
கணவனும் மனைவியும் தியானத்தில் ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!
துருவ
தியானத்தில் கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றிடல் வேண்டும் ஒவ்வொரு உயிரிலும் ஆண்பால் பெண்பால் என்ற உணர்வுகள் உண்டு பெண்பால்
நட்சத்திரத்தின் உணர்வுகளை அதிகமாகச்
சேர்த்தால் அது பெண்ணின் உணர்வுகளைத் தூண்டி பெண்ணாகும் உறுப்புகளையும் உணர்வுகளையும் மாற்றுகின்றது.
அதே
போல் ஆண்பால் நட்சத்திரத்தின் உணர்வுகள்
அதிகமானால் ஆண்களாக மாற்றுகின்றது.
1.ஆண்பால் என்ற நட்சத்திரம் இருந்தாலும் பெண்பாலின் உணர்வுகள் சிறிதளவாது கலந்திருந்தால்தான்
2.இந்த உணர்வே உணர்வாகி அணுவின் தன்மை
பெருக்கி உடலை வளர்க்கவே உதவுகின்றது.
பெண்பால்
என்ற உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது உடலின் அமைப்பு வந்தாலும் ஆண்பால் என்ற
உணர்வுகள் வரப்படும் பொழுது கவர்ந்து தன்
இனத்தை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
இது
எல்லாம் இயற்கையின் நியதிகளில் கலந்து கொண்ட உணர்வுக்கொப்பத் தான் உடல் அமைப்பும்… மற்றதை வளர்ப்பதும்… தனக்குள் உருவாவதும் என்ற நிலை உருவாகின்றது.
இதையெல்லாம்
மனதில் வைத்துக் கொள்ளுங்கள். மனிதன்
ஒருவனால் தான் உயர்ந்த நிலை பெற முடியும்.
1.முதல் மனிதன் அகஸ்தியன் இந்த உண்மைகளை எல்லாம் உணர்ந்த பின் மனைவிக்கு அதையெல்லாம் எடுத்துச் சொல்லுகின்றான்.
2.கணவன் வழியிலேயே அந்த மனைவியும் செயல்பட்டதனால் அந்த உணர்வுகள் இரண்டும்
ஒன்றி வாழ்ந்தது.
3.அதன் வழி தான் அவர்கள் ஒளியின் சரீரம் பெற்றார்கள்.
அதிலிருந்து
வரும் உணர்வைத்தான் எத்தனையோ கோடிச் சரீரங்கள் பெற்ற நிலையும் அதிலிருந்து வரக்கூடிய உணர்வுகளை நுகர்ந்து நாம் இந்த உடலில் வளர்த்து பிறவி இல்லாத நிலை அடைய
முடியும்.
1.இரத்த நாளங்களிலே துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப்
பெருக்கப் பெருக்க நம் உடலில்
உள்ள அணுக்களில் சிறுகச் சிறுக அது சேரும்.
2.அதன் உணர்வுக்கொப்ப உயிருடன் ஒன்றி ஒளியின் சரீரமாக
மாறும்.
3.கணவனும் மனைவியும் இதைப் போன்று எடுத்துக் கொண்ட
உணர்வுகள் இனி பிறவி இல்லா நிலை அடையச் செய்யும்.
விஞ்ஞான
அறிவால் பேரழிவாகச் சென்று கொண்டிருக்கும் இந்த
நேரத்தில் குருநாதர் காட்டிய அருள் வழியில் அகஸ்தியன் அவன் பெற்ற பேரருளை நாமும் பெற்று அணுவின் இயக்கங்களை அறிந்து
சிந்தித்து செயல்படும் தன்மையும் ஒன்றுபட்ட நிலைகள் கணவன் மனைவிக்குள் வரவேண்டும்.
தியானத்தில்
ஒன்று சேர்ந்து விட்டால் மட்டும் பத்தாது…!
அதற்குப்பின்
ஏற்கனவே சேர்த்துக் கொண்ட விஷத்தன்மைகள் அதற்குக் கொஞ்சம் சந்தர்ப்பத்தை விட்டால் நம்மை அது கணவன் மனைவி நிலைகளை மாற்றிவிடும்.
அது
போன்ற நிலைகள் வராதபடி தடுத்து கணவன்
மனைவியும் அந்தப் பேரருளைப் பெற
வேண்டும் என்று அதிகாலையில் எடுத்துப் பழகுதல் வேண்டும்.
கணவன்
மனைவி வேறு வேறு ஊரில் இருந்தாலும்
1.துருவ
நட்சத்திரத்தின் சக்தி கணவனுக்குக் கிடைக்க
வேண்டும் என்று மனைவியும்
2.மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்று கணவனும்
இருவருமே எண்ணுங்கள்.
3.அதன் உணர்வுப்படி ஒளியான
அணுக்களாக மாறும்.
இதன்
வழி செய்தால் மூதாதையர்களை விண்ணிலே செலுத்த
முடியும். இதற்கு முன் செய்யவில்லை.
இப்பொழுதாவது
இதைச் செயல்படுத்தி அவர்களைச் சப்தரிஷி மண்டலத்தில் இணைத்து
1.நாமும் அந்த ஞானிகள் சென்ற வழியில் ரிஷி ரிஷிபத்தினி என்ற நிலையில்
2.சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சிருஷ்டிக்கும்
சக்தியாக உருவாக முடியும்.