
ஒரு சிறு விஷயத்தைக் கூடத் தாங்கக்கூடிய மன வலிமை இன்று நம்மிடம் கிடையாது… ஏன்…?
இன்று எங்கு சென்றாலும்… ஒரு
குறையைச்
சொன்னோம் என்றால் அடுத்தாற்போல் ஆயிரம் குறைகளைச் சொல்லி அவன் அப்படித்தான்… இவன்
இப்படித்தான்… என்று சொல்லிச் சொல்லி வேதனைகளை எல்லாம்
ஜாஸ்தி கூட்டிக் கொள்கிறோம்.
நமக்குள் இது அதிகமான பின்
1.அன்றைக்கு
இருக்கிற வேலையையும் கெடுத்து விட்டு உட்கார்ந்து கொண்டே இருப்போம்.
2.இந்தக்
கதையைப் பேசிய நிலையிலேயே
அன்றைக்கு முழுவதும் பொழுது போய்விடும்.
அதற்குப் பின் என்ன ஆகிறது…?
நம் குழந்தைகள் சில்லென்று அழுதால்
இரண்டு உதை உதைப்போம். யாராவது பெரியவர்கள் கூப்பிட்டால் "இதோ வரேனே..." என்று சொல்வோம்..
உடனே என்ன…?
நான் கூப்பிடுகிறேன் இப்படிச்
சொல்கின்றாய்…!
என்று வீட்டில் எல்லாம் வம்பு வந்துவிடும்.
அந்த
சொல்லுக்குள் என்ன செய்யும்…? இந்தத் தொனிகள் மாறிக்கொண்டே இருக்கும். நாம் அல்ல. ஆனால்
இந்த உணர்வுகள் அதைச் செய்கின்றது. இதைப் போன்ற நிலைகள் வருவதைப் பற்றி
நம்மை அறியாமல் இருக்கின்றோம்.
காரணம்…
1.நாம்
சாப்பிடுகின்ற ஆகாரத்தில் நஞ்சு
2.நாம்
தண்ணீர் குடிப்பதிலும் நஞ்சு
3.நாம்
சுவாசிக்கின்ற காந்த அலைகளில் நஞ்சு
4.மழை
பெய்தாலும் நஞ்சு.
இன்றைக்கு
நாம் பூச்சிக் கொல்லி மருந்துகளைப் போட்டுப் பூச்சிகளைக் கொன்று நல்ல உணவுப் பொருளை விளைய வைத்துக் கொண்டு வரலாம் என்று நாம் நினைக்கின்றோம்.
பூச்சிகள்
சாகின்றது. ஆனால் அந்த மருந்தின் விஷமோ அதற்குள் படுகின்றது அது சாகும்போது அந்த விஷம்
பூச்சிகள்
உடலில் பட்டு அதன் சுவாசத்தில் பட்டு பூச்சி செத்தாலும் இந்த
நஞ்சு அந்த உயிரில் போய்ச் சேர்ந்து விடுகின்றது.
அடுத்தாற்
போல் என்ன செய்கின்றது….?
அதே
இலையின் சத்தை, அந்த உயிர் எடுத்து அதிலிருந்தே மீண்டும் அது உயிர் பெறுகின்றது. வேறு
எங்கும் உயிர் பெறுவது இல்லை.
1.எந்தச் சத்தோடு கலந்து விஷத்தின் தன்மை இணைந்த நிலையில்
இந்த உயிரான காந்தம் அந்த உடலின் தன்மை பெற்றதோ
2.இந்த விஷத்தின் தன்மையைப் பெற்ற பிற்பாடு அடுத்தாற்படி வேறு எந்த விஷத்தைப் போட்டாலும்… அதை ஒன்றும் பாதிப்பது
இல்லை.
3.“நீ வா தம்பி, நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்று சொல்கின்றது.
புகையிலையோ மிகவும்
காரமானது. அதற்குக் கடும் நஞ்சைப்
போட்டாலும் கூட அது சாவது இல்லை. ஏனென்றால் பூச்சிகள் புழுக்கள் எல்லாமே
பரிணாம வளர்ச்சியில் வருவது.
ஆனால்
அதே சமயத்தில் மனிதனோ வளர்ச்சி பெற்றவன். நமக்குள் உயர்ந்த குணங்கள் உண்டு.
