ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 19, 2026

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்

நரக வேதனைப்பட்டு… அது என்னை எப்படித் துன்புறுத்துகிறது…? என்று கண்டுணர்ந்து தான் இதைச் சொல்கிறேன்


உதாரணமாக வேதனைப்படுவர் உணர்வை நாம் நுர்ந்து விட்டால் மீண்டும் அவனைப் பற்றியே நம்மை எண்ண வைக்கின்றது. அந்த வேதனையான அணுக்கள் நமக்குள் பெருகுகின்றது. பின் வேதனைப்படும் உடலாகவே உயிர் மாற்றி விடுகின்றது.
 
வேதனைப்பட்டவன் எத்தன்மை கொண்டு அவ்வாறு ஆனானோ அவன் வேதனையாக இருப்பினும்
1.அவனின் எண்ணம் நமது வாழ்க்கையில் தொடர்ந்து வரப்படும் பொழுது… தன் குடும்பத்தினை எண்ணி
2.என் பிள்ளை இப்படி இருக்கின்றான் அவனுக்கு ப்படி நோயாகி விட்டது…!
3.நோயினால் பொருள் போய்விடுமே…! என்ற த்தகைய எண்ணங்கள் வருகின்றது.
 
அதாவது வேதனைப்பட்டவரின் உணர்வுகள் இங்கே கலந்து புது வித்தாக உடலில் உருவாகின்றது.
 
நோயால் இறந்தாலும் அந்த நோயைப் பற்றி விசாரித்துக் கேட்டறிந்த மனிதன் இவருடைய உணர்வுக்குத் தக்க விஷத்தின் உணர்வுகள் மாறி இவரும் அந்த ரூபத்திற்குப் போவார்.
 
இதை எல்லாம் நேரடியாக…” எம்மைக் காணும்படிச் செய்தார் குருநாதர். ஒவ்வொரு இடங்களுக்கும் எம்மைப் போகச் சொல்லி “20 வருடம் பார்த்துவிட்டுத் தான்…” உங்களிடம் சொல்கின்றேன்.
 
வேதனை இங்கே மாறும் போது அதற்குப் பெயர். அதர்வண வேதத்தின் மூலங்களை புரிந்து கொள்.
1.வேதத்தை எப்படித் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள் என்பதை நீ உற்றுப் பார்…!
2.அந்தத் தவறின் நிலைகளுக்கு நீ சென்று விடாதே…! என்றார் குருநாதர்.
3.காரணம்… இன்று உடலில் இச்சைக்குத் தான் அதர்வண வேதத்தைக் கொண்டு சென்று விட்டார்கள்.
4.ஆனால் அருள் ஒளியாக யஜூர்…! பேரின்ப நிலைகளுக்கு அதைக் கொண்டு செல்லவில்லை.
 
இறந்த பின் யாருக்கு என்ன தெரியப் போகிறது…? என்று விட்டு விடுகின்றார்கள்.
 
அதர்வண யஜூர் மீண்டும் சாம அவருடைய வேதனையைண்ணும் பொழுது உடலில் நோயாகின்றது மனித உருவத்தையே மாற்றி விடுகின்றது.
 
தினமும் தியானமிருக்கின்றோம். இருந்தாலும் பிறிதொரு வேதனை உணர்வை நுகர நேர்கிறது. தான் எண்ணிய காரியம் நடக்கவில்லை என்றால் வேதனையான உணர்வுகளைச் சேர்த்து இணைத்து விடுகின்றோம். அதர்வண… நம் நல்ல குணத்தை அப்போது அது அடக்குகிறது.
 
நல்லவர்களுக்கு நல்ல காரியத்தைத் தான் செய்தோம். மேலே சொன்ன அதர்வண என்று ஆகும் பொழுது
1.மீண்டும் நாம் நல்லதைச் சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
2.முதலிலே நாம் சொன்னதைக் கேட்டிருப்பார்கள்.
3.அன்று என்னிடம் எல்லாம் இருந்தது…! கேட்டார்கள்…! இன்று என்னைத் தூற்றுகின்றார்கள் என்போம்.
4.நம்மைக் கண்டாலே வெறுப்பு வருகின்றது… என்ற இந்த நினைவாற்றல் தான் இங்கே கடைசியில் வருகின்றது.
 
இத்தகைய நிலை உருவாகி விட்டால் மாற்ற வேண்டும் அல்லவா…!
 
காலை துருதியானத்தில் அரும்பெரும் சக்தியைக் கொடுத்து உங்களைப் பெறும்படி செய்கின்றேன். எண்ணும் பொழுது கிடைக்கும்டியும் செய்கின்றேன்.
1.இதை விடுத்து விட்டு உடலின் இச்சைக்கு நீங்கள் இணைத்து விட்டால்
2.அதைத்தான் உங்கள் உயிர் உருவாக்குமே தவிர வேறு நல்லது கிடைக்காது.
 
குருநாதர் எனக்குப் பல சிரமங்களை உண்டாக்கி அது எப்படி உருவாகின்றது…? அதிலிருந்து நீ எப்படி விடுபட வேண்டும் மாற்றி அமைக்க வேண்டும்…? என்று அரும் பெரும் சக்தியைக் கொடுத்தார்.
 
