ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 10, 2026

உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்

உடல் எனக்குத் தேவையில்லை… துருவ மகரிஷியின் ஆற்றலே எனக்குப் போதுமானது என்றார் ஆதிசங்கரர்


அன்று ஆதிசங்கரர் வாழ்ந்த காலத்தில் இருந்த துவைதவாதிகள்  அரசனுக்குக் கீழ் எவ்வாறு நடந்து கொண்டார்கள்…?
 
மந்திர ஒலிகளைப் பாய்ச்சி அதற்கு வேண்டிய உணர்வுகளை ஊட்டி அதன் வழி கொண்டு மனிதனை ஏங்கச் செய்து
1.தன் வாழ்க்கையில் நல்லதைப் பெற வேண்டும் என்று ஏக்கத்தால் அவன் ஏங்கி அது உணர்வை ஏங்கிக் கிடைக்காத நிலைகளில் அவன் மடிந்து விட்டால்
2.அதே மடிந்த மனிதனை அந்த ஏக்கத்தால் எந்த நோய்வாய்ப்பட்டு இறந்தானோ
3.மீண்டும் அந்த மந்திரத்தால் அவனின் ஆன்மாவைக் கைவல்யப்படுத்தி
4.அதை மற்றவர்களுக்குப் பாய்ச்சுவார்கள்… இவன் உடலில் வந்த நோய்கள் அங்கே வரும்.
5.இதை நிவர்த்தி செய்வதற்கு யாக வேள்விகளைச் செய்தால் உனக்கு இந்த நோய்கள் நீங்கும் என்று செய்பவர்களே துவைதவாதிகள்.
 
காசி கங்கைக் கரையில் துவைதத்திற்கும் அத்வைதம் என்ற தத்துவத்திற்கும் அன்று சர்ச்சையான நிலையில் ஆதிசங்கரருக்கும் அவர்களுக்கும் நடந்த போர் முறையைக் குருநாதர் காட்டுகின்றார்.
 
காசியில் கங்கைக் கரை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமாக இருக்கின்றது ஒரு அரசருடைய அரண்மனைக்கு அருகிலே இருக்கின்றது விநாயகன் சிலை.
 
எந்த மனிதன் எந்த நோயின் தன்மை கொண்டானோ அதே மந்திர ஒலிகளை இங்கே ஆதிசங்கரர் உடலிலே ஏவல் செய்து துவைதவாதிகளால் பாய்ச்சப்படுகின்றது.
 
அவ்வாறு பாய்ச்சிய பின் அவருக்கு வயிற்று வலி வருகின்றது. அப்போது தான் அவர்கள் சொல்கின்றார்கள். நீ இந்த விநாயகருக்கு கண ஹோமம் செய்து இன்னென்ன பொருட்கள் இட்டு இன்னென்ன மந்திரங்களைச் சொன்னால் உனது வலி தீரும் என்று சொல்கின்றார்கள்.
 
அப்போது ஆதிசங்கரர் சிரிக்கின்றார்.
 
நீ சொல்வதில் உண்மை உண்டு. இந்தச் சிலையின் தத்துவம் என்ன  தெரியுமா…?. இந்த விநாயகர் தத்துவத்தில் சிலையின் உண்மை என்ன என்று தெரியுமா…? என்று வினாக்களை எழுப்புகின்றார்
 
நீ சிலையை வடித்து இந்த ஹோமங்களைச் செய்தால் என் வயிற்று வலி நீங்கும் என்று நீ உன்னால் என்னை ஏவப்பட்டு என்னை நீ அடிமைப்படுத்தும் இந்த நிலைகளில் இருந்து நீ வெற்றி பெறுவாய் என்று எண்ணுகின்றாய்.
 
நீ எண்ணிய உணர்வுகள் எதுவோ அது உனக்குள் விளைந்து இதன் விளைவாகத் தான் நீ செல்வாயே தவிர உண்மையின் உணர்வை அறியும் ஆற்றல் உனக்குள் வராது.
 
1.உனது ஆசை எதுவோ அதன் உணர்வின் தன்மையை உன் உயிர் உருவாக்கிவிடும்.
2.இந்த விஷத்தின் தன்மை தான் உனக்குள் உருவாகும் என்று தெளிவாக்குகிறார்.
3.நாம் எண்ணுவதை உயிர் எப்படி உருவாக்குகிறது என்பதை நீ பார்…!
4.நீ ஏவிய ஏவல்கள் எப்படி மடிகின்றது…? என்று பார் என்ற நிலைகளை அப்போது சொல்கின்றார்.
 
ஆதிமூலம் என்ற உயிர் ஒவ்வொரு சரீரத்திலும் எடுத்துக் கொண்ட உணர்வுகளுக்கொப்பப் பல கோடி மிருக நிலைகளைக் கடந்து பல கோடி நிலைகளிலிருந்து தப்பிக்கும் உணர்வை எடுத்து மனிதனாக உருவாக்கிய பின் கணங்களுக்கு அதிபதியாகிக் கடும் நஞ்சினை வென்றிடும் சக்தி பெற்ற இந்த மனித உடலைக் கணபதி என்றும், பல கோடி உணர்வுகளை வென்ற இந்த கணங்களுக்கெல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர் என்றும் அந்த உணர்வின் துணை கொண்டு எவ்வாறு இயக்குகின்றது…? என்ற நிலை தான் "ஐகிரி நந்தினி நந்தித மேதினி விஸ்வவிநோதினி.." என்று அந்த நேரத்தில் பாடுகின்றார்.
 
