
துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுக்கும் போது உணர்வுகள் ஒளியாகிறது… ஆனால் உடல் நலியத் தான் செய்யும்
மனிதனான
பின் ஆரம்ப நிலைகள் எப்படி உயிரணு நுகர்ந்து… நுகர்ந்த உணர்வுக்கொப்ப
உடல்களை மாற்றுகின்றதோ இதைப் போல நாமும்
1.இந்த உடலில் நஞ்சினை வென்றிடும் உணர்வின் சக்தியை
துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் உணர்வினை நுகர்ந்தோம் என்றால்
2.உடலில் அதிகமாகச் சேர்த்தோம்
என்றால் இரத்தங்களில் கலந்து கலந்து
3.நம் உடலில் அடுத்த உடல் பெறும் உணர்வுகளோ அல்லது
நாம் நுகர்ந்த உணர்வால் வந்த நோய்களையோ அது வராதபடி
தடுக்கலாம்.
அப்படி
நோய்கள் வந்தாலும்
1.இந்த உணர்வுகள் ஆனபின் புது விதமான அதற்கு எதிர் நிலையாக ஆகும்பொழுது
இதுவும் நோய்தான்.
2.துருவ நட்சத்திரத்தின் உணர்வை உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் பெறும்
பொழுது அதற்கு எதிர் நிலையாகின்றது.
3.இந்த உணர்வுகளைக் கவரப்படும் பொழுது இந்த உடலும்
நலியத்தான் செய்யும்.
ஒரு
விஷம் கொண்ட உணர்வினைச் சேர்க்கப்படும் பொழுது அந்த
உடலும் நலியத்தான் செய்யும். ஆனால் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகள் நம் இரத்தநாளங்களில் கலந்து அந்த
அணுக்கள் பெறத் தொடங்கினால்
1.அதையே ஏங்கி துருவ நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வினை
நுகர்ந்து நுகர்ந்து
2.உயிரைப் போன்றே உணர்வின் தன்மை ஒளியாக மாறும் தன்மை
வருகின்றது.
இந்த
உடலிலேயே துருவ தியானமும் மற்ற தியானங்களும் நாம் எடுத்து அந்த உணர்வினை வலுப்பெறச் செய்து கொண்டால்… எப்படிப் பட்டுப் பூச்சி தன்
உணர்வின் வளர்ச்சியில் இறக்கைகள் முளைத்து வெளிவந்த பின் மற்ற
செடியின் உணர்வை எடுத்துக் கொண்ட பின் வண்டாக எப்படி உருமாறுகின்றதோ… இதைப் போல நாம் அந்த அருள் ஒளி என்ற உணர்வின் தன்மையை மனிதன் இயற்கையின்
உணர்வின் தன்மை மாற்றி ஒளி நிலை அடையலாம்.
அப்படி
வளர்ச்சி அடைந்த… நஞ்சினை வென்று உணர்வினை
ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் இந்த உணர்வுகளைச் சூரியனுடைய
காந்தப்புலனறிவு கவர்ந்து வருகின்றது. பூமி
துருவத்தின் வழி அதைக் கவர்ந்து
பூமிக்குள் கொண்டு வருகிறது.
நமது
குருநாதர் காட்டிய அருள் வழியில்
1.துருவ நட்சத்திரத்த்தின் உணர்வை நாம் பெற வேண்டும்
என்ற உணர்வை…
2.இப்போது சொல்லும் பொழுது செவி வழி கேட்கப்படும் பொழுது எண்ணங்கள் கண் வழி கவர்ந்து மூக்கு வழி நுகர்ந்து
3.உயிரிலே பட்டு இந்த உணர்வுகளை உடலில் உள்ள இரத்தநாளங்களில் கலக்கச் செய்கின்றது.
அவ்வாறு
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வு உங்கள் இரத்த
நாளங்களில் பெருகப் பெருக பெருக அதன் உணர்வை உடலில் இருக்கக்கூடிய
அணுக்கள் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும் நிலை வருகிறது.
ஏற்கனவே பலவிதமான உணர்வுகளை எடுத்து உடலை மகிழச் செய்திருக்கலாம். அல்லது வேதனையின் உணர்வு
நோயாகவும் உருவாகி இருக்கலாம்.
1.வேதனை உணர்வுகளை எடுத்தாலும் நோயாக மாற்றுகின்றது
2.அதே சமயத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுக்கப்படும்
பொழுது
3.விஷத்தின் தன்மை குறையும் பொழுது விஷமற்ற உணர்வின்
அணுக்கள் மாறுகின்றது.
4.இருப்பினும் இதைப் போன்று இந்த உடலில் இருந்து
உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாகச்
சென்றது துருவ நட்சத்திரம்.
5.இந்த உடலில் நாம் எடுக்கும் எண்ணத்தைக் கொண்டு நமக்குள் அருள் ஒளியை உருவாக்க முடியும்.
நம்
ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நமக்குள் பேரருள் பேரொளியாக
மாற்றி “இந்த உடலுக்குப் பின் பிறவியில்லை…” என்ற நிலையை நாம் அடைதல் வேண்டும்.