ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 22, 2025

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்

தீமையைக் காணும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் பெருக்கிடல் வேண்டும்


இன்றைய நாளில் உங்களுக்கு ஏன் இதை ஞாபகப்படுத்துகிறேன் என்றால் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் இன்று சந்திரன் மிகவும் பிரகாசமாக இருக்கின்றது…”
 
1,சந்திரனுக்குத் துருவ நட்சத்திரத்தின்ணர்வுகள் கிடைக்கும் பருவம் பெறுகின்றது.
2.வெள்ளிக் கோளின் உணர்வுகளும் மற்ற கோளின் தடையில்லாது வருகின்றது.
3.இத்தருணத்தில் இங்கே துருவ தியானத்தில் எடுக்கும் உணர்வுகள் இருளை அகற்றும் நிலையும்
4.அருள் வழி வாழும் உணர்வுகளும் தெளிந்து வாழும் உணர்வுகளும் நமக்குள் கூட்டுகின்றது.
 
தனைப் பருகுவதற்குத் தான் உபதேசிப்பது.
 
அதே சமயத்தில் இயற்கையில் நாம் விளைந்தாலும் செயற்கையில் தீமையின் உணர்வுகளை எவ்வாறு நுகரச் செய்கின்றது…? செயற்கையினால் நம் உடலுக்குள் பகைமை உணர்வுகள் எவ்வாறு வருகின்றது…? பகைமை எப்படி உருவாகின்றது…? இது போன்ற நிலைகள் மனிதனின் வாழ்க்கையில் வருவதிலிருந்து தடுப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.
 
காரணம் 2000க்கு மேல் கடும் விஷத்தன்மைகள் பரவும் நிலையில் அதை நுகரும் தன்மை வருகின்றது. அதை நுகரும் தன்மை வந்தாலோ விஷத்தன்மைகள் கூடி மிகவும் மிருக நிலையிலான உணர்வுகளுக்கு நாம் சென்று விடுவோம்.
 
அதிலிருந்து நம்மைக் காக்கத் தீமை உணர்வுகள் வராதபடி தடுக்க இன்றிலிருந்து நாம் தயாராக வேண்டும்.
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஒவ்வொரு குடும்பத்திலும் தனக்குள் பருகி
2.உலக மக்கள் சேமமாக இருக்க வேண்டும் என்றும் உலகில் நல்ல நிலைகள் ஏற்பட வேண்டும் என்றும் நல் பயன் பெற வேண்டும் என்றும்
3.உலக இருளை அகற்றிடும் அருள் சக்தி பரவ வேண்டும்
4.உலக மக்கள் அனைவரும் தெளிவான நிலைகள் பெற வேண்டும் என்றும் இந்த உணர்வின் தன்மை நாம் நுகர வேண்டும்.
 
குரு காட்டி அருள் வழியினை நமக்குள் பெருக்கி இருள் சூழும் நிலைகளைத் தடுத்து மெய்ப்பொருள் காணும் உணர்வை வளர்த்து நம் மூச்சும் பேச்சும் அத்தகைய நிலையாக இந்த உலகில் பரவச் செய்தல் வேண்டும்.
 
த்தகைய கடுமையான தீமையானாலும் நோயானாலும் துருவ தியானத்தின் மூலம் பெற்ற ஆற்றலைப் பெருக்கி அருள் உணர்வைப் பெருக்கி ஒவ்வொரு நொடியிலும் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகரக் கற்றுக் கொள்ள வேண்டும்.
 
1.எப்பொழுதெல்லாம் தீமையைக் காணும் சந்தர்ப்பம் வருகின்றதோ
2.அந்தச் சந்தர்ப்பத்தில் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பருகி தீமைகளை அகற்றி
3.அந்த இருளை அகற்றி ஒளி என்ற உணர்வை ஆட்சி புரியும் தன்மையாக
4.தெளிந்த மனம் பெற வேண்டும் என்ற இந்த உணர்வை நாம் பெறுதல் வேண்டும்.
 
ஆகவே அத்தகைய சீர்படும் உணர்வினை நாம் ஒவ்வொரு நாளும் வளர்த்துக் கொள்வோம். துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் என்றுமே இணைந்து வாழ்வோம்.