ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

February 11, 2026

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்

பெண்கள் துணை இல்லையென்றால் சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்


தான் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதைப்போல உயிருடன் ஒன்றி ணைந்து வாழ்வதே வசிஷ்டரும் அருந்ததியும் என்பது.
 
உடலில் இருக்கும் பொழுது தான் ஆண்பால் பெண்பால். உடலை விட்டுச் சென்று விட்டால் றைந்தது ஆண்பால் தான்.
 
1.பெண்பால் என்பது உணர்வின் உணர்வுகள் இங்கே வருவது தான்.
2.அது ரண்ட இணைந்து விட்டால் ஆண்பால் பெண்பால் சேர்ந்து கலந்தே செயல்படும்… “சிவசக்தி…” என்பார்கள்.
 
ஆகவே பெண்கள் தான் ஆண்களைக் காட்டிலும் பெரும்பகுதி தனக்குள் சக்தி வாய்ந்த நிலையை உருவாக்கி ஏழாவது நிலை பெற்றுச் சப்தரிஷி மண்டலங்களாக உள்ளார்கள்.
 
ண்களைப் பற்றித் தான் பெரும்பகுதி சொல்கின்றார்கள் பெண்கள் ரிஷித் தன்மை பெற்றது பற்றிச் சொல்லவில்லையே…! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
காரணம்… சாஸ்திர விதிகள் அனைத்துமே பெண்களைப் பற்றி இழுக்குப்படுத்தித் தான் வெளிப்படுத்தி இருப்பார்களே தவிர உயர்ந்த நிலைகளைச் சொல்வதில்லை.
 
பதிவிரதையாக இருக்க வேண்டும் உத்தமியாக இருக்க வேண்டும் என்று பெண்களுக்குத் தான் கட்டுப்பாடு ஆண்களுக்கு அப்படி இல்லை. எல்லா மதத்திலும் அப்படித்தான் பெண்களைத்தான் பழித்து பேசியிருப்பார்கள்.
 
ன்று ஆணாக இருக்கலாம்
1.ஆனால் உருவம் ஆகப்படும் போது பெண்கள் மீது மோகம் கொண்டால் அடுத்து இவர் பெண்ணாகத்தான் பிறப்பார்.
2.இன்று ஆண் பெண்ணாகப் பிறக்கின்றான்.
 
இதைப் போல சக்தி என்பது பெண்பால் தான். எது கவர்ந்து கொண்ட சக்தியோ வசிஷ்டரும் அருந்ததி போல கவர்ந்து கொண்ட சக்தியாகத்தான் இந்த உணர்வுகள் ஈர்க்கும்.
1.பெண்கள் தான் ஏராளமானோர் சப்தரிஷி மண்டலத்தில் (ஆண்பால் பெண்பால்) சிசக்தியாக உணர்வின் இயக்கமாக இயக்கி வருகின்றனர்.
2.தன் கணவனின் எண்ணம் கொண்டு இணைந்திட்ட உணர்வுகள் சிவ சக்தியாக இயங்கிக் கொண்டுள்ளார்கள்.
3.தான் எடுத்துக் கொண்ட உணர்வுகள் எதுவோ உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக சிசக்தியாக இன்றும் இருக்கின்றார்கள்.
 
ஆண்கள் அங்கே குறைவுதான் பெண்கள் தான் அங்கே அதிகமாக இணைந்துள்ளார்கள். ஆண்கள் ஒளி நட்சத்திரமாக ஆன நிலைகள் குறைவுதான். பெண்களுடைய சக்தி உறுதி கொண்டு தான் அவர்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள்.
 
தங்கள் உடலிலே ஒரு கஷ்டம் வந்தாலும் பெண்கள் அதை எண்ணுவதில்லை. விட்டுக் கஷ்டத்தைப் போக்க மில்லில் வேலை செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் காலையில் எழுந்து குடும்பத்திற்கு வேண்டி அனைத்தையும் சமைத்து எல்லோருக்கும் சாப்பாடு போட்டு அவர்களும் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு முதலிலே வந்து உற்பத்தியையும் அதிகமாக எடுத்து விடுகின்றனர்.
 
பெண்களுக்கு வலிமை அதிகம் ஆண்களுக்குக் குறைவுதான். நான் தவறாகச் சொல்கிறேன் என்று யாரும் எண்ண வேண்டியதில்லை…! இயற்கையின் உணர்வின் சக்தி அதுதான்.
 
அவர்கள் உடலில் முடியவில்லை என்றாலும் வலுவான எண்ணங்கள் கொண்டு சப்தரிஷிகளின் அருள் சக்தி பெறக்கூடிய தகுதி அவர்களுக்குத் தான் உண்டு.
1.எந்த அளவுக்குப் பெண்கள் தனக்குள் அதை வளர்க்கின்றார்களோ இந்த எண்ணம் உலகைக் காக்கும் நிலைக்கே வரும்.
2.சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை.
 
மற்றதை வளர்த்திடும் நிலையாக தன் இனத்தை வளர்த்திடும் காத்திடும் நிலைகள் பெற்றவர்கள் தான் பெண்கள். எதனின் உணர்வு கொண்டு கருத்தன்மையாகிக் குழந்தையை உருவாக்குகின்றார்களோ அந்த மெய் உணர்வை வளர்க்கும் ஆற்றல் அவர்களுக்குத்தான் அதிகமாக உண்டு.
 
எதனின் பற்று அதிகமாகின்றதோ அதனின் தன்மை கொண்டு வளர்த்திடும் சக்தியும் சக்தி அதிகமாகின்றது. பெண்கள் தான் அதிக அளவில் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்துள்ளார்கள்.
 
வசிஷ்டரும் அருந்ததியும் போன்று இந்த உடல் தனக்குள் கவர்ந்து கொண்ட சக்தி எதுவோ அதுதான் விசிஷ்டாத்வைதம் என்று சொல்வது.ந்த உணர்வின் தன்மையை உடலாக ஆக்கியிருக்கின்றதோ சக்தியாக எடுக்கின்றோமா இது இணைந்தே அங்கே செயல்படும்.
 
ஆக பெண்களுக்கு தான் அதிகச் சக்தி உண்டு…! ஆனால் இதனின் விளக்கம் மதங்களிலே காண முடியாது… தரம் குறைத்துத் தான் காட்டி இருப்பார்கள் மற்றவர்களுக்கு அடிமையாக்கித் தான் காட்டியிருப்பார்கள். ஆனால்
1.அவர்கள் துணை இல்லை என்றால்
2.சப்தரிஷி மண்டலம் செல்வது மிகவும் கடினம்…!