ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 9, 2012

ஆத்ம சுத்தி

ஆத்ம சுத்தி
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும். 

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும். 

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து,  உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி சுவாசிக்கவேண்டும். 

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி,  நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும். இதுவே “ஆத்மசுத்தி”.

நம்மை அறியாமலே நம்மைத் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதற்குத்தான், தக்க ஆயுதமாக மிஷின் கண்” (Machine Gun) போன்று உங்களுக்கு ‘’ஆத்மசுத்தி’’ என்ற ஆயுதத்தை கையில் கொடுக்கிறோம்.

ஓம் ஈஸ்வராஎன்றுஅந்த உணர்வின் ஆற்றலான ஆயுதத்தை எடுத்து, மகரிஷிகளின் அருள் சக்திகளை, உங்கள் உடலுக்குள் செலுத்தி (ஆத்ம சுத்தி செய்து), உங்களை வேட்டையாடிக் கொண்டிருக்கும், வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும், அந்த உணர்வின் தன்மைகளை, அந்த மகரிஷியின் அருள் ஒளியாலே, அடக்கச் செய்யுங்கள்.  அப்போதுதான் அடங்கும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும்.

அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை, நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும்.

இந்த ஆத்ம சுத்தியை, நாம் தொடர்ந்து கடைப்பிடிக்கும் பொழுது, வாழ்க்கையில் வரும் அனைத்துத் தீமைகளையும், நாம் அகற்ற முடியும். பேரின்பப் பெரு வாழ்வை எண்ணி எடுக்கின்ற உணர்வுகளால், நம்முடைய சொல், செயல் புனிதம் பெறும்.

நம்மைப் பார்ப்பவர் அனைவரும், மகிழ்ச்சி பெறும் நிலை உண்டாகும். அறியாமை என்ற இருள் அகன்று, அனைத்தும் அறியும் மெய்ஞானம் உருவாகும்.
--ஞானகுரு