ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 17, 2026

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”

தான் பெற்ற சக்தி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று “அவ்வப்போது எண்ண வேண்டியது மிக மிக அவசியம்…”


சிவ சக்தியாகக் கணவன் மனைவியாக எம்மைச் (ஞானகுரு) சந்திக்க வருகின்றீர்கள் உபதேசத்தையும் கேட்கின்றீர்கள்… தியானமும் இருக்கின்றீர்கள்.
 
இருந்தாலும் சந்தர்ப்பத்தால்… தனித்த நிலைகள் வருவோர் சிலர் எம்முடைய நுண்ணிய உபதேசங்களைக் கேட்கப்படும் பொழுது
1.மனைவி தன் அருகில் இல்லை என்றாலும்
2.இந்த உபதேசக் கருத்துக்கள் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணினீர்களா…? சொல்லுங்கள் பார்க்கலாம்…!
 
ஆனால் யாம் உங்களிடம் இதை முதலில் சொல்லாமல் விட்டதன் நோக்கம் என்ன…?
 
மெய் ஞானிகளைப் பற்றி உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். இந்தச் சக்தி ன் மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும். திருமணம் ஆகாதவர்கள் தன் தாய் தந்தையருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
தன் மனைவி பெற வேண்டும்… தன் தாய் தந்தையர் அது பெற வேண்டும் அவர்கள் அருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று யாராவது ப்படி நினைக்கின்றீர்களா…? யாரும் நினைத்திருக்க மாட்டீர்கள்…!
 
மற்ற நேரங்களில் எல்லாம் எண்ணுகின்றோம். இருந்தாலும் சாமி இங்கே வந்திருக்கின்றார் அவருடைய உபதேசத்தை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்திலே சாமியை எண்ணும் பொழுது அதை மறந்து விடுகின்றீர்கள்.
1.சாமி மேலே ஞாபகம் இருக்கின்றது.
2.ஆனால் தன் மனைவி தாய் தந்தையர் பற்றி எண்ணம் இல்லாது போய் விடுகின்றது.
 
சாதாரணமாகத் தியானிக்கும் போது எல்லோரையும் எண்ணுவீர்கள். ஆனால் சாமி இங்கே உபதேசிக்கின்றார்…” என்று அதை மட்டும் தான் எண்ணுகின்றீர்கள்.
1.ஆனால் இந்த மாதிரி நேரங்களில் இதை மாற்றிப் பழக வேண்டும்.
2.நீங்கள் தனியாகக் கேட்டாலும் உபதேசத்தைக் கேட்டுத் தியானிக்கும் பொழுது
3.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று அவசியம் என்ன வேண்டும்.
4.அந்த அருள் ஒளி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்
5.அந்த அருள் ஞானத்தை எனக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக எண்ண வேண்டும்.
 
இதே போல மனைவி மட்டும் எமது உபதேசத்தைக் கேட்டுத் தியானித்தால் அவர்களும் இதே போன்று கணவனுக்கு எண்ண வேண்டும். அவர்களும் இதைப் போன்ற பழக்கத்திற்கு வந்தால் எங்கிருந்தாலும் இந்த சக்தி உங்களுக்கு உறுதுணையாக அமையும்…”
 
சாமி என்ற நிலை வரும் போது சாமியை மட்டும் தானே நினைவு கொண்டு எண்ணுகின்றீர்கள்… அதை உங்களுக்குள் பதிவு செய்கிறீர்கள்.
 
இப்பொழுது சொல்லி உங்கள் நினைவாற்றலைத் தூண்டி அதைப் பதிவு செய்கின்றோம்.
1.ஆகவே எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று இச்சைப்பட்டு அவசியம் அதை இணைத்துப் பழக வேண்டும்.
2.இச்சா சக்தி கிரியா சக்தி என்ற நிலைகளுக்கு வளர்ச்சிக்குக் கொண்டு வர வேண்டும்.
 
மனைவி பெற வேண்டும் என்றும் கணவன் பெற வேண்டும் என்றும் இப்படி ஒருவருக்கொருவர் உயர்ந்த உணர்வுகள் கிடைக்கும் போதெல்லாம் இச்சைப்பட்டு வர வேண்டும்…”
 
ஆக இணைந்த நிலைகளிலேயே கிரியை ஆக்கிச் செயல்பட்டு கொண்டு வர வேண்டும். இந்தப் பழக்கத்திற்கு வர வேண்டும் என்பதற்குத் தான் இதை இப்பொழுது ஞாபகப்படுத்தி உங்களுக்கு உணர்த்துகின்றோம்.