ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 23, 2026

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்

அகஸ்தியனைப் போன்றே இந்தப் பூமியை மீண்டும் நாம் சமப்படுத்த வேண்டும்


சிவன் ஏனோ ஆகால விஷத்தைக் கழுத்தில் நிறுத்திக் கொண்டான் என்று சொல்வார்கள். நம் பூமி தான் சிவம் இதற்குள் உருவானது தான் அனைத்தும்.
 
சிவம் இல்லையேல் சக்தி இல்லை.
1.துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றலைப் பூமி நுகர்கின்றது
2.விஷத்தின் தன்மை பூராம் அங்கே அடக்குகின்றது.
 
வெப்பத்தின் தன்மை கொண்டு ஆவியாக மாறுகின்றது. இந்த உணர்வின் தன்மை மற்றொன்றுடன் சேர்க்கின்றது. சேர்த்து அங்கே திரளுகின்றது வெண்ணை ஆகின்றது.
 
ப்படி விளைந்தது பூராம் எப்படி உருவங்களாக உருவானது என்று சாஸ்திரங்கள் தெளிவாகக் கூறுகின்றது.
 
அதாவது…
1.மேரு என்ற மலையை மத்தாக வைத்து அப்படி என்றால் பூமி சுற்றுகின்றது.
2.வாசுகி என்ற பாம்பைக் கயிறாக வைத்து என்றால் விஷத்தின் தாக்குதல்… அது தொடர்ந்து தாக்கும் போது தான் பூமியைச் சுழற்றுகின்றது.
 
துருவத்தின் வழி விண்ணுலக ஆற்றல்களை நுகரப்படும் பொழுது அது சிவம் பார்வதி. அதன் வழி உள்ள வந்து அங்கே இணையும் பொழுது சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் (பனிப்பாறையாக உறையும் இடம்).
 
அந்த இடத்திலே சக்திகள் சேமிக்கப்படும் பொழுது நீளமாக வளர்ந்து கொண்டே வருகின்றது. இது வளர்ச்சியாகி அப்படியே சென்று விட்டால் தலை குப்புறக் கவிழ்ந்து விடும்.
1.அகஸ்தியனால் ஆரம்பத்தில் இது தடுக்கப்பட்டு மாற்றப்பட்டது
2.ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய காலகட்டத்திலே பல அகஸ்தியர்கள் தோன்றினால் தான் மீண்டும் உலக மாற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.
 
அணுக்கதிரியக்கத்தைப் ஒரு பக்கத்திலே வெடிக்கச் செய்தால் பூமியின் ஈர்ப்பு வழி கூடி மேகங்கள் வரப்படும் போது காந்த ஈர்ப்பின் தன்மை தடுக்கப்பட்டால் பூமியை மாற்றலாம்.
 
ஆனால் இவர்கள் எடுத்த அணு விஷக் கதிரியக்கம் இங்கே பரவும். இதிலேயும் லாயக்கில்லை அதிலேயும் லாயக்கில்லை. கதிரியக்கங்களால் அடர்த்தியாக முடியும். சூரியனுடைய ஒளிக்கதிர்கள் மாற்றப்படும் பொழுது பூமியைத் திசை மாற்றலாம்.
 
ஆனால் அணுக்கதிரியக்கங்கள் ங்கே பரவினால் யார் வாழ முடியும்…? திசை திருப்பலாம்… விஷத் தன்மைகள் தான் பரவும்.
 
1.சூரியனின் தொடர் கொண்டு தன் எண்ணத்தால் அதை குறுக்காட்டப்படும் பொழுது அகஸ்தியன் அன்று திசை திருப்புகின்றான்.
2.அப்படித் திருப்பி நிலைகள் தான் அங்கே ஒரு அண்டம் வருகின்றது...து கரைகிறது.
 
இப்படி அவன் வளர்த்துக் கொண்டான்.
 
இன்னொரு காலம் இந்தப் பூமிக்குள் அது போல் வரும். அதிலே நாம் தப்பித்தால் நல்லது. தப்புவிக்க யாம் சொல்வது என்ன…?
 
கஸ்தியன் அவன் தாய் கருவிலே எவ்வாறு வளர்ச்சி பெற்றானோ அதைப் போல் கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கும் அதே சக்தியை ஊட்ட வேண்டும்.
 
அந்தக் கருவிலே உருவான சிசுக்களுக்குள்
1.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி விளைய வேண்டும்
2.அஸ்திய மாரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
3.சப்தரிஷி மண்டலங்களின் சக்தி விளைய வேண்டும்
4.உலக ஞானம் பெற வேண்டும் என்று கருவுற்ற தாய் ஊட்டினால்
5.அந்த சக்தி மீண்டும் வந்து அந்த அகஸ்தியன் பெற்ற ஆற்றலைப் பெறும் தகுதியாக வருகிறது.
 
அவர்களுக்கு இந்த உபதேசத்தை கொடுத்துக் கருவிலேயே பூர்புண்ணியமாகக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறோம்.
 
ஆக அகஸ்தியநின் ஆற்றலைப் பெறும்படி செய்து பூமியின் மாற்றங்களை நாம் சீர்படுத்திக் கொள்ள முடியும்.