நீங்கள் என்னைப் போன்று காட்டிற்குள் சென்று என்று தெரிந்து கொள்வது…? அப்படி முடியாது.
1.நரக வேதனைப்பட்டுத் தான்
2.ஒவ்வொரு வேதனையும் எப்படி என்னைத் துன்புறுத்துகிறது என்பதைப் பார்த்துவிட்டுத் உங்களிடம் வந்து சொல்கிறேன்.
 
தான் எண்ணிய காரியம் தோல்வி அடைந்தால் சோர்வு வருகின்றது. அப்பொழுது சிந்திக்கும் வலிமை இழக்கப்படுகிறது.. மாற்றமாகிறது. எண்ணியபடி நடக்கவில்லை என்றால் விஷமாகின்றது.
 
வேதனை என்ற மூன்றும் சேர்த்துக் கருவாகி இந்த உயிர் அந்த அணுவாக உருவாக்கி விடுகின்றது.
1.மீண்டும் நான் நினைத்தேன் தியானித்தேன் வரவில்லையே…! என்று எண்ணுவதும்
2.சாமி சொன்னார் “எனக்குக் கிடைக்கவில்லையே கிடைக்கவில்லையே…” என்ற உணர்வைச் சேர்த்துத் தான் அதை வளர்க்க முடியும்.
3.அப்போது வலுக்கொண்ட நிலையில் சாமியை எண்ணுவீர்கள்… ஆனால் சாமி சொன்னதை விட்டு விடுவீர்கள்.
 
உதாரணமாக வயலில் விதைத்திருக்கின்றோம்… பயிர் வளர்ந்திருக்கின்றது. அதிலே களைகளை எடுங்கள் சொன்ன பின் களையை எடுப்பதற்கு மாறாக செடி முளைத்திருப்பதைத் தட்டி விட்டால் என்ன ஆகும்…?
 
நல்ல வித்தினைத் தான் கொடுத்துள்ளார்கள். நல்ல பயிரைப் பிடுங்கி விட்டால் என்ன ஆகும்…? இதுவும் போய்விட்டது.
 
அது போல்
1.யாம் கொடுத்த அருள் ஞான வித்தை வளர்க்கும் போது
2.சந்தர்ப்பத்தில் வரும் களையை நீக்குவதற்குப் பதில் ஞான வித்தையே வீழ்த்தி விடுகின்றோம்.
 
நல்ல குணத்தை உயர்ந்த நிலைக்குச் செல்லப்படும் போது இந்த உணர்வுகள்  அதர்வண. இதை அடக்கி இதனுடன் இணைந்து யஜூர் அணுவின் தன்மை அடைந்து விடுகின்றது.
 
அதன் பின் மீண்டும் உங்கள் நினைவு எதிலே வரும்…? அந்தக் காரியத்தை எண்ணும் போதெல்லாம் தன்னைச் சோர்வடையச் செய்யும். வேதனை என்ற நிலைகள் உருவாக்கிக் கொண்டே வரும்.
 
புழுவில் இருந்து எப்படி மனிதனாக வளர்ச்சி அடைந்து வந்தோம்…? தன்னைக் காட்டிலும்லு கொண்ட உடல்களிலிருந்து மீள வேண்டும் என்ற உணர்வைச் சேர்த்து இந்த உணர்வின் தன்மை உடல் மாற்றத்திற்கு அதன் வலிமையைச் சேர்த்து அதர்வண ஜுர் அதன் நிலையை எடுத்துப் பரிணாம வளர்ச்சியாகி அதன் தொடர் கொண்டு தான் மனிதனாக வந்தோம்.
 
இத்தனையும் கடந்து வந்த மனிதன் மீண்டும் சந்தர்ப்பத்தால் எடுத்துக் கொண்ட இச்சையின் உணர்வு கொண்டு எண்ணியது நிறைவேறவில்லை என்றால் சோர்வும் வேதனையும் உருவாகிறது. அத்தகைய அணுவின் தன்மை வளரப்படும் பொழுது நல்ல குணங்களை அது அடக்கி விடும் அதர்வண.
 
அடக்கி அதனின் செயலாக்கங்களாக அதிலே உருவாகும் கருவின் தன்மையாக அணுவின் தன்மையாக உயிர் உருவாக்கி விட்டால் யஜுர் மீண்டும் சாம வேதனைப்படும் நிலைக்கே அது கொண்டு செல்லும்.
 
1.இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டால் உடனே ஈஸ்வரா… என்று உயிரை எண்ணுங்கள்.
2.அரும் பெரும் சக்தியை உங்களிடம் கொடுத்திருக்கின்றேன்.தை ஒரு நிமிடம் எண்ணி எடுப்பதற்கு என்ன…?
 
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று உயிரிடம் வேண்டுங்கள். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் ஜீவான்மா பெற வேண்டும் என்று இணைத்துக் கொண்டே வாருங்கள்.
 
வேதனை என்ற உணர்வை அடக்கி அதர்வண…!
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து அந்த அணுக்களைச் சேர்க்கப்படும் பொழுது அடுத்து என்ன செய்யும்…?
2.அந்தத் துருவ நட்சத்திரத்தையே அது எண்ணும்படிச் செய்யும்ப்பொழுது யஜூர் ஆக மாறுகின்றது.
 
அந்த ஒளியான வித்தினைத் தான் நமக்குள் வளர்க்க வேண்டும்.