உதாரணமாக பால் சத்து ஊட்டக்கூடியது. அதிலே விஷத்தைப் போட்டுக்
குடித்தால் என்ன செய்கின்றது…? நம்மைக் கொல்கின்றது. இதைப் போல நம்
நல்ல குணத்தில் வேதனையை நாம் அடிக்கடி எடுக்கப்படும் பொழுது அந்த நல்ல
குணத்தை முழுவதும் அது கொன்று விடுகின்றது. விஷத்திற்குள்
நம்முடைய அந்த நல்ல குணம் சிக்கிக் கொண்டால் அப்படி ஆகிவிடுறது.
இன்று நாம்
சாப்பிடுகின்ற ஆகாரம் முழுவதுமே நஞ்சு கலந்த்தாக இருப்பதால்…
நல்ல குணத்திற்குள் நல்லதை
நீங்கள் எண்ணினாலும் கூட அந்தக் கடுகடுப்பாகத்தான் பதில் வருகின்றது. கடுகடுப்பாகத்தான்
நாம் இருக்கின்றோம்.
ஆனால்
அந்தக்
கடுகடுப்பான வேதனையை நாம் சுவாசிக்கும் பொழுது நம் உடலில் உள்ள
கிட்னி நம்முடைய ரத்தத்தில் வரக்கூடிய இந்த விஷங்களைச்
சரியான முறையில் வடிகட்ட முடிவதில்லை.
சரியான
நிலைகளில் வடிகட்ட முடியவில்லை என்றால் ரத்தத்துடன் சேர்த்துக்
கை, கால்
குடைச்சல், போன்ற விஷ நிலைகள் ஊடுருவுகின்றது.
இது
அதிகமாகப்
போனது என்றால் உப்பு சத்தைப் பிரிக்க முடியாமல் போய்விடுகின்றது. அதே போல் சர்க்கரையைப்
பிரிக்க முடியாமல் போனது என்றால் சர்க்கரைச் சத்து அதிகமாகி விடுகின்றது… உப்புச் சத்து
அதிகமாகி விடுகின்றது.
இப்படி ஆகும் நிலையில்… சர்க்கரை மற்றொன்றுடன்
கலந்து அது ருசி கொடுக்கும். மற்றதோடு சேர்ந்து அது இனிமை கொடுக்கவில்லை என்று
சொன்னால் தனித்து அதிகமாகும் பொழுது அதனுடைய சுவை என்ன
செய்கின்றது…?
1.நாம்
வாயில் சர்க்கரையை அதிகமாகப் போட்டால் உமட்டல்…!
2.உடலில் சர்க்கரை
அதிகமாகி விட்டால் மயக்கம் நிச்சயமாக வரும்.
சர்க்கரையை
நீங்கள் அதிகமாகச் சாப்பிட்டுப் பாருங்கள். உமட்டல்
ஓ என்று வாந்தி எடுக்கின்ற மாதிரி வரும். இனிப்பு தான்… ஆனால்
அதிகமானால் மயக்க நிலை வரும்.
ஏனென்றால்
இந்தச்
சத்து சேர்த்தால் சுவை கொடுக்கும்.. வலு கொடுக்கின்றது. ஆனால் அது இல்லை என்கிறபோது
இப்படி மாறி விடுகின்றது.
ஆனால்
நம் உறுப்புகளிலேயே நாம் சாப்பிடக்கூடியதை வைத்து உயிர் உணர்வை ஊட்டினாலும்… ரத்தத்திற்குள்
ஆகாரத்துடன் கலந்து பல நிலைகள் ஆனாலும் ரத்தத்திற்குள் கலந்த உடனே இந்த ரத்தம்
என்ன செய்கின்றது…? வடிகட்டி அடுத்த திசுக்களுக்குள் மாற்றுவதற்கு
வடிகட்டி கொண்டே வரும்.
நாம்
ருசியாகச் சாப்பிடக்கூடிய
ஆகாரம்…
நாம் சுவாசிக்கக்கூடிய வாசனைக்குள் இருக்கக்கூடிய சுவாசிக்கக்கூடிய விஷத்தை
எல்லாம் மலமாக
மாற்றி விட்டு உடலை நல்லதாக மாற்றுகின்றது.
உடல்
முழுவதும் இப்படி
நல்லதாக இருக்கும் பொழுது..
1.பூச்சிக் கொல்லி மருந்தால் வரும் அந்த நஞ்சை நாம் நல்லதாக மாற்ற முடியவில்லை
என்கிற பொழுது
2.இந்தக்
கிட்னி சரியான முறையில் வேலை செய்யாது.
