
விண்ணுலக ஆற்றலைப் பெறும் தகுதி பெறுவீர்கள்
சாமி
(ஞானகுரு) சொல்வதைப் புரியவில்லை என்று
நீங்கள் விட்டு விடாதீர்கள்…!
1.அதை அறிய வேண்டும் என்று ஆற்றலுடன் உயர்ந்த
நோக்கத்துடன் உணர்வினைப் பதிவு செய்து கொண்டால்
2.இந்த
நினைவின் ஆற்றல் உங்களை அறியச் செய்கின்றது.
3.மனிதனாக எவ்வாறு உருவானோம்…? என்ற உணர்ச்சியைத் தூண்டச் செய்கின்றது.
4.மனிதனான பின் ஒளியின் சரீரமாக
நிலை கொண்டிருக்கும்
5.துருவ நட்சத்திரமும் சப்தரிஷி மண்டலங்களும் எப்படி இயங்குகிறது…? என்ற நிலையை அறியும் வல்லமை பெறுகின்றது.
அந்த
உணர்வை நுகர்ந்தால் நமக்குள்
ஏற்படும் உருமாற்றத்தையும் இனி பிறவியில்லா நிலைகளை அடையும் மார்க்கத்தையும் நீங்கள் தெரிந்து அந்த நிலை அடைய வேண்டும் என்பதற்கே இதைப் பதிவு செய்கின்றேன்.
1.என்றும் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.
2.இந்த உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக நிலைத்திடல் வேண்டும் என்பதற்கே இதை
உங்களுக்குள் சொல்கின்றேன்.
இயற்கையின்
நிலைகள் நமக்குள் எப்படி உருவானது…? என்ற
நிலையில் ஆதியில் எப்படி உருவானது…? என்ற நிலையும் அந்த உணர்வின் உணர்ச்சிகளை எப்படி…? என்று நாம் அறிந்து கொள்வதற்கு இது ஏதுவாக இருக்கும்.
ஏனென்றால்
விஞ்ஞான உலகில் உலகமே மனிதனின் சிந்தனை அனைத்தும் சிந்திக்கும் திறன் இழக்கும்
தருணம் வந்துவிட்டது. சிந்தனையற்ற செயல்களைச் செயல்படும் நிகழ்ச்சிகள் அதிகரித்து விட்டது.
1.ஒரு மனிதன் ஆயிரம் சிந்தனை கொண்டாலும் விஷம் தாக்கி விட்டால்
2.அந்தச் சிந்தனையை அனைத்தையும் அழித்துவிட்டு ஐய்யய்யோ…!
என்ற இருள் சூழ்ந்த நிலைக்கே செல்லச் செய்யும்.
3.இந்த உடலைக் காக்கும் உணர்ச்சியின் தன்மை கூட வராது.
4.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்று அதனுடன் ஒன்றி அது
மடியும் தருணமே வருகின்றது.
5.ஆக மனிதனின் நல்ல உணர்வுகள் முழுமையும் மடிந்து
விடுகின்றது.
இதைப்
போன்று உலகக் காற்று மண்டலம் நச்சுத்தன்மை
அடையும் தன்மையும் இந்த சூரியக்
குடும்பமே பிரபஞ்சமே மனிதனால் ஏற்படுத்தப்பட்ட விஞ்ஞான அறிவு கொண்டு அகண்ட
பிரபஞ்சத்திற்குள் விஷத்தன்மைகள் பரவி… அதிலே சுழலும் தன்மை
வந்து சூரியன் கவரும் காந்தப்புலனறிவிலும் விஷத் தன்மைகள்
பரவி… அதிலிருந்து வெளிப்படுவதை நம் பூமி கவரப்படும் பொழுது இங்கே
பெரும் மாற்றங்களே ஏற்படுகின்றது.
தாவர இனங்களிலும் சரி முந்தி வளர்ச்சி அடைந்த தாவர இனங்கள் உருமாறுகின்றது. சரியான வெள்ளாமை இல்லாது போகின்றது. மனிதனுடைய சிந்தனையும் சீர்குலைந்து வருகின்றது.
இனம்
புரியாது புதுப்புது அணுக்கள் (வைரஸ்)
உருவாகி மனித உடலில் புதுப் புது
நோய்களும் உருவாகின்றது. இதைப் போன்று
மனிதன் சிந்தனை இழக்கப்பட்டு மீண்டும்
புழு பூச்சியாக பறவையாக பிறக்கும் நிலை வந்துவிடும்.
1.இதிலிருந்து நம்மைக் காத்திடும் நிலை வர வேண்டும்.
2.மனித உணர்வின் தன்மை கொண்டு நாம் விண்ணுலக ஆற்றலைக் கவர்ந்து வளர்த்துக் கொள்ள
முடியும்.
அந்த
நம்பிக்கை வர வேண்டும்.
நாம்
எண்ணியதை நமது உயிர் உருவாக்குகின்றது. உணர்வின்
இயக்கமாக நம்மை இயக்குகின்றது அதன் வழியே நாம் வாழுகின்றோம்.
1.ஆக அவனன்றி அணுவும் அசையாது.
2.நாம் நுகர்ந்த உணர்வை உணர்த்துகின்றது… நம் உடலாக மாற்றுகின்றது
3.மீண்டும் நினைக்கும் போது அந்த வழியே நம்மை
இயக்குகின்றது.
ஆகவே
நம் உயிர் இவ்வாறு செயல்படும் நிலைகள் வரப்படும் பொழுது
1.விண்ணுலக ஆற்றலை நீங்கள் அறிந்து தீமைகளை அகற்றும் வல்லமை பெற்று
2.அருள் உணர்வுகளை உங்களுக்குள் சேர்த்து இதனை நீங்கள் உங்கள் எண்ணத்தால்
உருவாக்கிடல் வேண்டும்.