
மெய் ஞானிகள் சக்திகளை உங்களுக்குக் கிடைக்கச் செய்வதற்குத் தான் உபதேசமே கொடுக்கின்றோம்
வெளியிலே மற்றவரிடம் பழகி
நாம் என்ன
செய்கின்றோம்…?.
ஒருவருக்கு
இரக்கப்பட்டு உதவி செய்கின்றோம். அவர்கள் கஷ்டப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்ட பின்
அந்தக்
கஷ்டமான நேரத்தில் நாம் பணத்தை எடுத்து அவருக்குக் கொடுத்து விடுகின்றோம்.
ஆனால்
1.ஐயோ
பாவமே…! ஏதோ இருக்கட்டும்…! என்று
அப்பொழுது
பணத்தைக் கொடுத்தாலும்
2.அவர்கள்
கஷ்டப்படுகின்ற அந்த வேதனையான நிலைகள் எல்லாம் என் உடலிலே வந்து விடுகின்றது.
3.அப்பொழுது
நான் கொடுத்த உடனே. என்னை அறியாமலேயே உடலில்
சோர்வடைகின்றது
4.(பிறர் கஷ்டத்தைக் கேட்டால் நமக்கு நிச்சயம் சோர்வு வரும்)
5.ஆனால்
அதே சமயத்தில் அப்படி
சோர்வாகக்
கொடுத்த பணத்தை
அவர்கள் வாங்கிக் கொண்டு போனாலும் அங்கு அவர்களுக்கும் பயனில்லை.
ஏதோ
நீங்கள்
மகராசன் கொடுத்தீர்கள். இருந்தாலும் இந்த மாதிரி ஆகிப் போச்சே…! என்று
அவர்கள் சொல்வார்கள்.
நாம் கொடுத்த காசும் நாளைக்கு வருவதற்குச்
சரியாக இல்லை.
கஷ்டப்பட்டார் என்று பணத்தைக்
கொடுத்தோம்
கொடுத்தும் விட்டு நாம் அடுத்து இப்படி வேதனையும் படுவோம்.
ஆனால்
1.அவரின் வேதனையால்
நாம் காசைக் கொடுக்கப்படும் போது
2.அந்த வேதனையான நிலைகளால் அவர்கள் எண்ணிய காரியமும் செயலாவது இல்லை.
இரண்டுக்கும்
மத்தியில் பயனில்லாமல் போய்விடுகின்றது.
ஆக
நாம் ஒரு தடவை வேதனைப்பட்டோம் என்றால் அது பல முறை
நமக்குள் வந்து இதை எண்ணியே நமக்குள் வேதனையாகி நம்முடைய நல்ல குணங்களை எல்லாம் மூடி
மறைத்து விடுகின்றது.
இதைப்
போக்குவது எப்படி…?
பெண்களில்
பெரும்பகுதியானவர்கள் எல்லாம் இது போன்று இரக்கப்பட்டு நல்லதைச்
செய்வார்கள். ஆனால் அவர்களிடம் பார்த்தோம் என்றால்
1.வேதனை
வேதனை வேதனை…!
என்று
2.இப்படிச்
செய்து விட்டானே…! இவர்கள் இப்படி…!
அவர்கள் அப்படிச் செய்தார்கள்…!
3.இவங்க இப்படி… அவங்க அப்படி…! என்
பிள்ளைக்கு இந்த மாதிரி இருக்கின்றது…! என்று
4.இந்த
வேதனையை எடுத்தால் என்ன செய்கின்றது…? கை, கால்
குடைச்சல் ஆகின்றது.
பெரும்பகுதியாக
90% எடுத்தோம்
என்றால் பெண்களுக்கு கை கால் குடைச்சல், பிடரி
வலி, இடுப்பு வலி நிச்சயம்
இருந்து கொண்டே இருக்கும்.
காரணம் என்ன…? என்று
கேட்டோம் என்றால் எதை
எடுத்தாலும் இந்த வேதனை வேதனை வேதனை வேதனை வேதனை என்ற
இந்த நிலையையே
உருவாக்கி விடுகின்றார்கள்.
ஏனென்றால்
இந்த மாதிரி எல்லாம்
குருநாதர் எனக்குக் காட்டுக்குள்ளே
பல அனுபவங்களைக் கொடுத்து
1.இந்த
இந்த நிலைகளில் எதை எதை நீ செய்ய வேண்டும்;..? எப்படி எடுக்க
வேண்டும் என்று…?
2.தர்மம்
என்று சொல்வதற்கும்… தர்மம் கொடுப்பதனால் என்னென்ன நிலைகள் ஆகும்…? என்றும்
4.ஆனால் பிறருக்கு உதவி செய்யும் போது அதை எப்படிச் செய்ய
வேண்டும்…? நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும் என்று காட்டினார்.
அவர் எனக்குக் காட்டியதைத் தான் உங்களுக்கும் தொட்டுக் காண்பித்து விட்டு
1.உங்களுக்குள் அந்தக் கெட்டது அண்டாத வண்ணமும் அதே சமயத்தில்
கெட்டது வரப்படும் போது நீங்கள் சுதாரித்து
2.இந்த
நினைவு கொண்டு சமாளிக்கக் கூடிய
அந்த எண்ணமும் உங்களுக்குள் வரச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் இதைச் சொல்வது.
இதைச்
சொல்லி உங்களிடம் பதிவாக்குகிறோம் என்றால் நீங்கள் திட்டியவர்களை நினைக்கும் போது
எப்படி உங்களுக்குச் சங்கடம் வருகின்றதோ இதே மாதிரி சங்கடம்
வரப்படும் பொழுது
1,சாமி சொன்னார் என்ற நினைவை எடுக்கப்படும்
பொழுது
2.அதன் வழி கொண்டு
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற
வேண்டும் ஈஸ்வரா என்று உயர்ந்த சக்திகளை நீங்கள் எண்ணி எடுக்க
எடுக்க
3.உங்கள்
சங்கடத்தை மாற்றக்கூடிய எண்ணம் (உபயாமும் ஞானமும்) உங்களுக்கு நிச்சயம்
வரும்.
அப்படி அந்த மெய் ஞானிகள் உணர்வுகளை உங்களுக்குப் பெறச் செய்வதற்குத் தான் இப்பொழுது யாம் உங்களுக்கு இந்த உபதேசம் பண்ணுவதே…!