
குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததைப் பதிவு செய்கின்றேன்
மகரிஷிகள்
உணர்வை உங்களுக்குள் ஆழமாகப் பதிவு செய்கின்றேன். இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் அதை வளர்த்துக் கொள்ளுங்கள். அருள் ஞானச் செல்வமான ஞானிகள் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள். அழியா ஒளி உடலைப் பெறுங்கள்.
1.பூமியில் மீண்டும் உடல் பெறும் உணர்வுகள்
நமக்கு வேண்டாம்.
2.காரணம்
இந்தப் பூமி நிலை தடுமாறும் நிலைகள் வந்துவிட்டது… ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள்.
ஆயிரம் ஆண்டு
நாம் வாழ்வதில்லை. ஆனாலும் இந்த உயிரின் தன்மை கொண்டு உடலில்
மாற்றங்கள் ஏற்பட்டால்
1.மனித
நினைவு இருக்காது…. அதிலே சிக்கினால் நரக வேதனையைத் தான் அனுபவிக்க நேரும்.
2.1000 ஆண்டுகளில் சூரியன் பிரிந்து சென்று விட்டால் பிரபஞ்ச வாழ்க்கையும் முடிந்தது.
3.பூமி
பனிப் பாறைகளாக மாறி… வியாழன் கோள்
போல் ஆகிவிடும். இந்தச் சூரிய
குடும்பம் சிதறுண்டு ஓடி விடும்.
இதிலே
இருக்கக்கூடிய 27 நட்சத்திரங்களும் அதனுடைய
குடும்ப நிலைகளாக வளர்ச்சிக்குப் போகும். அது முழுமை பெற்று சரி பகுதிக்கு மேல் பிரிந்து சென்று விட்டால் சூரியக் குடும்பங்களாக மாறி “ஒரு வட்டமாக 2000 சூரியக் குடும்பத்துடன் இணைந்து
விடும்…”
1.நமது குருநாதரும் மற்ற மகரிஷிகளும் அறிந்துணர்ந்ததை உங்களுக்குள்ளும் இப்போது
பதிவு செய்கின்றேன்.
2.என்றும்
அழியா பெரு வாழ்வு என்ற… நிலையான ஒளிச்
சரீரம் பெறுவோம்.
நஞ்சினை
வென்று உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக
மாற்றி என்றும் நாம் நிலைத்திருப்போம்… அந்த எல்லையை அடைவோம் என்று சபதம் எடுப்போம்.
இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும்
1.எத்தகைய
தீமைகளையும் உங்களுக்குள் அணுக விடாதீர்கள்.
2.அருள்
ஞானிகள் உணர்வைக் கொண்டு அதைத் துரத்தி
அடியுங்கள்… அந்தப் பழக்கத்திற்கு வாருங்கள்.
ஆகவே அருள் ஞான
உணர்வை அழியாச் சொத்தாக நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். அது என்றுமே நிலைத்திருக்கும்.
குணச் செல்வம்
இருப்பினும் கூட சிறிது காலம் தான் இருக்கும்… அதுவும்
அழிந்துவிடும். ஆனால் அழியா ஒளிச் சரீரம்
பெற்று விட்டால் அது என்றுமே அழிவதில்லை. அதன் வழியில் நாம் அனைவரும் செல்வோம்.
கேட்டுணர்ந்தவர்கள் இதைப் பெற முயற்சி செய்யுங்கள்… நிச்சயம் பெறுவீர்கள். வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துங்கள். நம் அனைவரும் ஒருங்கிணைந்த நிலையில் வர வேண்டும்.
ஒரு பிரபஞ்சம் எவ்வாறு
இயக்குகின்றதோ அதை போல்
1.நாம் அனைவரும் குரு வழியில் குருநாதரின் இயக்கத்திற்குள் ஒரு பெரிய பிரபஞ்சமாகி
2.உலகில் உள்ள தீமைகளை அகற்றிடும் உணர்வுகள் நமக்குள் விளைந்து
3.தீமை
வராது நம்மைக் காத்திடும் உணர்வுகளாக வளர வேண்டும்.
ஒருங்கிணைந்த
நிலைகள் கொண்டு மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறுவோம். உலகைக் காத்திடும் உணர்வை விளைய வைப்போம். இந்த உலகைத் தீமையிலிருந்து விடுபடச் செய்யும் நிலையாக
வளர்ப்போம்.
நீங்கள்
இதைக் கடைப்பிடியுங்கள். வாழ்க்கையில்
வரக்கூடிய துன்பங்கள் தூசியாக மாறிவிடும் எத்தகைய
நஞ்சானாலும் தூசியாக மாறிவிடும். அருள்
ஞான சக்திகள் என்றுமே உங்களுக்குள் விளைந்து
விடும். பேரானந்த நிலைகள் பெறும் தகுதியை இந்த உடலிலேயே
பெற்றிடுவோம்.
1.அருள்
செல்வம்… அருள் ஞானம் இந்த உலகம்
முழுவதும் பரவட்டும்
2.மகரிஷிகள்
அருள் சக்தி இந்த உலகம் முழுவதும் பரவட்டும்… மெய் உணர்வுகள் மலரட்டும்.
இந்த
மகிழ்ச்சியின் நிலைகள் கொண்டு உலகைக் காத்திடும் உணர்வுகள் எல்லா
இடங்களிலும் பரவட்டும். அதை நமக்குள் விளைய வைப்போம் என்று எல்லோரையும் வேண்டிக் கொள்கின்றேன்.