3.நஞ்சை
வடிகட்ட முடியாதபடி மற்ற நல்ல அணுக்களுடன் சேர்த்த உடனே உடலில் அது
சீக்காக மாறுகின்றது…
4.நஞ்சு எல்லாவற்றிலும்
ஊடுருவி விடுகின்றது.
ஆடு
மாடு எல்லாம் என்ன செய்கின்றது…?
விஷத்தைச் சாப்பிடுகின்றது. அதைத் தன் உடலாக ஏற்றுக் கொள்கின்றது. உடலுக்குள்
வலுவாக இருக்கின்றது. ஆனால் சாணத்தை நல்லதாகப் போடுகின்றது. நல்லதை முழுவதும்
கழித்து விடுகின்றது.
ஆனால் மனிதர்கள் நாம்
கெட்டதை முழுவதும் கழித்துவிட்டு நல்லதாக்கவும் அதனால் நல்ல
எண்ணங்களும்
நமக்குள் வருகின்றது.
இருந்தாலும் நம்முடைய
கிட்னி சரியான முறையில் வேலை செய்யவில்லை என்றால் நாம் மூச்சில் எடுக்கக்கூடிய
நிலைகள் எல்லாம் விஷமாக மாறிவிடுகின்றது.
இன்றைக்கு
இயற்கையில் எடுத்துக் கொண்ட விஷங்கள் முழுவதும் மாறி விடுகின்றது. நல்ல
எண்ணங்கள் கொண்டு நாம்
பேச முடியாமல் போய்விடுகின்றது.
1.இனம்
புரியாமல் எதற்கு…? ஏன்…? என்று என்கிற வகையில் மனம் சோர்வடைந்து
2.இன்றைக்குப்
பெரும்பகுதி என்ன வாழ்க்கை…? என்கிற வெறுப்பே வருகின்றது.
பெரும்பகுதியான
வீடுகளில் எடுத்துக் கொண்டால் பெண்ணாக இருந்தாலும் சரி ஆணாக
இருந்தாலும் சரி “ஒரு சிறு விஷயத்தைத்
தாங்கக்
கூடிய சக்தி கிடையாது…”
ஒரு
தேள் கொட்டி விட்டால் நாம் எப்படித்
துடிக்கின்றோமோ இதைப் போல இந்த வேதனையான எண்ணங்கள் சிறிதளவு அந்த
உயிரிலே பட்டவுடன் தான் சிந்திக்கும் செயலை இழந்துவிட்டு மன விரக்தி அடைந்து தன்னையே
மாய்த்துக் கொள்ளக்கூடிய உணர்வைத் தூண்டக்கூடிய நிலைகள் இந்தக்
காற்றிலே அதிகமாகி விட்டது.
வாழ்க்கையில்
நாம் முன்னேற வேண்டுமென்று இருந்தாலும் கூட அந்த விரக்தியின்
தன்மை அடைந்தால்…
சில முக்கியமான நேரத்தில் ஒரு பொருளை நாம் உற்பத்தி செய்கின்றோம் என்றால் இந்த
உற்பத்தியைச்
சரியான முறையில் செயல்படுத்த முடியாத நிலைகளில் நம் எண்ணங்கள் வந்து அதை அழித்து
விடுகின்றது.
அதே
மாதிரி நம்முடைய உடல் மோசமாக இருக்கின்றது… அதற்காக மருந்தைச் சாப்பிட்டாலும் கூட அடுத்த கணம் ஒரு
வேதனையான நிலைகள் வந்தது என்றால்
1.அந்த
மருந்தையே அது நஞ்சாக
மாற்றி நமக்குள் எதிர் நிலையான நிலைகளை உருவாக்கி விடுகின்றது.
2.அந்த
நோயையும் தீர்க்க முடியாத நிலைகளில் இருக்கின்றோம்.
இதைப்
போன்ற நிலைகள் வந்தது என்றால் அதை மாற்றி அமைக்கத் தான் அக்காலங்களில்
ஞானிகள் ஆலயங்களை உருவாக்கிச்
சிலையாக வடித்தார்கள். கோவிலில் தெய்வம் நல்லதைச் செய்யும் என்று காட்டினார்கள்.
அவர்கள் காட்டிய நிலைகளில் தெய்வத்தை வணங்கினால் அவன் பெற்ற
சக்தியை நாமும் பெற்று “எத்தகைய தீமையிலிருந்தும் விடுபட முடியும்…”