ஐகிரி நந்தினி என்கிற பொழுது ஐந்து புலனறிவால்… தான் சுவாசிக்கும் உணர்வுகள் நம் உடலுக்குள் எவ்வாறு இந்த உயிரால் உருவாக்கப்படுகின்றது…? என்ற நிலையில் பாடலைப் பாடி அந்த இடத்தில் அவர்களுக்கு உபதேசிக்கின்றார்.
 
1.நீ சுவாசிக்கும் உணர்வு எதுவோ அது உயிரிலே பட்டபின் அதன் உணர்வின் இயக்கங்கள் எவ்வாறு இயக்குகின்றது…? என்று உணர்ந்து பார்.
2.இந்த உணர்வின் அறிவினை நீ இழந்து விடாதே…!
3.நீ எதை எண்ணுகின்றாயோ அதைத்தான் உன் உயிர் உருவாக்குகின்றது.
4.உன் ஆசையின் உணர்வுகள் நீ எதை எண்ணுகின்றாயோ அதை உருவாக்குகின்றது.
 
இப்பொழுது நான் எண்ணுவதெல்லாம் எது…?
 
மனிதனின் வாழ்க்கையில் இத்தகைய தீமைகளை வென்றவன் துருவ மகரிஷி… நஞ்சினை வென்று உணர்வினை ஒளியாக மாற்றி துருவ நட்சத்திரமாக அவன் திகழ்ந்து கொண்டிருக்கும் அவனின்று வரும் அந்த உணர்வின் சத்தை எனக்குள் வினையாக்கி இந்த உடலிலே கணங்களுக்கு அதிபதி ஆக்கும்போது அவன் எந்த நஞ்சினை வென்றானோ அதை வைத்து நீ ஏவிய உணர்வின் நஞ்சினை வெல்ல முடியும் என்ற உணர்வை சொல்கிறார்.
 
உயிரான நெருப்பில் அருள் ஞானியின் உணர்வை இங்கே இடுதல் வேண்டும். அதன் உணர்வின் தன்மையை உருவாக்கும் பொழுது அந்த உணர்வின் அணுவாக எவ்வாறு விளைகின்றது…? என்பதைப் பார் என்ற உணர்வை வைத்து அவன் ஏவல் ஏவிய அந்த வயிற்று வலியை நீக்கினார்.
 
நீக்கிய பின் அதற்குத்தான் இப்பொழுது வயிற்று வலி இல்லை என்று சொன்ன பின் இதற்கு உபாயத்தைத் தேடினார்கள் அன்று. அந்த கங்கைக் கரையில் இதைக் கடந்து சென்று விடுவோம் என்று நயவஞ்சகத்துடன் கங்கைக்கரையின் இக்கரைகளுக்குச் செல்லலாம் என்று அழைத்துச் சென்று கல்லால் கட்டி அவருடைய உடலை நீர் சமாதி ஆக்கிவிட்டார்கள்… மடியச் செய்த பின் அது மடிந்து விடும் என்று.
 
அவர் எத்தனையோ இடங்களுக்குச் சென்றாலும் உண்மையின் உணர்வை உணர்த்தும் போது அன்று அரசர்களால் மதங்களாக உருவாக்கப்பட்டு அவர்கள் ஞானிகளால் கொடுக்கப்பட்ட கடவுள் என்ற நிலைகளை உருவாக்கினாலும்
1.இதை மற்ற மக்களுக்குத் தெரியாத நிலைகளில் மறைக்கும் வண்ணம் வந்த நிலைகளை எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவுபடுத்துவதற்காக
2.இவர்கள் தன்னை மடியச் செய்வார் என்று உணர்ந்தார் ஆதிசங்கர்ர்.
3.இந்த உடல் பற்று அவர்களுக்குத் தேவை… எனக்கு இந்த உடல் பற்று தேவை இல்லாதது.
4.நீ எதை வேண்டுமென்றாலும் எண்ணு… அந்த அருள் ஞானியின் உணர்வே எனக்குப் போதுமானது.
 
ஆகவே… இந்த உடல் எனக்குத் தேவையில்லை… எது வேண்டுமானாலும் செய் என்று உடலைக் கொடுத்துவிட்டு ஆன்மா எதன் கூர்மையாக எண்ணியதோ அதன் வலிமை கொண்டு உடலை விட்டு அகன்ற பின் இன்றும் சப்தரிஷி மண்டலங்களாக இணைந்தே வாழ்கின்றார்… வாழ்ந்து வருகின்றார்.
 
ஆனாலும் அவரின் நிலைகள் கொண்டு அவர் எதன் தொடரில் வளர்ந்தார் என்றால்…? இவருக்கு மனைவி இல்லை… திருமணம் ஆகவில்லை.
 
