ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2025

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்

“எனது நிலை (எல்லை)” பிறவி இல்லா நிலை அடைவது தான்


1.கோடிச் செல்வம் சேர்த்தாலும் அவர்கள் வாழ்க்கையில் மன அமைதி என்பது இல்லை.
2.அழியாச் செல்வம் (அருள் செல்வம்) என்ற நிலையை எடுத்துக் கொண்டால் எச்செல்வம் இருந்தாலும் தைக் காக்க முடியும்.
3.ஞானம் இல்லை என்றால் செல்வத்தைக் காக்க முடியாது. செல்வத்தைக் காக்க அருள் ஞானம் நமக்குத் தேவை.
 
இதையெல்லாம் மனதில் வைத்து இந்த வாழ்க்கையில் குறை கூறும் வழக்கத்தை விடுத்து விட்டு குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று உணர்வினை வளர்த்துக் கொள்வோம்.
 
எங்கிருந்து எதனுடைய நிலைகள் வந்தாலும் வாழ்க்கையின் சந்தர்ப்பங்களில் குறைகள் ஏற்படுவது சகஜம்.
1.அந்தக் குறையை உற்று நோக்கி அதையே திரும்பத் திரும்ப எண்ணுவோம் என்றால்
2.நம்மை அறியாமலேயே அந்தக் குறையான செயல்களைச் செயல்படுத்தும் நிலையும்
3.நம்மை அறியாமலே தவறுகள் செய்யும் உணர்வுகளே வளர்ந்து விடுகின்றது.
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் மாறுதல் வேண்டும்.
 
குறையின் உணர்வுகள் வளர்ந்து விட்டால் இந்திரலோகத்திற்குள் இரண்யன் சென்று நம்மை நல்வழியில் செயல்படுத்தாத நிலையை உருவாக்குகின்றான் என்று சொல்வார்கள்.
 
சொர்க்கத்தை அடையும் உணர்வின் தன்மை நமக்குள் இருக்கும் பொழுது பிறருடைய குறைகளை நுகர்ந்து விட்டால் நம் காரியமே செயலற்றதாக ஆகி நமக்குள் குழப்ப நிலைகள் உருவாகி சிந்தித்துச் செயல்படும் சக்தியும் இழந்து துருவத்தின் ஆற்றலைப் பெறும் தகுதியை இழந்து விடுகின்றோம்…!”
 
இதைப் போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
 
அரும்பெரும் சக்தியை உங்களுக்குள் பதிவு செய்கின்றேன். ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன் இதன் வழி கொண்டு அந்த வித்தினை குரு காட்டி அருள் வழியில் நாம் பெறுவோம்.
1.இந்த வாழ்க்கையில் இனி பிறவி இல்லாத நிலை அடைவேன்.
2.அரும்பெரும் சக்தியான மகரிஷிகளின் அருள் சக்திகளை எனக்குள் சேர்ப்பேன்.
3.இந்த வாழ்க்கையை அருள் வழியில் நான் வாழ்வேன்
4.இந்த நிலையே எனது கடைசி எல்லை பிறவி இல்லா நிலை என்ற இந்த உணர்வுடன் வாழ்ந்து பழகுங்கள்.
 
உங்கள் எண்ணம் உங்களைக் காக்கும்.
 
செல்வங்கள் நிலைப்பதில்லை செல்வம் இருப்பினும் இந்த உடலின் உபாதைக் காலங்களில் கூட செலவழிப்பதற்கு அது பத்துவதில்லை. செல்வம் அதிகமாக இருப்பினும் உபாதைகள் அதிகரிக்கப்படும் பொழுது நல்ல உணவை உட்கொள்ள முடிவதில்லை…”
 
இதைப் போன்ற நிலைகளில் இருந்து விடுபட்டு இந்த பிறவிக் கடனை அகற்றி… இனி பிறவியில்லா நிலையை அடையும் நிலையினைச் செயல்படுத்துதல் வேண்டும்.
 
அது தான் கீதையில் நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய் என்று சொல்வது. நமது வாழ்க்கையில் அருள் ஒளியின் சக்தியை பெற வேண்டும் என்று நினைத்தால் அருள் ஒளியே நமக்குள் வளர்கின்றது…”
 
இல்லை இவன் ப்படி அவன் அப்படி அவன் ப்படி என்று குறை கூறிக் கொண்டே இருந்தால் குறையின் உணர்வு வளர்ச்சியாகி நோயாகி… நமக்குள் அதுவாகவே நாம் ஆகி விடுகின்றோம்.
 
நமக்குள் சீர்படும் செயலை இழந்து செயலற்ற நிலைகள் படும்பொழுது நம் தொழிலே குந்தகமாகி வாழ்க்கையிலே எதிர்ப்பின் உணர்வுகளாக நமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்கி மனிதனல்லாத நிலையை உருவாக்கும் நிலை வந்து விடுகிறது.
 
இதைப்போன்ற நிலையில் இருந்து நாம் விடுபடுதல் வேண்டும்.
1.அருள் ஒளி பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
2.அருள் ஞானம் பெற அனு தினமும் மறவாது இருத்தல் வேண்டும்.
 
அதற்குத் தகுதியான நேரம் இந்தக் காலை துருவ தியான நேரமே. நான்கிலிருந்து ஆறரைக்குள் விழித்த நேரத்திலே துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள் உங்கள் உடலில் உள்ள எல்லா அணுக்களுக்கும் அதைப் பெறச் செய்யத் தவறி விடாதீர்கள்.
 
1.அருள் ஒளியைப் பரப்புங்கள் அருள் வழியில் வாழ்க்கை வாழுங்கள்.
2.அருள் சொல்லையே சொல்லுங்கள் உங்கள் சொல்லைக் கேட்போர் தீமைகள் அகலட்டும்.
3.அருள் ஞான வழியில் நாம் வளருவோம்
4.நம் பார்வையில் அனைவரது தீமைகளையும் அகற்றுவோம் நம்மைப் பார்ப்போர் அனைவரது தீமைகளும் அகலட்டும்.
5.அருள் ஞான வழியில் நாம் வாழ்வோம் வளர்வோம்…!
 
உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்… தியானிக்கின்றேன் (ஞானகுரு).