான்…” இதிலே உறைந்த உணர்வுகள் அதனின்
இயக்கத்திற்கு வருகின்றது.
நான் கோபமாக இருக்கின்றேன் என்று வைத்துக் கொண்டால் எனக்கு அது சாதகமாக இருந்தால்
நல்லது. நான் தவறு செய்கின்றேன்… நண்பன் என்னுடைய தவறுக்கு ஒத்துழைத்தால் இது நல்லதாகின்றது.
ஆனால் மாறாக… என் தவறைச் சுட்டிக் காட்டும் நிலை வந்தால் எனக்கு எதிரியாகின்றது. ஆக நல்லது நல்லதாக எண்ண முடியாது... கெட்டது கெட்டதாக எண்ண முடியாது.
1.தனக்கு ஒத்து வந்தால் நல்லது என்று எண்ணுகின்றோம்…
2.ஒத்து வரவில்லை என்றால் எதிரியாக்குகிறோம்.
மிளகாய் காரமானது தான். அதை அளவுடன் இணைத்தால்
நல்லதாகிறது அதிகமாகப் போட்டுவிட்டால்
ஏற்றுக் கொள்வதில்லை… குறைத்துப்
போட்டு விட்டால் சப்… என்று ஆகிவிடுகிறது.
நல்லது நல்லதும் அல்ல… கெட்டது கெட்டதும் அல்ல.
1.ஒளியின் சரீரம் பெற்ற… என்றுமே நிலையாக
இருக்கும் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்தால்
அதுவே நமக்கு நல்லது.
2.உயிர் ஒளியாக நின்று எதையெல்லாம் தனக்குள் அறிவிக்கின்றதோ “உயிருடன் ஒன்றிடும் உணர்வை ஒளியாக
மாற்றுவது தான் நமக்கு நல்லது…”