தாயின் தன்மை கொண்டு தான் வாழ்ந்து வந்தார். சந்தர்ப்பத்தால் நோயால் மடிந்த அந்தத் தாயை எண்ணி அவர் பெற்ற இந்த உணர்வுகள் அவர் உடலுக்குள் அரவணைத்திடும் சக்தியாக வந்தது.
 
இந்த உடலை விட்டுச் சென்ற பின் அரவணைத்த இனத்தின் தன்மை கொண்டு அந்தத் தாயின் உணர்வு கொண்டு ஒளியின் சரீரமாக அதன் அரவணைப்பிலேயே இன்றும் அந்த ஆதிசங்கரர் ஒளியின் சரீரமாக இருக்கின்றார்.
 
அன்றைய காலங்களில் திருமணம் ஆகாது மனைவி இல்லாத நிலைகளில் இருப்போரைச் சன்னியாசம் வாங்கச் சொல்லும் நிலையில்… இவருக்குள் இருக்கும் அபூர்வ சக்தி கொண்டு அவரை வெளிவிடக் கூடாது என்பதற்காக துவைதவாதிகள் ஆதிசங்கரரைச் சன்னியாசத்தை வாங்கச் சொல்லி அவர்களின் ஆசையை எப்படியும் நிறைவேற்ற வேண்டும் என்று பல முயற்சி செய்தாலும் அவர் எப்படித் தப்பினார்…? என்று நமது குருநாதர் இதைத் தெளிவாக்குகின்றார்.
 
இதையெல்லாம் யாம் புத்தகத்தில் படிக்கவில்லை. இந்த ஸ்தலங்களுக்குச் செல்லப்படும்போது தான் இதை உணர்த்தினார். இன்றும் அந்த அலைகள் உண்டு… அதை நீ நுகர்ந்து பார் என்று சொன்னார் குருநாதர்.
 
ஆதிசங்கரருக்கு உடல் பற்று இல்லை… அவர் தாயின் உணர்வுகள் அங்கே இருந்தது. ஏனென்றால் அனாதையாக இருக்கும் பொழுது சோற்றுக்காக அவர் தாய் பெற்ற அவஸ்தை எத்தனையோ.
 
நோய்வாய்ப்பட்டு அந்த உடலை விட்டுப் பிரியும் பொழுது அந்தத் தாயின் எண்ணத்தால் தனக்குள் அரவணைக்கப்பட்டு தன் குழந்தையின் மேல் பாசத்தால் அந்தத் தாயின் ஆன்மா இந்த ஆதிசங்கரர் உடலுக்குள் வரும் பொழுது அருள் ஞானத்தின் உணர்வுகள் அங்கே தொடர்கின்றது.
1.அதன் வழியே தான் கோலமாமகரிஷியின் உணர்வுகள் இவர் உடலிலே சேர்க்கப்பட்டு அருள் ஞானம் பெறப்பட்டு
2.இந்த உலகின் நிலைகள் எவ்வாறு…? என்ற நிலையைத் தெளிவாகத் தெரிகின்றார் ஆதிசங்கரர்.
 
ஆகவே அவருக்குத் திருமணம் ஆகவில்லை. இருப்பினும் தாயின் உணர்வுகள் அவர் உடலில் உண்டு. இதன் வளர்ச்சியின் தன்மை கொண்டு அவர் எவ்வாறு அவர் விண் சென்றார்…? என்ற நிலையை இன்றும் தாயின் அரவணைப்பில் தான் எடுத்துக் கொண்ட உணர்வின் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளார் என்ற நிலையைத் தெளிவாக காட்டுகின்றார் நமது குருநாதர்.
 
அவரைக் கங்கையில் கல்லைக் கட்டி மூழ்கச் செய்யும் பொழுது அவர் சொல்கின்றார்.
1.இந்தச் சரீரம் எனக்குத் தேவையில்லை
2.அருள் ஞானியான அந்தத் துருவ மகரிஷியின் ஆற்றல் நான் பெற வேண்டும்… நஞ்சினை வென்றவர்கள் அவர்கள்
3.அதன் உணர்வே எனக்குள் இருளை நீக்கும்… அதன்வழி தியானிக்கும் பொழுது நீங்கள் ஏவல் செய்த நஞ்சு என்னை ஒன்றும் செய்யாது.
 
ஆகவே இதிலிருந்து நீங்கள் இனியாவது இதைத் தெரிந்து செயல்படுங்கள் என்று சொல்லும் பொழுது அவருடைய தத்துவங்கள் ஏறவில்லை என்பதற்காக இவரை எப்படியும் மடியச் செய்ய வேண்டும் என்று தான் கங்கையில் நீர் சமாதி வைத்தார்கள்.
 
நீங்கள் ஆதிசங்கரருடைய சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் காசி கங்கைக் கரைக்குச் சென்றார். அதற்குப் பின் என்ன ஆனார்…? என்று கேள்விக்குறியாக தான் இருக்கும்.
 
இதைத் தெளிவாகக் காட்டினார் நமது குருநாதர்.